search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bakshish Singh"

    • பக்‌சிஷ் சிங் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத் தளத்தில் பரவியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பந்தலா கிராமத்தில் உள்ள குருத்வாரா வளாகத்திற்குள் பக்சிஷ் சிங் என்ற வாலிபர் நுழைந்து அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பின் சில பக்கங்களை கிழித்ததாக கூறி அவரை சிலர் கும்பலாக சரமாரியாக தாக்கினர்.

    படுகாயம் அடைந்த அவரை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

    பக்சிஷ் சிங் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக அவர் 2 ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது தந்தை லக்விந்தர் சிங் தெரிவித்தார். தனது மகனைக் கொன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசில் புகார் செய்தார்.

    அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பக்சிஷ் சிங் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத் தளத்தில் பரவியது. அதில் பக்ஷிஷ் கைகள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அமர்ந்திருப்பதும், ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்து தாக்குவதும் இடம் பெற்றுள்ளது.

    ×