என் மலர்
அமெரிக்கா
- விமானம் ஹவாய் நோக்கி புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.
- சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் லூயிஸ்வில் விமான நிலையம் அருகே சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
UPS ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம், லூயிஸ்வில் விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது.
விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார்.
- கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார்.
எந்த சாட்சியமும் இல்லாத நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு அவர் குற்றவாளி என கடந்த காலங்களில் 2 முறை தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் 43 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் குற்றவாளி அல்ல என புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த மாதம் விடுவிக்கப்பட இருந்த நிலையில், 20 வயதில் சுப்பிரமணியத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் விநியோகக் குற்றச்சாட்டை காரணம் காட்டி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.
இந்தநிலையில், அமெரிக்காவில் நாடுகடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி, சுப்ரமணியத்தை நாடு கடத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
குடியேற்ற வழக்குகளுக்கான மேல்முறையீட்டு வாரியம், இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் வரை அவர் நாடு கடத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுப்ரமணியம் ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அவரிடம் நிரந்தர அமெரிக்க குடியுரிமை இருந்தபோதிலும் அவரை நாடு கடத்தி டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி டிக் செனி.
- ஜார்ஜ் புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தில் துணை அதிபராக இருந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84)
இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம் ஆண்டு வரை ஜார்ஜ் புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தில் துணை அதிபராக இருந்தார்.
வெள்ளை மாளிகையின் தலைமை தளபதி உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
இந்நிலையில், நிமோனியா மற்றும் இதயம் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டிக் செனி நேற்று காலமானார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.
- கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும் போட்டியிடுகிறார்கள்.
அமெரிக்காவில் முன்கூட்டியே ஓட்டளிக்கும் நடைமுறை இருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் அந்த நகரத்துக்ககு குறைந்தபட்ச நிதியைத் தவிர, மீதமுள்ள நிதியை நான் நிறுத்துவேன்.
ஏனென்றால் ஒரு கம்யூனிஸ்ட் தலைமையில் இருந்தால் இந்த சிறந்த நகரம் மோசமாகிவிடும். அந்த நகரத்தால் வெற்றி பெறவோ அல்லது உயிர் வாழவோ முடியாது.
மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் பொருளாதார, சமூக பேரழிவை சந்திக்கும். ஒரு அதிபராக, கெட்டது நடந்து பிறகு அங்கு நல்ல பணத்தை அனுப்ப நான் விரும்பவில்லை. ஏனென்றால் தேசத்தை நடத்துவது எனது கடமை.
மம்தானி திறமையானவர் இல்லை. உலகின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக அவரை கொண்டுவர முடியாது. நாம் இதையும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
- நீங்கள் அவர்களுடன் விளையாட முடியாது.
- வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்றார்.
அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், இருவரில் யாரை சமாளிப்பது மிகவும் கடினம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், "அவர்கள் இருவரும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான தலைவர்கள், அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. நீங்கள் அவர்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுடன் விளையாட முடியாது." என்று தெரிவித்தார்.
அதே நேர்காணலில், எட்டு போர்களை நிறுத்த முடிந்ததாக கூறிய டிரம்ப், உக்ரைன் போரை தன்னால் மட்டும் நிறுத்த முடியவில்லை, ஆனால் அது விரைவில் நடக்கும் என்று தெரிவித்தார்.
தனக்கு புதினுடன் நல்ல உறவு உள்ளது என்றும் அதனால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவது மிகவும் எளிதானது என்று நினைத்தது தவறு என்று டிரம்ப் கூறினார்.
மேலும் அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடந்த திட்டமிட்டுள்ளது குறித்து பேசிய டிரம்ப், ரஷிய சோதனைகளை நடத்துவதாக அறிவித்துள்ளது, வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.
பாகிஸ்தானும் சோதனை செய்கிறது. சோதனை செய்யாத ஒரே நாடு நாங்கள்தான். அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
பேட்டியில், சீனா, ரஷியா ஆகியவை அணு ஆயுதத்தை சோதனை செய்யவில்லை என்றும் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் டிரோன் உள்ளிட்ட உபகரணங்களை தான் சோதனை செய்வதாக நிருபர் கூறினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், அவை ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்கின்றன அவை வெளியே கூறப்படுவதில்லை என தெரிவித்தார்.
