search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness meeting"

    • மாவட்ட பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் புளோரன்ஸ் சிறப்புரையாற்றினார்.
    • ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறச்செய்தல், போதை பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் முத்துமுகம்மது தலைமை தாங்கினார்.

    ஆணையாளர் குமார் சிங், துணைத்தலைவர் சுல்தான் லெப்பை ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் புளோரன்ஸ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், கட்டாய கல்வி, குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு மாவட்ட பாதுகாப்பு குழுவை அணுகி அரசு வழிகாட்டுதலுடன் தத்தெடுப்பது, ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறச்செய்தல், போதை பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காயல்பட்டினம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • நோய் தாக்குதல் மற்றும் அதனை மேலாண்மை செய்யும் முறைகள் பற்றி ரஜினிமாலா எடுத்துரைத்தார்.
    • பூச்சி தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆல்வின் எடுத்து கூறினார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நெல் ஆராய்ச்சி நிலையம் அம்பையில் இருந்து வெளியிடப்பட்ட புதிய நெல் ரகம் அம்பை 21 பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ஆலங்குளம் வட்டாரம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நெல் ஆராய்ச்சி நிலையம், சிற்றாறு உப வடிநில பகுதி கிராமமான நல்லூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு அம்பை 21 ரகம் பற்றிய சிறப்பு பண்புகள் , உற்பத்தி செய்யும் முறைகளை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் எடுத்துரைத்தார். நோய் தாக்குதல் மற்றும் அதனை மேலாண்மை செய்யும் முறைகள் பற்றி ரஜினிமாலா எடுத்துரைத்தார். மேலும் பூச்சி தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆல்வின் எடுத்து கூறினார்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நாகேந்திரன் மற்றும் நீர்வள நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள் அருண்சசிக்குமார் , சுடலைஒளிவு ஆகியோர் செய்தனர். கூட்டத்தில் நல்லூர் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவுபடி காவல்துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் ஏதேனும் இருப்பது தெரியவந்தால் பார்சல் அனுப்புபவர் மற்றும் பெறுபவர்களின் விபரங்களை உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவுபடி காவல்துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூரியர், டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கான போதை பொருள் கடத்தல் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம், மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கூரியர் மற்றும் டிராவல்ஸ் மூலம் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் ஏதேனும் வருகிறதா எனவும், அதில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் ஏதேனும் இருப்பது தெரியவந்தால் பார்சல் அனுப்புபவர் மற்றும் பெறுபவர்களின் விபரங்களை உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தங்கள் நிறுவனங்களின் மூலம் அனுப்பப்படும் பார் சல்கள் சந்தேகத்திற்கிடமாக இருந்தாலும் அனுப்புபவரின் விபரங்களை காவல் துறைக்கு தெரிவிப்பதன் மூலம் சட்டவிரோதமாக போதை பொருள்களை கடத்துவதை தவிர்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா,புகையிலை போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக தனியாக அறிவிக்கப்பட்டுள்ள 83000 14567 மற்றும் 95141 44100 ஆகிய எண்களை தொடர்புகொண்டு காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அதே போன்று பொதுமக்களும் மேற்படி எண்களுக்கு தகவல் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாகவும், குற்றமில்லாத மாவட்ட மாகவும் உருவாக்கு வதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் டி.எஸ்.பி.க்கள் சாத்தான்குளம் அருள், திருச்செந்தூர் ஆவுடையப்பன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிவசுப்பு, மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், கூரியர் சர்வீஸ் மற்றும் டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×