search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "memories"

    • நடிகர் வெற்றி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மெமரீஸ்’.
    • இப்படம் வருகிற 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெமரீஸ்'. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்க பார்வதி அருண் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.


    சிஜு தமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் வெற்றி பேசியதாவது, "எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள்,  கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி" என்று பேசினார்.


    இயக்குனர் ப்ரவீன் பேசியதாவது, "மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். இந்தப்படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்." என்று பேசினார்.


    இயக்குனர் ஷியாம் பேசியதாவது, "நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன்.  இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக்கொண்டார். வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள் நன்றி." என்று பேசினார்.

    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு தெண்டுல்கர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #AdelaideWin #India #SachinTendulkar
    மும்பை:

    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு தெண்டுல்கர், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) உள்பட முன்னாள் வீரர்கள் பலரும் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



    தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், வெற்றியுடன் கூடிய அருமையான தொடக்கத்தை கொடுத்து 2003-ம் ஆண்டில் அடிலெய்டு டெஸ்டில் பெற்ற வெற்றியை இந்திய அணியினர் நினைவுப்படுத்தி இருக்கிறார்கள். இந்திய அணியினருக்கு எனது பாராட்டுக்கள். இந்திய அணியினர் இந்த உற்சாகத்தையும், அழுத்தத்தையும் ஒரு போதும் விட்டுவிடக்கூடாது.

    இரு இன்னிங்சிலும் முக்கியமான கட்டத்தில் புஜாராவின் பேட்டிங் அருமையாக இருந்தது. 4 பந்து வீச்சாளர்களும் தங்களது பணியை அர்ப்பணிப்புடன் செய்து இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    நடிகை ஸ்ரீதேவியின் 55-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படத்துறை பிரிவினர் நடத்திய 2 நாள் விழாவில் போனி கபூர் உட்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். #SriDevi #BoneyKapoor
    புதுடெல்லி:

    தமிழகத்தில் சிவகாசி பகுதியில் பிறந்து உலக அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராதவிதமாக துபாயில் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு உலக அளவில் இருக்கும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தினர்.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 55-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை ஒட்டி, ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படத்துறை பிரிவினர் சார்பில் 2 நாள் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டது.

    ஸ்ரீதேவியின் இங்கிலீஸ் விங்கிலீஸ், மாம் போன்ற திரைப்படங்கள் இந்த கொண்டாட்டத்தின்போது திரையிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய நடனக்கலைஞரான சோனல் மன்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவி விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும், அவர் விட்டுச் சென்ற நினைவுகள் மூலமே தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    மேலும், தனது மனைவுக்கு நடத்தப்படும் இந்த விழாவை ஏற்பாடு செய்த அரசுக்கும், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும், நண்பர் அமர் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.



    தொடர்ந்து பேசிய அவர், தாம் ஸ்ரீதேவியை திரையில் பார்த்த முதல்நாளிலேயே காதல் வசப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவரை தொடர்ந்து சென்ற போது, அவரது அழகும், திறமையும் ஏற்படுத்தி இருந்த ஒளிவட்டம் தம்மை மிகவும் ஈர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதேவியின் இதயத்தை கவர 12 வருடங்கள் ஆனதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தற்போது ஸ்ரீதேவியின் பிரிவை தாமும் தம் பிள்ளைகளும் நன்கு உணர்வதாகவும், தற்போது பிள்ளைகள் மட்டுமே வாழ்வின் பலம் எனவும் போனி கபூர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.  #SriDevi #BoneyKapoor
    ×