search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuruvikulam"

    • திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் தெற்கு குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தெற்கு குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி, ஒன்றிய கவுன்சிலர் மணிமாலா சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் சுதா பிரபாகரன், சமூக ஆர்வலரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மாடசாமி, கல்வி மேலாண்மை குழு தலைவர் மைதிலி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரை மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டம் ம.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
    • அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ம.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 11-வது வார்டு கவுன்சிலர் மணிமாலா சுரேஷ், 17-வது வார்டு கவுன்சிலர் ராமலட்சுமி பாண்டியராஜ், 14-வது வார்டு கவுன்சிலர் வீரலட்சுமி செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

    கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. கவுன்சிலர்கள் ஒன்றிய குழு தலைவர் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், ஒன்றியத்தின் தென் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் ஒன்றிய குழு தலைவர் பகுதிகளில் பணிகள் தேர்வு செய்யப்படுவதாகவும் ஒன்றிய குழு தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், நிதிகள் முறையாக செலவு செய்யப்பட வில்லை என்றும், ஒன்றிய பொறியாளர் ரமேஷ் என்பவர் ஆலோசனையின்படி பணிகள் தேர்வு செய்யப்படுவதாகவும் கவுன்சிலர்களை கலந்து கொள்ளாமலும் விவாத த்திற்கு கொண்டுவராமலும் தீர்மானங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர். மேலும் ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூறினர்.

    ×