என் மலர்
நீங்கள் தேடியது "Trump tax"
- 2025-26-ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது
2025-26-ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது.
இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் நிப்டி 178 புள்ளிகள் சரிந்து 23,341 ஆகவும், சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து 76,878 ஆகவும் வர்த்தகமானது.
காலை 10. 30 நிலவரப்படி நிப்டி 23,292.25 புள்ளியாகவும் சென்செக்ஸ் 76,511.96 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவை கண்டது.
மதியம் 12.15 மணி நிலவரப்படி நிப்டி 23,240 புள்ளியாகவும் சென்செக்ஸ் 76,269 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவை கண்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில் உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.
அங்காரா:
துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 மடங்கு உயர்த்தியுள்ளார்.
இதனால் துருக்கியின் பணமான ‘லிரா’ அமெரிக்காவின் ‘டாலர்’ மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது 13 சதவீதம் குறைந்துள்ளது.

இதற்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு 2 நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் என வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் அமெரிக்காவின் வரி உயர்வு முடிவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.






