search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drainage work"

    • மழை பெய்தாலும் சில மணி நேரங்களில் வடிய வைத்து விடுகிறோம்.
    • சென்னையில் 800 ஆக இருந்த தாழ்வான பகுதிகள் 37 ஆக தற்போது குறைந்து உள்ளன.

    சென்னை, நவ.5-

    சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் அவ்வப் போது பெய்து வரும் பருவ மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கா மல் இருப்பதற்காக எங்கெங்கு தண்ணீர் தேங்கும் என நினைக்கும் இடங்களில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    இதன் காரணமாக சென்னையின் சாலைகளில் தண்ணீர் தேங்குவதில்லை. மழை பெய்தாலும் சில மணி நேரங்களில் வடிய வைத்து விடுகிறோம்.

    புழல், ஆலந்தூர், அடையாறில் தேங்கிய மழைநீர் 1 மணிநேரத்தில் வடிய வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 326 சதுர கி.மீ. அளவில் வடிகால் பணி நடைபெற்றுள்ளன. சாலைகளில் பழுது ஏற்பட்டால் 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம். சென்னையில் 800 ஆக இருந்த தாழ்வான பகுதிகள் 37 ஆக தற்போது குறைந்து உள்ளன. மழை காரணமாக எதிர்பாராத நிலையை சமாளிக்கவும் மாநகராட்சி தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.
    • வாய்க்கால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சேத்–தி–யாத்–தோப்பு, ஆக.8-

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்கிறது. தற்–போது நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செ ய்து நிலக்கரி வெட்டிஎடுக்க என்.எல்.சி. முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சுரங் 2ல் இருந்து 60 மீட்டர் தூரத்தில் உள்ள பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    ஏனெனில் மழைக்காலங்களில் சுரங்த்திற்குள் தண்ணீர் புகுவதை தடுக்கவும், சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறு அமைப்பது அவசியம் என்று என்.எல்.சி. கருதிது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏற்கனவே 10½ கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறுக்கு வாய்க்கால் வெட்டப்படடுள்ளது. மீதமுள்ள 1½ கிலோ மீட்டர் தூரம் மட்டும் வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி, ஆதனூர், மும்முடிசோழகன் உளளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அந்த விளை நிலங்ளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி என்.எல்.சி. நிர்வாகம் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் பயிர்களை அழித்து புதிய பரவனாறுக்காக வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கியது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரவித்தாலும் கூட, பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 28-ந்தேதி என்.எல்.சி. அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், அன்றைய தினம் மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பணி தொடங்கி யது. முதலில் பகலில் மட்டுமே நடைபெற்று வந்த பணி தற்ேபாது இரவுபகலாக நடந்து வருகிறது. கம்மாபுரம் ஒன்றியம் ஆதனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    என்.எல்.சி. சுரங்க பணிக்காக அங்குள்ள சாலையை உடைத்து கடந்த சில மாதங்களாக வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதனால் அக்கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாய்க்கால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாலையை சீரமைத்து தருவதாகவும், மின்விளக்கு வசதி செய்து தருவதாகவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் செல்லங்கால் வடிகால் வாய்க்காலில் செடி கொடிகள் முட்புதர்கள் அடைத்து மழைநீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் ஒரே பகுதியில் தேங்கி நின்றது.
    • இதில் அங்காளன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் செல்லங்கால் வடிகால் வாய்க்காலில் செடி கொடிகள் முட்புதர்கள் அடைத்து மழைநீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் ஒரே பகுதியில் தேங்கி நின்றது.

    இது குறித்து பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து புதுவை பொதுப்பணி த்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் 15 லட்சத்து 7ஆயிரம்நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான தொடக்க பணி நடைபெற்றது.

