search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாய்க்கால் தூர்வாரும் பணி
    X

    தூர்வாரும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    வாய்க்கால் தூர்வாரும் பணி

    • புதுவையில் உள்ள ஏரி மற்றும் குளம் மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
    • மழை நீர் ஏரிப் பகுதிக்கு செல்லாமல் பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நின்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள ஏரி மற்றும் குளம் மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட மதகடிப்பட்டில் இருந்து சன்னியாசி குப்பம் ஏரிக்கு செல்லும் மழை நீர் வடிகால் வாய்க்கால் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.

    இதனால் மழை நீர் ஏரிப் பகுதிக்கு செல்லாமல் பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் கோரிக்கை அளித்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து புதுவை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் 10 லட்சத்து 53 ஆயிரம்நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான தொடக்க பணி இன்று நடைபெற்றது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூர் வாரும் பணியை தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சேகர், இளநிலை பொறியாளர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×