என் மலர்
உலகம்
- பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 6 வங்களில் 13 ஆயிரம் கோடி மோசடி.
- கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான மெஹுல் சோக்சி 2018 முதல் 2022 வரை பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 6 வங்கிகளிடம் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது.
மெஹுல் சோக்சிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டதும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். அவர் பெல்ஜியத்தில் இருப்பது தெரியவந்தது இதனால் அவரை கைது, இந்தியாவிற்கு நாடு கடத்தும்படி சிபிஐ பெல்ஜியம் அரசுக்கு வேண்டுகோள் வைத்தது. அவரது வழக்கு தொடர்பான ஆவணங்களை பெல்ஜியத்திற்கு வழங்கியது.
இந்த நிலையில்தான் பெல்ஜியம் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் பலமுறை ஜாமீன் கேட்டும், நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை.
இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அவரை கைது செய்ததற்கும், இந்தியாவுக்கு நாடு கடத்தல் கோரிக்கையும் செல்படியானதாகும் என உத்தரவிட்டுள்ளது. என்றபோதிலும், அப்பீல் செய்ய வாய்ப்புள்ளதால், உடனடியாக நாடுகடத்த சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.
மெஹுல் சோக்சி நீதிமன்றத்தில் 2017ஆம் அண்டு நவம்பர் மாதம் ஆண்டிகுவா அண்டு பார்படா குடியுரிமை பெற்ற பிறகு, டிசம்பர் 14, 2018-ல் இந்தியாவின் குடியுரிமையை திருப்பி கொடுத்துவிட்டேன் எனத் தெரிவித்தார்.
- இடைக்கால அரசு அரசியல் புதிய சாசனத்தில் கையெழுத்திட்டது.
- தங்களது கவலைகளை தீர்த்து வைக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கோபம்.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசு இன்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தேசிய பாராளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர்
அப்போது மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைத்தனர்.
புதிய சாசனம் குறித்த தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை என்ற கோபத்தில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஷேக் ஹசீனாவை வெளியேற்ற காரணமாக இருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தற்காலிக கூடாரங்களும் சேதப்படுத்தப்பட்டன. பாதுகாப்பிற்கு நின்றிருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக திடீரென வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலமானார்.
- ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே நிலநடுக்கம்.
- முதற்கட்ட தகவலில் உயிரிச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் கந்துட் மாகாணத்தில் இருந்து தென்கிழக்கே 46 கி.மீ. தொலைவில், 10 கி.மீ, ஆளத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக அறவிக்கப்பட்டுள்ளது.
கந்துட் மாகாணம் ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துகள் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 2,200 பேர் உயிரிழந்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 4ஆம் தேதி 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்து. தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு அதிக சேதத்தை ஏற்படுத்தியது.
- நன்கு நீச்சல் தெரிந்த ஜூபின் கார்க் நீரில் மூழ்கி இறந்தது சாத்தியமில்லை என்று குற்றம் சாட்டினார்
- நெருங்கிய உறவினரான சந்தீபன் கார்க்கை அசாம் காவல்துறை கைது செய்து விசாரித்து வந்தது.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது. மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியும் இசைக்குழு உறுப்பினருமான சேகர் ஜோதி கோஸ்வாமி, நன்கு நீச்சல் தெரிந்த ஜூபின் கார்க் நீரில் மூழ்கி இறந்தது சாத்தியமில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.
ஜூபின் கார்க் இசைக்குழுவை சேர்ந்த டிரம்மர் மற்றும் அவரின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் நெருங்கிய உறவினரான சந்தீபன் கார்க்கை அசாம் காவல்துறை கைது செய்து விசாரித்து வந்தது.
ஜூபின் இசை நிகழ்ச்சியை நடத்த சிங்கப்பூர் சென்றபோது சந்தீபன் அவருடன் இருந்தார். அவர் உயிரிழந்த சமயத்திலும் சந்தீபனும் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூபின் கார்க் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஜூபின் கார்க் அவர்களின் மரணச் சூழல் குறித்து இணையத்தில் பரவி வரும் ஊகங்கள் மற்றும் தவறான தகவல்கள் குறித்து சிங்கப்பூர் காவல் படைக்கு (SPF) தெரியவந்துள்ளது. கார்க் மரண வழக்கு தற்போது சிங்கப்பூர் காவல்துறையின் விசாரணையில் உள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது மரணத்தில் எந்தவிதமான சந்தேகப்படும்படியான சதி எதுவும் இல்லை என்று காவல்துறை கருதுகிறது. காவல்துறையின் முழுமையான விசாரணை முடிய மேலும் மூன்று மாதங்கள் வரை ஆகலாம். விசாரணை முடிந்ததும், அதன் முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளது.
- இன்று அதிபர் டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ளார்.
- தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
ஐரோப்பாவின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சிப்பது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவில்லாமல் உக்ரைன் - ரஷியா போர் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த போர் உக்ரைனில் மிகப்பெரிய அளவிலான மக்களின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது.
ரஷியாவுக்கு எதிரான பொருளாதர தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. ரஷியாவுக்கு சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பாக பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தன.
குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ ரஷிய அதிபர் புதின் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்கா சென்று நேரில் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. புதின் போரை தேவையில்லாமல் நீட்டித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இன்று அதிபர் டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ள நிலையில் முன்னதாக புதின், டிரம்புடன் போனில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையே இன்றைய சந்திப்பில் டிரம்ப் இடம் தங்களுக்கு நீண்டதூரம் பாய்ந்து தாக்கும் Tomahawk ஆயுதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷிய அதிபர் புதினும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நேருக்கு நேர் சந்தித்து போரை முடிவுக்கு கொண்டுவருவத்து குறித்து விவாதிப்பார்களா என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கரோலின் லெவிட், "அது சாத்தியமானது தான் என்று அதிபர் டிரம்ப் நினைக்கிறார். அவ்வாறு நடப்பதை அவர் நிச்சயம் விரும்புவார்" என்று தெரிவித்தார்.
- விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
- விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
மிச்சிகன்:
அமெரிக்கா மிச்சிகனில் உள்ள பாத் டவுன்ஷிப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகள் உயிர் இழந்தனர்.
விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- ராணுவ மந்திரி பீட் ஹெக்செத் தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார்.
- நடுவானில் சென்றபோது அந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
லண்டன்:
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா சார்பில் ராணுவ மந்திரி பீட் ஹெக்செத்தும் கலந்துகொண்டார். அதன்பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார்.
இந்நிலையில், நடுவானில் சென்றபோது அந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் விமானி தெரிவித்தார்.
அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்த விமானம் இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் பீட் ஹெக்செத் உள்பட அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர். விமானியின் சாமர்த்தியத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது.
- கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஒட்டாவா:
கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார்.
கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த ஜூன் மாதம் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது
தொடர்ந்து ஆகஸ்ட் மாதமும் இந்த ஓட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக கபில் சர்மா ஓட்டலில் மீண்டும் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குல்வீர் சித்து, கோல்டி தில்லோன் உள்ளிட்ட குற்றவாளி குழுக்க்கள் பொறுப்பேற்றுள்ளன.
இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தான் இராணுவ தளங்களை அழித்ததாக ஆப்கானிஸ்தான் கூறியது.
- பீரங்கிகள் தங்களுக்கு சொந்தமானவை அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆபகானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடந்த வாரம் எல்லையில் ஏற்பட்ட சண்டை நேற்று மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றிய பீரங்கிகளை ஆப்கானிஸ்தான் தெருக்களில் தாலிபான்கள் ஓட்டிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானுடனான சண்டையின் போது ஆயுதங்கள் மற்றும் டாங்கிகளை கைப்பற்றியதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபுல்லா முஜாஹித் முன்னதாக தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் இராணுவ தளங்களை அழித்ததாக ஆப்கானிஸ்தான் கூறியது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் கூற்றை பாகிஸ்தானும் மறுத்துள்ளது. வீடியோக்களில் காணப்படும் பீரங்கிகள் தங்களுக்கு சொந்தமானவை அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், தாலிபான்கள் எங்கிருந்தோ மலிவாக வாங்கிய டாங்கிகளைக் காட்சிப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.
- சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.
- பாகிஸ்தான் 103வது இடத்திலும், வங்கதேசம் 100வது இடத்திலும், நேபாளம் 101வது இடத்திலும், இலங்கை 98வது இடத்திலும் உள்ளன.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.
சமீபத்தில் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 பட்டியலில் இந்தியா 85வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 80வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை ஐந்து இடங்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்க நாடான மவுரிட்டானியாவும் இந்தியாவுடன் 85வது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது விசா இல்லாமல் 57 நாடுகளுக்கு பயணிக்க முடியும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 62 ஆக இருந்தது. விசா இல்லாமல் பயணியக்கூடிய நாடுகளில் இந்தோனேசியா, பூட்டான், மாலத்தீவு,தாய்லாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.
அதன் பிறகு, தென் கொரியா (190 நாடுகள்) இரண்டாவது இடத்தையும், ஜப்பான் (189 நாடுகள்) மூன்றாவது இடத்தையும் பிடித்தன. ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்தன.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 103வது இடத்திலும், வங்கதேசம் 100வது இடத்திலும், நேபாளம் 101வது இடத்திலும், இலங்கை 98வது இடத்திலும் பூட்டான் 92வது இடத்திலும் உள்ளன.
ஆப்கானிஸ்தான் உலகின் பலவீனமான பாஸ்போர்ட் உடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் குடிமக்கள் 24 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
- ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அவர் எனக்கு உறுதியளித்தார்.
- பிரதமர் மோடி டிரம்ப்-ஐ கண்டு அஞ்சுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், ஆமாம், நிச்சயமாக. அவர் (பிரதமர் மோடி) என்னுடைய நண்பர். எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். அது ஒரு பெரிய நிறுத்தம். இப்போது நாம் சீனாவையும் அதே காரியத்தைச் செய்ய வைக்க வேண்டும்..." என்று தெரிவித்தார்.
முன்னதாக சர்வதேச தடைகள் இருந்தபோதிலும் ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்த நிலையில் தற்போது டிரம்ப்-இன் கருத்து வந்துள்ளது.
இதற்கிடையே இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதித்ததை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி டிரம்ப்-ஐ கண்டு அஞ்சுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
- கப்பலில் ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்து, பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது.
படாம்:
இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தக் கப்பலில் நேற்று ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்தது. அத்துடன் பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது.
இந்த விபத்தில் 10 பணியாளர்கள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.






