இந்தியா- பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்..மீண்டும் டிரம்ப்

பிரதமர் மோடி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறேன்.இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் 2 நாட்களில் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்தியா- பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்..மீண்டும் டிரம்ப்
Published on

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்படவிருந்த ஒரு மிகப்பெரிய போரைத் தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

பேட்டி ஒன்றில் பேசிய அவர், தெற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலில், அணு ஆயுத பலம் கொண்ட இரண்டு அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் மூளும் அபாயம் இருந்ததாகவும், தனது தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் இரு நாடுகளின் தலைவர்கள் (பிரதமர் மோடி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்) உடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதாகவும், அதன் மூலம் இரு தரப்பையும் அமைதிப்படுத்த முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை அவர் ஏற்கனவே பலமுறை பொது மேடைகளில் கூறியிருந்தாலும் இந்தியா அதை மறுத்து வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் நடைவடிக்கையால் பாகிஸ்தான் - இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் 2 நாட்களில் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.  

X

Maalai Malar
www.maalaimalar.com