search icon
என் மலர்tooltip icon

    ஸ்பெயின்

    • ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரினா சபலென்கா அரை இறுதிக்குள் நுழைந்தார்.

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.

    • 2 இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
    • ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியது.

    மாட்ரிட்:

    வடகிழக்கு ஸ்பெயினில் பார்சிலோனா நகரின் வடக்கே அமைந்துள்ள மோயா நகர விமான நிலையம் அருகே 2 இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியது. அந்த விமானத்தை முதலில் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்து தீயை அணைத்தனர். அந்த விமானத்தில் பயணித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

    அதன்பின்னர் நீண்ட தேடுதல் பணிக்கு பிறகு இரண்டாவது விமானத்தை கண்டுபிடித்தனர். அதில் பயணித்த 2 நபர்களும் உயிரிழந்தனர்.

    2 விமானங்களும் நடுவானில் மோதிக் கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பார்சிலோனா ஓபனில் இன்று இரவு இறுதிப்போட்டி நடைபெற்றது.
    • இதில் சிட்சிபாசை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை சந்தித்தார்.

    இதில் கார்லோஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சிட்சிபாசை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    • இரண்டாவது அரையிறுதியில் அல்காரஸ் இங்கிலாந்து வீரரை வென்றார்.
    • நாளை இரவு நடக்கும் இறுதிப்போட்டியில் சிட்சிபாசுடன் அல்காரஸ் மோதுகிறார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இங்கிலாந்தின் டான் ஈவன்சுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்காரஸ், சிட்சிபாசை எதிர்கொள்கிறார்.

    • முதல் அரையிறுதியில் சிட்சிபாஸ் இத்தாலி வீரரை வென்றார்.
    • நாளை இரவு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை சிட்சிபாஸ் 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை நீண்ட போராட்டத்துக்கு பின் முசெட்டி 7-5 என

    கைப்பற்றினார்.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சிட்சிபாஸ் 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை இரவு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

    • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, மெக்சிகோவின் சாண்டியாகோ - பிரான்சின் வாசலின் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • முதல் காலிறுதியில் சிட்சிபாஸ் ஆஸ்திரேலிய வீரரை வென்றார்.
    • நாளை நடைபெறும் அரையிறுதியில் இத்தாலி வீரரை எதிர்கொள்கிறார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற இருந்த இரண்டாவது காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் காயம் காரணமாக விலகியதால், சக நாட்டு வீரர் லாரன்சோ முசெட்டி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதனால் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியை சிட்சிபாஸ் மோதுகிறார்.

    • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டி நடந்தது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், நேற்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த இயோ ஜியா மின்னுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 24-22, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தோனேசிய வீராங்கனையுடன் பி.வி.சிந்து மோதுகிறார்.

    • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, டென்மார்க்கைச் சேர்ந்த மியா பிளிச்பெல்டுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, இந்தோனேசியாவைச் சேர்ந்த வர்தானியுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
    • 25 வருடங்களாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்த மனைவிக்கு நஷ்ட ஈடு.

    ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் இவானா என்பவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தரும்படி நீதிமன்றத்தை நாடினார்.

    அவர் அங்கு தாக்கல் செய்த மனுவில், "வீட்டு வேலைகள் செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும் இதனால் தனக்கு விவாகரத்துடன் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவர் 25 வருடங்களாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்ததற்கு ரூ.1.75 கோடி அளிக்குமாறு கணவனுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த ஓட்டலுக்கு சென்ற பிரிசிலா மற்றும் டுமித்ரு அங்கு அறை எடுத்து தங்கினர்.
    • ஓட்டலின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பிரிசிலா மற்றும் டுமித்ரு திருட்டு அம்பலமானது.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கேசர்ஸ் நகரில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் 19-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்புடைய 'ஒயின்' மதுபான பாட்டில் உள்பட பல பழமையான 'ஒயின்' மதுபான பாட்டில்கள் ரகசிய அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் மெக்சிகோ நாட்டின் முன்னாள் அழகியான பிரிசிலா லாரா குவேரா என்பவர் தனது காதலர் கான்ஸ்டன்டின் கேப்ரியல் டுமித்ருவுடன் சேர்ந்து ஸ்பெயின் ஓட்டலில் இருந்து, பழமையான 'ஒயின்' மதுபான பாட்டில்களை திருட திட்டம் தீட்டினார். இதற்காக தனது காதலருடன் 3 முறை அந்த ஓட்டலுக்கு சென்று, திருட்டுக்கு ஒத்திகை பார்த்தார்.

    இறுதியாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த ஓட்டலுக்கு சென்ற பிரிசிலா மற்றும் டுமித்ரு அங்கு அறை எடுத்து தங்கினர்.

    பின்னர் நள்ளிரவில் ஓட்டலின் வரவேற்பு அறைக்கு சென்ற பிரிசிலா, அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் தனக்கு உணவு தயார் செய்து தரும்படி வற்புறுத்தினார். முதலில் மறுத்த அந்த ஊழியர் பின்னர் உணவை தயார் செய்ய சமயலறைக்கு சென்றார்.

    அந்த சமயத்தில் டுமித்ரு வரவேற்பு அறையில் இருந்து, மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த ரகசிய அறையின் சாவியை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார்.

    ஆனால் அங்கு சென்ற பின்தான் தவறான சாவியை எடுத்து வந்தது தெரிய வந்தது. மீண்டும் வரவேற்பு அறைக்கு சென்ற ஊழியர் உணவுடன் அங்கு வந்தார். பின்னர் டுமித்ரு சைகை காட்ட அதை புரிந்து கொண்ட பிரிசிலா ஓட்டல் ஊழியரிடம் கனிவாக பேசி தனக்கு மேலும் உணவு வேண்டுமென கூறி அவரை சமையலறைக்கு அனுப்பினார்.

    பின்னர் டுமித்ரு சரியான சாவியை எடுத்துக்கொண்டு ரகசிய அறைக்கு சென்றார். அங்கு 19-ம் நூற்றாண்டின் மதுபாட்டில் உள்பட ரூ.13 கோடி மதிப்புடைய 45 மதுபாட்டில்களை பெரிய பையில் போட்டு தனது அறைக்கு எடுத்து சென்றார்.

    பின்னர் மறுநாள் காலை எதுவும் நடக்காததுபோல் இருவரும் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு சென்றனர். இதனிடையே வழக்கம் போல் மதுபாட்டில்களை சரிபார்ப்பதற்காக ஊழியர்கள் ரகசிய அறைக்கு சென்றபோது மதுபாட்டில்கள் திருடுபோனது தெரியவந்தது.

    ஓட்டலின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பிரிசிலா மற்றும் டுமித்ரு திருட்டு அம்பலமானது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு வங்கி கொள்ளைக்கு இணையாக நேர்த்தியாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த திருட்டு சம்பவம் அப்போது சர்வதேச பத்திரிகைகளில் தலைப்பு செய்தியானது.

    இதையடுத்து, நாட்டை விட்டு தப்பி ஓடிய பிரிசிலா மற்றும் டுமித்ருவை சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஸ்பெயின் தேடியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரேஷியாவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஸ்பெயினுக்கு நாடு கடத்தப்பட்டு, வழக்கு விசாரணையை எதிர்கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை கேசர்ஸ் நகர கோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்தது. விசாரணையின் முடிவில் பிரிசிலாவுக்கு 4 ஆண்டுகளும், டுமித்ருவுக்கு 4½ ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவர்கள் இருவரும் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு ரூ.6½ கோடி இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    ×