- ஒண்டாரியோ மாகாண அரசு அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
- கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்தார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தினார். இதை சரி செய்ய இரு நாடுகள் இடையேயும் வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதற்கிடையே கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ இன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
1987 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஒரு உரையில், வரிகள் ஒவ்வொரு அமெரிக்க தொழிலாளி மற்றும் நுகர்வோரையும் பாதிக்கும் என்றும், கடுமையான வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்றும் பேசியிருந்தார்.
இந்த வீடியோவை இணைத்து கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
ரொனால்ட் ரீகனின் உரை தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், வீடியோவை பயன்படுத்த தங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை கூறியது.
இதற்கிடையே பொய்களை பரப்புவதாக கூறி டிரம்ப், கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்தார்.
இந்நிலையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்தார்.
இந்நிலையில், கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிரம்ப், "கனடா அதிபர் மார்க் கார்னி என் நல்ல நண்பர்தான். கனடா எனக்கு மிகவும் பிடிக்கும். கனடா வெளியிட்ட போலியான விளம்பரம் எனக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்தார்.
- நைஜீரியா அரசுக்கு அமெரிக்காவின் உதவிகள் நிறுத்தப்படும்
- நைஜீரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், நைஜீரியா அரசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கிறிஸ்தவர்களை கொன்று குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், உதவிகள் நிறுத்தப்பட்டு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- 2014 ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றி எலான் மஸ்க் பேசி வருகிறார்
- பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெரிசல் அதிகரித்து பயணத்தை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் பயணத்தையும் சலிப்படைய செய்கிறது.
எனவே, பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
இந்நிலையில், 2025ம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த டெமோ நிகழ்ச்சி வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றி எலான் மஸ்க் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்படியே தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும்.
- 1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த அக்டோபர் 1 முதல் மூடப்பட்டது.
அக்டோபர் மாத இறுதி வரை அரசாங்க நிதியுதவி மற்றும் ஆண்டு இறுதியில் காலாவதியாகவுள்ள மத்திய சுகாதார மானியங்களை நீட்டிப்பது உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட மசோதாவைத் தடுக்க குடியரசுக் கட்சியினர் வாக்களித்தனர். இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 31 நாட்களாக தீர்வு எட்டப்படாமல் பணி நிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இந்த பணிநிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் இதை மதிப்பிட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 62,149 கோடிக்கும் அதிகமாகும்.
பணிநிறுத்தம் இப்படியே தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் என பட்ஜெட் அலுவலகம் எச்சரித்துள்ளது.
1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த சமயம் 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம்(CBO) என்பது அமெரிக்க காங்கிரஸ்(பாராளுமன்றத்துக்கு) பட்ஜெட் மற்றும் பொருளாதாரம் தொடர்பான மதிப்பீடுகளை வழங்கும் கட்சி சார்பற்ற சுயாதீனமான கூட்டாட்சி நிறுவனம் ஆகும்.
- சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.
- இதனால் நியூயார்க் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தன. சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. இதனால் நியூயார்க்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளம் சூழ்ந்து சேதத்தை சந்தித்தன. பேருந்து படிக்கட்டு வாயிலாக உள்ளே தண்ணீர் புகுந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சீன பொருட்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்தார்.
- அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பரஸ்பர வரி விதிப்புகள், அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சீனப் பொருட்கள் மீதான வரியை டிரம்ப் 10% குறைத்துள்ளார். இதன்மூலம் 57% ஆக இருந்த வரி தற்போது 47% ஆக குறைந்துள்ளது.
- அமெரிக்கா மற்ற எந்த நாட்டையும் விட அதிக அளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது.
- அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் ரஷ்யா இரண்டாமிடத்தில் இருக்கிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
1992 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 33 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்கா அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளவுள்ளது.
இதனிடையே டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்கா மற்ற எந்த நாட்டையும் விட அதிக அளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. என்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்களை புதுப்பித்ததால் இது சாத்தியமானது
அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் ரஷ்யா இரண்டாமிடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. ஆனால் இன்னொரு 5 ஆண்டுகளில் சீனாவிடமும் சரிசமமான ஆயுதங்கள் இருக்கும்
மற்ற நாடுகளின் பரிசோதனை திட்டங்களை கருத்தில் கொண்டு, நம்முடைய அணு ஆயுதங்களை சம அளவில் பரிசோதிக்க 'Department of War'க்கு வழங்குகிறேன். இது உடனடியாக தொடங்கும்" என்று தெரிவித்துள்ளார்.






