என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜனவரி 28
நீங்கள் தேடியது "ஜனவரி 28"
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் ஜனவரி 4ம் தேதி நடைபெறும் என பொது செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #ThiruvarurBypoll #DMK
சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என திமுக பொது செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனவரி 4-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 2-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை வழங்கலாம்.
வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என்றும், விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ரூ. 1000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். #ThiruvarurBypoll #DMK
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. #ThiruvarurByElections #ElectionCommision
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3ம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10ம் தேதி என்றும், ஜனவரி 11 முதல் வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம் என்றும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி அன்று நடைபெறும். இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. #ThiruvarurByElections #ElectionCommision
×

X