search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Fortunegiants"

    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் கோப்பையை கைப்பற்றியது. #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு நடைபெற்றது.
     
    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து குஜராத் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்கள் விரைவில் புள்ளிகளை குவிக்கத் தொடங்கினர். இதனால் முதல் பாதி முடிவில் 16 - 9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் குஜராத் வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்தனர்.



    ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், பெங்களூரு அணியினர் விஸ்வரூபம் எடுத்தனர். அந்த அணியின் பவன் ஷெராவத் அதிரடியாக ஆடினார். அவர் 25 ரெய்டுகளில் 22 புள்ளிகள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 

    இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணி 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்சுன் ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் சுற்றில் உ.பி. அணியை 38 -31 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #GujaratFortunegiants #UpYodha
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
     
    கடந்த 31ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் தபாங் டெல்லி மற்றும் உபி யோதா அணிகள் மோதின. இதில், உ.பி. யோதா அணி 45 - 33  என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதனால் உபி யோதா அணி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், உ.பி. யோதா அணி குஜராத் அணியை இன்று எதிர்கொண்டது. முதலில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    ஆனாலும், முதல் பாதியில் குஜராத் அணி 19 -14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, குஜராத் அணி வீரர்கள் இரண்டாவது பாதியிலும் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்துக்கு முன்னால் உ.பி. அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், குஜராத் அணி 38 - 31 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    முதல் தகுதிச்சுற்றுபோட்டியில் குஜராத் அணி பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddiLeague #GujaratFortunegiants #UpYodha 
    6-வது புரோ கபடி லீக் தொடரில் குஜராத் அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை தோற்கடித்து 17-வது வெற்றியை பதிவு செய்தது. #ProKabaddiLeague
    கொல்கத்தா:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 129-வது லீக் ஆட்டத்தில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் குஜராத் அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை தோற்கடித்து 17-வது வெற்றியை பதிவு செய்தது. குஜராத் அணி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.

    தனது கடைசி லீக்கில் ஆடிய பாட்னா அணி 22 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 11 தோல்வி, 2 ‘டை’ என்று 55 புள்ளிகள் பெற்றுள்ளது. ‘பி’ பிரிவில் பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் அடுத்த சுற்றை உறுதி செய்துள்ளன. மற்றொரு இடத்திற்கு பாட்னா பைரட்ஸ், உ.பி.யோத்தா (52 புள்ளி) இடையே போட்டி நிலவுகிறது.

    உ.பி.யோத்தா அணி தனது கடைசி லீக்கில் பெங்கால் வாரியர்சை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறது. இதில் உ.பி.யோத்தா அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். தோல்வி அடைந்தால் பாட்னா அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டும். #ProKabaddiLeague
    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை 47 - 37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ்அணி. #ProKabaddi #GujaratFortunegiants #HaryanaSteelers
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குஜராத் அணியினர் வீறு கொண்டு ஆடினர். இதனால் அரியானா அணி வீரர்களின் போராட்டம் வீணானது.

    இறுதியில், அரியானா அணியை 47 - 37 என்ற கணக்கில் குஜராத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அந்த அணியின் 14வது வெற்றி ஆகும். இதன்மூலம் ஏ பிரிவில் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது. #ProKabaddi #GujaratFortunegiants #HaryanaSteelers
    புரோ கபடி லீக் போட்டியில் குஜராத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய குஜராத் அணி தனது பத்தாவது வெற்றியை பெற்றதுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. #ProKabaddi
    அகமதாபாத்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. குஜராத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே குஜராத் அணியினர் சிறப்பாக விளையாடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 21 - 15 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் குஜராத் அணியினரின் கையே ஓங்கியது. ஆனாலும், குஜராத் அணிக்கு அரியானா அணி வீரர்கள் நெருக்கடி தந்தனர்.

    இறுதியில், குஜராத் அணி 40 - 31 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி பத்தாவது வெற்றியை பெற்றதுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. #ProKabaddi 
    புரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்திய குஜராத் அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
    லக்னோ:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி தபாங் அணியும், குஜராத் பார்ச்சுன் ஜயண்ட்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே குஜராத் அணி அபாரமாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் அந்த அணி 27 - 18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் குஜராத் அணி சிறப்பாக ஆடியது.

    இறுதியில், டெல்லி அணியை 45 -38 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணிக்கு கிடைத்த ஐந்தாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi 
    ×