search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attempted theft"

    • வீடு புகுந்து திருட முயற்சி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, பாலாற்றங்கரையோரம் உள்ள சத்யா நகர் ,ஓசி பெருமாள் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி டிவோட்டி (வயது 30). இவர் குழந்தைகளுடன் சத்யா நகரில் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் கொள்ளையன் ஒருவன் டிவோட்டியின் வீட்டின் மதில் சுவர் ஏறி உள்பக்கமாக குதித்தார். அப்போது தெருவில் இருந்த நாய்கள் கொள்ளையனை பார்த்து குறைத்தன.

    சத்தம் கேட்ட டிவோட்டி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கிருந்த கொள்ளையனை பார்த்து டிவோட்டி கத்தினார். இதனால் பதறிப்போன கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இது குறித்து டிவோட்டி விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் விருதம்பட்டு போலீசார் டிவோட்டியின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் தெருவில் பெரிய கம்புடன் கொள்ளையன் வருகிறான். அவனை பார்த்து குறைக்கும் நாய்களை கம்பால் விரட்டி விரட்டி தாக்கியுள்ளார். அதற்கு பிறகு வீடு புகுந்து திருட முயன்றுள்ளார். இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதி மக்கள் திக்..திக்... மன நிலையில் உள்ளனர்.

    • ஜன்னல் கதவை உடைத்து திருட முயற்சித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் வி.பி.நந்தவனம் தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(64). இவரது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வெளியூரில் உள்ளனர். இந்த நிலையில் இரவு 9 மணியளவில் பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டுள்ளது. தனது வீட்டின் மாடியில் இருந்து பழனிவேல் அங்கு பார்த்துள்ளார். அப்போது அந்த வீட்டின் மாடியில் இருந்து 3 மர்ம நபர்கள் கீழே குதித்து ஓடி உள்ளனர். திடீரென அவர்களின் 2 பேர் பழனிவேல் வீட்டின் ஜன்னல் கதவையும் உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பழனிவேல் சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் விருதுநகர் அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்த லோகநாதன் (21), 114 காலனியை சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரஞ்சித் குமாரை தேடி வருகின்றனர்.

    • கையும் களவுமாக பிடித்தனர்
    • போலீசில் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலைநகர் பகுதியை சேர்ந்த வர் கணேசன். இவரது மனைவி சாந்தலட்சுமி (வயது 37).

    இவர் தனது வீட்டில் இருந்தபோது, நேற்று அதி காலை அடையாளம் தெரி யாத நபர் ஒருவர் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் வராண்டாவில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம், மணி பர்ஸ் ஆகியவற்றை திருட முயன் றுள்ளார்.

    இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர்.

    அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் ஜோலார்பேட்டையை அடுத்தபால்னாங்குப்பம் கங் காநகர் பகுதியை சேர்ந்த அரு ணாச்சலம் என்பவரது மகன் ராஜேஷ் (37) என்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கர சன் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தார்.

    • வீட்டு பீரோவை உடைத்து அவர்கள் நகை, பணம் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி ச்சென்றனர்.
    • தாங்கள் மறைத்து வைத்திருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்கசங்கிலி கொள்ளையர் கண்ணுக்கு படாததால் அது தப்பியது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள போடுவார்பட்டி தோட்டத்துவீட்டில் வசித்து வருபவர் ராசு என்ற கருப்புசாமி(54). விவசாயி. இவரது மனைவி செல்வி(45). நேற்று இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வீட்டுமுன்பு கட்டப்பட்டிருந்த நாய்க்கு பிஸ்கட்டுகளை வாங்கி போட்டுவிட்டு உள்ளே சென்றனர். வீட்டு பீரோவை உடைத்து அவர்கள் நகை, பணம் எதுவும் உள்ளதா என சோதனையிட்டனர். ஆனால் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி ச்சென்றனர்.

    அதன்பிறகு கருப்புசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருந்தபோதும் தாங்கள் மறைத்து வைத்திருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்கசங்கிலி கொள்ளையர் கண்ணுக்கு படாததால் அது தப்பியது.

    வீட்டில் இருந்த செல்போ னை மட்டும் அவர்கள் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசில் கருப்புசாமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் முக்கிய தடயங்களை பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மின் ஒயர்களை சேதப்படுத்தி விட்டு சென்றனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நேற்று காலை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் வந்த போது பள்ளியின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சிய டைந்து உள்ளே சென்று பார்த்தபோது பள்ளியில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பொருட்கள் எதுவும் இல்லாததால் பள்ளியின் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாருக்கு செல்லும் மின் ஒயர்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

    இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போன் கடையில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.
    • போலீசார் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு சேவா நகரை சேர்ந்தவர் கனகராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 27). இவர் பெரம்பலூர் ரோவர் பள்ளி செல்லும் சாலையோரத்தில் உள்ள வாடகை கட்டிடத்தில் கடந்த 6 மாதங்களாக செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடை ஷட்டர் கதவின் 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ஏதும் திருடு போகாததால் நிம்மதி பெருமூச்சு விட்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


    • மர்ம நபர், வங்கி ஏ.டி.எம் மெஷினை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி திறக்க முயற்சி செய்து உள்ளார்.
    • இந்த சம்பவத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஏ.டி.எம் இயந்திரம் முற்றிலும் சேதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் (கரூர் வைஸ்யா) வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மை யத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர், வங்கி ஏ.டி.எம் மெஷினை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி திறக்க முயற்சி செய்து உள்ளார். ஏ.டி.எம் மெஷினை முழுமையாக உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துள்ளார்.

