search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commercial Tax Department"

    • கட்டிடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் விருதுநகர் மற்றும் குடியாத்தத்தில் 8 கோடியே 94 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், தேனியில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    மேலும் சேந்தமங்கலம் மற்றும் பள்ளியாடி ஆகிய இடங்களில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார். மேலும், 7 புதிய வணிகவரி நிர்வாக கோட்டங்கள், 6 புதிய வணிகவரி நுண்ணறிவு கோட்டங்கள், 13 புதிய வணிகவரி மாவட்டங்கள் மற்றும் 2 புதிய பதிவு மாவட்டங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சட்ட விதிமுறைகளை கடைபிடித்துதான் ஆகவேண்டும்.
    • ஆண்டு வரி கணக்குகளை உரிய காலத்துக்குள் முறையாக தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னிந்திய பின்னலாடை உற்பத்தி யாளர் சங்க(சைமா) அரங்கில் நடந்த பின்ன லாடை துறையினர் சந்திப்பு கூட்டத்தில் வணிக வரித்து றை துணை கமிஷனர் முருக குமார் பேசியதாவது:- அதிகாரிகளானாலும் தொழில்முனை வோரா னாலும் சட்ட விதிமுறை களை கடைபிடித்துதான் ஆகவேண்டும். ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்ற ஆடை உற்பத்தியாளர்கள், மாதா ந்திர ஆண்டு வரி கணக்கு களை உரிய காலத்து க்குள் முறையாக தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

    ஆடிட்டர்கள் கவனித்து க்கொண்டாலும்கூட, நிறுவன உரிமையாளர்களும், வரி சார்ந்த அடிப்படை அம்சங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்கவேண்டும். ஒரு பொருள் அல்லது சேவையை பெறுபவர் மட்டுமின்றி அதனை வழங்குபவரும் முறையாக கணக்கு தாக்கல் செய்யவேண்டும். ஒரு தரப்பினர் கணக்கு தாக்கல் செய்யவில்லை யெ ன்றாலும், அது தொடர்பில் உள்ள மற்ற வருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, முறையாக ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வோருடன் மட்டும் வர்த்தக தொடர்புவைத்துக் கொள்ளவேண்டும். கணக்கு தாக்கல் செய்யாதது, முரண்பாடு உட்பட பல்வேறு காரண ங்களுக்காக வணிக வரித்து றையிலிருந்து நோட்டீஸ் வந்தால் பயப்பட வேண்டாம்.

    நோட்டீஸ் அனுப்ப ப்பட்டால் உங்கள் நிறு வனம் சார்ந்த ஆடிட்ட ர்களிடம் வழங்கியோ அல்லது வணிக வரித்துறை அலு வலகத்தை அணுகியோ தெரிவித்து விளக்கம் பெ றலாம். நோட்டீ ஸ்களுக்கு உரிய காலத்து க்குள் சரியான பதில் அளிக்கவேண்டும். கால நீட்டிப்பு கேட்டுப் பெற லாம். இவ்வாறு அவர் பேசினார்.

    • வணிக வரித்துறையின் 1,000 அலுவலர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கியது.
    • இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    வணிக வரித்துறையின் 1,000 அலுவலர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்ததன்படி, உதவியாளர்களாக உள்ள 1,000 பேருக்கும் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    உதவியாளர் பணியிடங்களில் பணியாற்றி வந்தவர்களுக்கு துணை வணிக வரி அலுவலர்களாக தரம் உயர்த்தப்படுகின்றனர். இதுபோன்று, பணி மூப்பு அடிப்படையில் உதவியாளர்களாக உள்ளவர்களுக்கு வணிக வரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வருவாயை பெருக்குவதற்காக வணிக வாரித்துறையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதவி உயர்த்தப்படும் 1,000 பேரில் 160 பேர் வணிக வரி அலுவலர்களாகவும், 840 பேர் துணை வணிக வரி அலுவலர்களாகவும் தரம் உயர்த்தப்படுகிறது. பதவி உயர்வு அளிக்கப்படுவதன் காரணமாக 1,000 பேருக்கும் ஊதியம் உயர்த்தப்படுகிறது என வணிக வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், புதிய பதவி உயர்வு அளிப்பதன் மூலம் அரசுக்கு ரூ.29.92 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

    • 10-க்கும் மேற்பட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்களை கடந்தே ஆடை தயாரிப்பு பூர்த்தியாகிறது.
    • திருப்பூரில் வணிக வரித்துறை அமலாக்க பிரிவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    ஜாப் ஒர்க் நிறுவனங்கள், இ-வே பில் உட்பட உரிய ஆவணங்களை தவறாமல் வைத்திருக்க வேண்டும்.ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வாகனங்களில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொண்டுசெல்லும்போது, இ-வே பில் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங், டையிங், ரைசிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, பவர்டேபிள் என பல்வேறுவகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள் உள்ளன.

    10-க்கும் மேற்பட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்களை கடந்தே ஆடை தயாரிப்பு பூர்த்தியாகிறது.கடந்த சில நாட்களாக திருப்பூரில் வணிக வரித்துறை அமலாக்க அதிகாரிகள் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    பின்னலாடை சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களில் உரிய ரசீதுகள் உள்ளனவா, இ-வே பில் உள்ளதா என ஆய்வு செய்கின்றனர். ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லும் சரக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) செயற்குழு உறுப்பினர் நடராஜ் கூறியதாவது:-

    திருப்பூரில் வணிக வரித்துறை அமலாக்க பிரிவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடை உற்பத்தி துறையினரை சந்தேக கண்கொண்டே அதிகாரிகள் பார்க்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லும் பின்னலாடை சரக்குகளை பிடித்து அபராதம் விதிக்கின்றனர்.பின்னலாடைகளை விற்பனைக்காக அனுப்பும்போது மட்டுமின்றி தயாரிப்புக்காக ஜாப்ஒர்க் நிறுவனங்கள் கொண்டுசெல்லும்போதும் வாகனங்களில் இ-வே பில், டெலிவெரி சலான் உள்ளிட்டவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆடைகள் விற்பனைக்காக எடுத்துச்செல்லப்படலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் ஜாப்ஒர்க் நிறுவன வாகனங்களை மடக்கி தணிக்கை செய்கின்றனர்.எனவே பவர்டேபிள் நிறுவனத்தினர் உஷாராக செயல்பட வேண்டும். துணி கட்டுக்கள் எடுத்துச்செல்லும்போதும் ஆடை தயாரித்து உற்பத்தி நிறுவனங்களிடம் வழங்க கொண்டுசெல்லும்போதும் கட்டாயம் இ-வே பில் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×