என் மலர்tooltip icon

    உலகம்

    பெல்ஜியம் சிறையில் உள்ள மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடுகடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு
    X

    பெல்ஜியம் சிறையில் உள்ள மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடுகடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு

    • பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 6 வங்களில் 13 ஆயிரம் கோடி மோசடி.
    • கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டார்.

    மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான மெஹுல் சோக்சி 2018 முதல் 2022 வரை பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 6 வங்கிகளிடம் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது.

    மெஹுல் சோக்சிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டதும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். அவர் பெல்ஜியத்தில் இருப்பது தெரியவந்தது இதனால் அவரை கைது, இந்தியாவிற்கு நாடு கடத்தும்படி சிபிஐ பெல்ஜியம் அரசுக்கு வேண்டுகோள் வைத்தது. அவரது வழக்கு தொடர்பான ஆவணங்களை பெல்ஜியத்திற்கு வழங்கியது.

    இந்த நிலையில்தான் பெல்ஜியம் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் பலமுறை ஜாமீன் கேட்டும், நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை.

    இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அவரை கைது செய்ததற்கும், இந்தியாவுக்கு நாடு கடத்தல் கோரிக்கையும் செல்படியானதாகும் என உத்தரவிட்டுள்ளது. என்றபோதிலும், அப்பீல் செய்ய வாய்ப்புள்ளதால், உடனடியாக நாடுகடத்த சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.

    மெஹுல் சோக்சி நீதிமன்றத்தில் 2017ஆம் அண்டு நவம்பர் மாதம் ஆண்டிகுவா அண்டு பார்படா குடியுரிமை பெற்ற பிறகு, டிசம்பர் 14, 2018-ல் இந்தியாவின் குடியுரிமையை திருப்பி கொடுத்துவிட்டேன் எனத் தெரிவித்தார்.

    Next Story
    ×