    இதில் அங்காளன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்த வடிகால் வாய்க்காலுக்கு மறுபுறத்தில் கலித் தீர்த்தாள் குப்பம் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட அய்யனாரப்பன் கோவிலுக்கு பாதை இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு செல்வதற்கு மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் உள்ள பகுதியை கடந்து மறுக்கரை பகுதிக்கு சென்று சாமியை வழிபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கோயிலுக்கு செல்வதற்கு ஓடை பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு நேரில் சென்று பாலம் கட்டுவதற்கான ஆய்வு மேற்கொண்டார் நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சேகர் , இளநிலை பொறியாளர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் உள்ள ஏரி மற்றும் குளம் மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
    • மழை நீர் ஏரிப் பகுதிக்கு செல்லாமல் பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நின்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள ஏரி மற்றும் குளம் மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட மதகடிப்பட்டில் இருந்து சன்னியாசி குப்பம் ஏரிக்கு செல்லும் மழை நீர் வடிகால் வாய்க்கால் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.

    இதனால் மழை நீர் ஏரிப் பகுதிக்கு செல்லாமல் பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் கோரிக்கை அளித்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து புதுவை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் 10 லட்சத்து 53 ஆயிரம்நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான தொடக்க பணி இன்று நடைபெற்றது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூர் வாரும் பணியை தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சேகர், இளநிலை பொறியாளர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பூமி பூஜையை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • மாதா கோவில் வீதியில் ரூ.6.30 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் இணைப்பு சாலையில் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து வில்லியனூர் வடக்கு மாட வீதி வரை பழுதடைந்துள்ள யூ வடிவ வாய்க்காலை ரூ.43 லட்சம் செலவில் மறு கட்டமைக்கவும், வில்லியனூர் மாதா கோவில் வீதியில் ரூ.6.30 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த பணிகளுக்கான பூமி பூஜையை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலை வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜி, உதவி பொறியாளர் சீனுவாசன், இளநிலை பொறியாளர் சித்தார்த்தன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் சத்யநாராயணன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • உப்பளம் தொகுதி உடையார்தோட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் ஆதி திராவிடர் நலத்துறை பாட்கோ திட்டத்தின் கீழ் சிமெண்டு கான்கீரீட் சாலை மற்றும் எல்-வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
    • நிகழ்ச்சியின் போது பாட்கோ நிர்வாக இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி உடையார்தோட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் ஆதி திராவிடர் நலத்துறை பாட்கோ திட்டத்தின் கீழ் சிமெண்டு கான்கீரீட் சாலை மற்றும் எல்-வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியின் போது பாட்கோ நிர்வாக இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது அதிகாரிகளிடம் இப்பணிகளை 4 மாதத்திற்குள் முடித்து கொடுக்கும்படி கென்னடி எம்.எல்.ஏ. அறியுறுத்தினர். 

    • வாய்க்கால் மேம்படுத்தும் பணியை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • தி.மு.க. அவை தலைவர் ரவி, கிளை செயலாளர் செல்வம், சோழியன், சங்கரநாராயணன், காந்தி, பீட்டர், பாலாஜி, லாரன்ஸ், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உள்பட்ட நேதாஜி நகர் 2-ல் தாழ்வான சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் உள்ள அனைத்து வீதிகளிலும் சைடு வாய்க்கால் மேம்படுத்தும் பணியை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதை தொடர்ந்து, தாழ்வான பகுதியில் சாலை அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார். நேதாஜி நகர் 2-ல் அப்பகுதி மக்கள், எம்.எல்.ஏ.விடம் நீண்ட நாள் கோரிக்கையாக விடுபட்ட சாலை மற்றும் எல்-வடிவ சைடு வாய்க்கால் அமைக்கக் கோரி தேர்தல் பிரச்சாரத்தின் போது கேட்டுக் கொண்டனர். அப்போது அளித்த வாக்குறுதியின் பேரின் நேதாஜி நகர் 2-ல் வீதிகளில் விடுபட்டுள்ள வாய்க்கால்களையும், சாலைகளையும் மேம்படுத்தி தருகிறேன் என எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    பின்னர் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். இதில் தி.மு.க. அவை தலைவர் ரவி, கிளை செயலாளர் செல்வம், சோழியன், சங்கரநாராயணன், காந்தி, பீட்டர், பாலாஜி, லாரன்ஸ், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×