search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctors protest"

    • தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்ய உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆண்டிபட்டி:

    தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை யில் மகப்பேறு டாக்டர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்க வலியுறுத்தியும், அரசு மகப்பேறு டாக்ட ர்களை முகாம்களில் பங்கேற்க வைப்பதை தவிர்க்கவும்,

    மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அத்துமீறி நுழைந்து டாக்டர்கள் மற்றும் பேரா சிரியர்களை மரியாதை இல்லாமல் பேசிய மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தேனி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சங்கத் தலைவர் ஜெய் கணேஷ், செயலாளர் அரவாளி, பொருளாளர் பால கிருஷ்ணன், டாக்டர்கள் சிவா, பிரேமலதா, ருக்மணி, வனிதா, மகாலட்சுமி உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • தேசிய சுகாதார சேவை அமைப்பு அறிவித்த 5% சம்பள உயர்வை மருத்துவர்கள் ஏற்கவில்லை.
    • சம்பளத்தை 35% அதிகரிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கோரியுள்ளது.

    பிரிட்டனில் உள்ள மருத்துவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், இளநிலை மருத்துவர்கள் ஆவர். இவர்கள் ஜூலை 13ம் தேதி தொடங்கி 5-நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

    அதிக சம்பளம் கோரி நடக்கும் இப்போராட்டத்தில் பிரிட்டன் முழுவதும் 46000க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவர்கள் இணைவார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் உறுதி செய்துள்ளது. இப்போராட்டத்தால் மருத்துவ சேவைகள் முடங்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

    தேசிய சுகாதார சேவை அமைப்பு, சம்பள உயர்வாக 5% உயர்த்தி அறிவித்திருந்தும், பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் அதை நிராகரித்துவிட்டது. இந்தச் சலுகை மிகவும் குறைவு என்றும், இது நாட்டில் தற்போது நிலவி வரும் பணவீக்க உயர்வை ஈடுகட்டாது என்றும் மருத்துவர் அமைப்பு கூறியுள்ளது. ஆனால் அரசாங்கம் தனது சலுகையை நியாயமானது என்று கூறி வருகிறது.

    நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கும் குறைவான அளவிலேயே 15 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக சம்பளத்தை 35% அதிகரிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கோரியுள்ளது.

    சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து இளநிலை மருத்துவர்கள் நடத்தும் 4வது வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் இளநிலை மருத்துவர்கள் குழுவின் இணைத்தலைவர்களான டாக்டர். ராபர்ட் லாரன்சன் மற்றும் டாக்டர். விவேக் திரிவேதி ஆகியோர் இப்போராட்டம் குறித்து கூறுகையில், தேசிய சுகாதார சேவை அமைப்பு வரலாற்றில் இது மிக நீண்டதொரு வேலை நிறுத்தமாக அமையலாம் என்றனர். ஆனால், இது தேசிய சுகாதார சேவை அமைப்பின் வரலாற்றில் செல்ல வேண்டிய சாதனை அல்ல. நம்பகமான சலுகையை வழங்குவதன் மூலம் அரசாங்கம், இளநிலை மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினர்.

    முன்னதாக, பிரிட்டிஷ் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஃபில்பன்பீல்ட், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இளநிலை மருத்துவர்களுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டாரா என்பதை தெளிவுபடுத்துமாறு கூறியுள்ளார். இளநிலை மருத்துவர்களுக்கு குறைந்தளவே ஊதியம் வழங்கப்படுவதாக சுகாதார செயலாளர் ஒப்புக்கொண்ட பிறகும், 5% மட்டுமே சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக ஃபில்பன்பீல்ட் தெரிவித்தார்.

    தேசிய சுகாதார சேவை என்பது பிரிட்டனில் அரசு நிதியுதவி பெறும் சுகாதார அமைப்பாகும். இது 1.2 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தரமான இலவச சுகாதாரத்தை உறுதி செய்யவதே இந்த அமைப்பின் அடிப்படை கொள்கை. பிரேசில் நாட்டிற்கு பிறகு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் இரண்டாவது சுகாதார அமைப்பு இதுவாகும்.

    ஸ்காட்லாந்தில் இரண்டு ஆண்டுகளில் 14.4% சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சக பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதால் போராட்டம்.
    • திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில பதற்றமான சூழல் உருவாகியது.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சக பயிற்சி மருத்துவர் மீது தாக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

    மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில பதற்றமான சூழல் உருவாகியது.

    • நோயாளியின் உறவினர்களை கண்டித்து முதுநிலை மருத்துவர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை.

    கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவர் அபிஷேக்கை நோயாளியின் உறிவினர்கள் சிலர் தாக்கி உள்ளனர். மருத்துவர் அபிஷேப் நோயாளியின் உடல்நிலை குறித்து விவரித்துக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டிருக்கிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, நோயாளியின் உறவினர்களை கண்டித்து முதுநிலை மருத்துவர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு போலீசார் குவிந்துள்ளனர்.

    மேலும், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வௌியிட்டுள்ள கண்டனச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவர் அபிஷேக் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியின் உறவினர்களிடம் உடல்நிலை குறித்து விவரிக்கும்போது அவர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.

    மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகளை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

    அவர்களின் மீது மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டம் 2008 (HPA-2008)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறது.

    மேலும் மருத்துவமனையின் பணியாளர் ஒருவர் பணியின்போது வன்முறைக்கு உள்ளாகியிருக்கும் இவ்வேளையில் கே.எம்.சி நிர்வாகம் மெத்தனப்போக்குடன் இல்லாமல் உடனடியாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியவர் மீது மருத்துவமனை சார்பாக புகாரளிக்க முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யும் டி கேட்டுக் கொள்கிறோம்.

    கேரளத்தில் மருத்துவர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில் அத்தகைய நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கும்பொருட்டு வன்முறையாளர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து மருத்துவப்பணியாளர்களின் பணிப்பாதுகாப்பை உறுதிசெய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பணி நேரத்தை மாற்றியதற்க்கு எதிர்ப்பு
    • 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை வண்டி மேட்டு சாலையிலுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களுக்கான பணி நேரம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை முன்னாள் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். அப்போதிலிருந்து இது நடைமுறையில் உள்ளது.

    இந்த நிலையில் தற்போது மேற்கண்ட இந்தப் பணி நேரத்தை மாற்றி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை திரும்ப பெற கோரியும், பழைய நேரத்தை அறிவிக்குமாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க செயலாளர் மருத்துவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க துணைத் தலைவர் மருத்துவர் வேலு ரங்கநாதன், சங்க பொருளாளர் மருத்துவர் வெங்கடேஸ்வரன் உள்பட 40-க்கும் மேற்பட்ட ஆண் பெண் மருத்துவர்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ×