search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Easter Attack"

    • உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஜூலை 12 க்கு முன்னதாக, சிறிசேனா ஜூன் 28 அன்று இழப்பீடு வழங்கினார்.
    • ஜூன் 30, 2024 முதல் 10 தவணைகளில் 8.5 மில்லியன் இலங்கை ரூபாயை செலுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை.

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் அன்று அங்குள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

    இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

    இதுதொடர்பான வழக்கில், கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றான ஈஸ்டர் தாக்குதலை தடுப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் இலங்கை ரூபாய் வழங்க வேண்டும் என அப்போதைய அதிபர் சிறிசேனாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், இலங்கை உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவிற்கு முன்னதாக, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் இலங்கை ரூபாயை முதல் தவணையாக வழங்கியுள்ளார்.

    உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஜூலை 12 க்கு முன்னதாக, சிறிசேனா ஜூன் 28 அன்று இலங்கை ரூபாய் 15 மில்லியனை இழப்பீடாக செலுத்தினார்.

    ஜூன் 30, 2024 முதல் 10 தவணைகளில் 8.5 மில்லியன் இலங்கை ரூபாயை செலுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.

    இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்த நிலையில், இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களில் தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்பட்டனர்.

    இலங்கை முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் கலவரம் வெடித்தது. சமூக வலைத்தளத்தில் வெளியான விரும்பத்தகாத பதிவால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பட்டது.



    இந்த நிலையில், பதற்றம் காரணமாக இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கி இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உள்பட 321 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக இலங்கை ராணுவ மந்திரி இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 



    இந்நிலையில், ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. அவ்வியக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘அமாக்’ இணையத்தளத்தில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast
    ×