search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய தரச் சான்றிதழ்"

    • தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேசியச் தரச்சான்றிதழை வழங்கி, மருத்துவக்குழுவினரை பாராட்டினார்.
    • கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை தினங்களில், 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த பேளூரில் இயங்கி வரும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 12-–ல் சென்னையில் நடந்த விழாவில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேசியச் தரச்சான்றிதழை வழங்கி, மருத்துவக்குழுவினரை பாராட்டினார்.

    இதனையடுத்து, பேளூர் சுகாதார வட்டாரத்தில் இயங்கி வரும் திருமனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அனைத்து அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி, தேசிய தரச்சான்றிதழ் பெற திருமனுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் முன் வந்தனர். இந்த சுகாதார நிலையம் 1982-–ம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து 40 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த சுகாதார நிலையத்தில், 2 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், ஒரு ரத்த பரிசோதகர், இரு சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த சுகாதார நிலையத்தில், நாளொன்றுக்கு சராசரியாக 100 பயனாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாரத்திற்கு இருமுறை நடைபெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை தினங்களில், 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர். ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ஜெமினி மற்றும் பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், மருத்துவ அலுவலர்கள் சிவா, சிமி, பேரின்பம், ராகுல், வெற்றிவேல் மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஒன்றிணைந்து, சுகாதாரத்துறை, அரசு சாரா நிறுவனங்கள், பெரு நிறுவனங்களை அணுகி, திருமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி புதுப்பித்தனர்.

    இந்த சுகாதார நிலையத்தை, கடந்த அக்டோபர் 18,19-–ம் தேதிகளில், புதுதில்லியில் இருந்து வந்த மத்திய அரசின் தேசிய தரச் சான்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, திருமனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதனால், திருமனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×