    தொடர்ந்து, அங்குள்ள இ-சர்வைலன்ஸ் கருவி மூலம் வங்கி மேலாளர் ஸ்ரீதருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஸ்ரீதர் வங்கி ஊழியர்கள் மற்றும் காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஏ.டி.எம் உடைக்கப்பட்டு இருந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஏ.டி.எம் இயந்திரம் முற்றிலும் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பாக வங்கி மேலாளர் ஸ்ரீதர் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. டிஜிட்டல் பேனர் மற்றும் ஸ்டூடியோ, காயில் கட்டும் கடை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது.

    அங்கு இருந்து ஆட்டோ டிரைவர்கள் சத்தம் கேட்டு சந் தேகத்திற்குரிய வகையில் சுற்றி இருந்த நபரை பிடித்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசார ணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

    இதனால் போலீசார் திருப்பத்தூர் டவுன் காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப் போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் டோல்கேட் தர்காநகர் பகுதியைச் சேர்ந்த பர்கத் (வயது 20) என்பதும், கடைகளில் திருட முயன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்கத்தை கைது செய்தனர்.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் உள்ளது. இங்கு பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.

    இதுகுறித்து பொறுப்பாளர் பாண்டியன் கடலாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கேட்டவரம்பாளையம் ஆவின் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தின் ஜன்னல் மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருக்கும் சி.சி.டி.வி. கேமராவை உடைக்கப்பட்டு அலுவலகத்தில் உள்ள முக்கிய பொருள்களையும் ஆவணங்களையும் திருட முயற்சி செய்துள்ளதாக புகார் செய்துள்ளார்.

    இதன் பெயரில் கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • சுவரில் துளையிட்டு துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பெரும்புலிப்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற் பார்வையாளராக நந்த குமார் பணிபுரிந்து வருகிறார்.

    விற்பனை யாளர்களாக தனஞ் செழியன் , ஏழுமலை ஆகியோர் வேலை பார்க்கிறார்கள் . நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும் டாஸ் மாக் கடை பூட்டி விட்டு வீட்டிற்கு சென் றுள்ளனர்.

    பின்னர் நேற்று மதியம் விற்ப னையாளர்கள் பேரும் ரண்டு கடையை திறக்க வந்த போது கடையின் பின் பக்கத்தில் மர்ம நபர் கள் துளையிட்டு திருட முயற்சிசெய்தது தெரியவந்தது . இத னையடுத்து விற்பனை யாளர்கள் கடையை ஆய்வு செய்த போது கடையில் 38 பீர் பாட்டில்கள் உடைத்து நொருக்கப்பட்டிருந் மதுபாட்டில்கள் திருட்டு போகவில்லை.

    இது தொடர்பாக மேற்பார்வையாளர் நந்தகுமார் அவளூர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • விழுப்புரம் அருகே லாரி டிரைவரிடம் செல்போன் திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சாரதி சாலையோரமாக நிறுத்திவிட்டு வேலை பார்த்து அசதியில் லாரியில் படுத்து உறங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே பேறங்கியூர் பகுதியைச் சேர்ந்தவர் சாரதி லாரி டிரைவர். இவர் நேற்று வழக்கம் போல் லாரியில் வேலைக்கு சென்றார். பின்னர் லாரியை விழுப்புரத்தில் இருந்து புதுவை செல்லும் வழியில் உள்ள ராகவன் பேட்டை அருகே சாலையோரமாக நிறுத்திவிட்டு வேலை பார்த்து அசதியில் லாரியில் படுத்து உறங்கினார். அப்போது அதிகாலை யில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் லாரியில் உறங்கிக் கொண்டிருந்த சாரதியிடமிருந்து செல்போனை திருட முயற்சித்தார்.

    அப்போது திடுக்கிட்டு எழுந்த டிரைவர் சாரதி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து நெடுஞ்சாலை துறை போக்குவது போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த நபர் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஸ்ரீகுமார் (வயது 19) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் விரட்டி சென்றனர்.
    • கண்காணிப்பு கேமராவில் பதிவு

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கம் வேந்தன் தெருவில் வசித்து வருபவர் சசிகலா. நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இரவு 11.30 மணி அளவில் இவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் ஒருவர் வந்தார். வீட்டிற்கு வெளியே நின்று இருபுறமும் பார்த்துவிட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தார்.

    சத்தம் கேட்டு கண்விழித்த சசிகலா குடும்பத்தினர் வாலிபர் வீட்டுக்குள் நுழைய முயன்றதை கண்டு அலறி கூச்சலிட்டனர். இதனால் சுதாரித்துக் கொண்ட மர்ம நபர் வெளியே குதித்து தப்பி ஓடினார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரும் அவரை விரட்டி சென்றனர். ஆனாலும் பிடிக்கமுடியவில்லை. இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர் .

    அதில் வாலிபர் சசிகலாவின் வீட்டு சுவரில் ஏறி குதிக்கும் காட்சிகளும் தப்பி ஓடியது பதிவாகியுள்ளது. வாலிபரின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனை வைத்து போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.

    சேண்பாக்கம் பகுதியில் இது போன்று தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளனர்.

    ×