என் மலர்
உலகம்
- மங்கோலியா பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
- பிரசாரத்தில் பேசிய வெறுப்பு பேச்சுகளை மறந்து அரசியல் கட்சிகள் தேசிய நலனுக்கான ஒன்றிணைய வேண்டும்.
மங்கோலியா பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. முதல் கூட்டத் தொடர் நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது பிரசாரத்தில் பேசிய வெறுப்பு பேச்சுகளை மறந்து அரசியல் கட்சிகள் தேசிய நலனுக்கான ஒன்றிணைய வேண்டும் என அந்நாட்டு அதிபர் யுகா குரேல்சுக் வலியறுத்தியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மங்கோலியா மக்கள் கட்சி, குடியரசு கட்சி, ஹன் கட்சி, சிவில் வில்-க்ரீன் கட்சி, மங்கோலியா தேசிய ஜனநாயக கட்சி, மங்கோலியா க்ரீன் கட்சி உள்ளிட்டக்கிய தேசிய கூட்டணி ஆகியவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன.
மங்கோலியாவின் சுதந்திரம், பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும். பரஸ்பர புரிதலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
- மன்ப்ரீத் கவுர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார்.
- காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
24 வயதான இந்திய வம்சாவளி பெண்ணான மன்ப்ரீத் கவுர் பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார். படிக்கும் போதே வேலை செய்து தனது செலவுகளை அவர் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். அதன்படி மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் எறியுள்ளார். ஆனால் விமானத்தில் ஏறி அவள் சீட் பெல்ட்டை அணிய முயன்றபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. காசநோய் நுரையீரலை பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும்.
- மியான்மரின் வடக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
- 30 பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் தற்காலிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
மியான்மரின் வடக்கு மாநிலமான கச்சினில் ஐராவதி ஆறு ஒடுகிறது. கனமழையால் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் உயிரிழந்தோர் விவரம் தெரியவில்லை. ஆனால் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது கச்சின் மாநில அரசு தெரிவித்துள்ளது.
30 பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் தற்காலிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. மியீச்சினா மற்றும் வைமாவ் நகரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக மீடியாக்கள் தெரிவித்துள்ளன.
மியீச்சினாவில் ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி 5 அடிக்கு மேல் செல்வதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் மேலும் இரண்டு அடி உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பார்படோஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
உலகக் கோப்பை முடிந்து பார்படோஸில் இருந்து இன்றிரவு இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், பார்படோஸில் கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பார்படோஸ் விமான நிலையம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையம் மூடப்பட்டதால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக இந்தியா திரும்ப ஆயத்தமான இந்திய அணி வீரர்கள், ஊடகவியாலாளர்கள் குழு பார்படோஸில் சிக்கியுள்ளது.
- மாயா நீலகண்டன் பாடும் இசை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
- இசை பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் அவரை வாழ்த்தி கருத்து பதிவிட்டனர்.
இந்தியாவை சேர்ந்த 10 வயது கிட்டார் இசை கலைஞரான மாயா நீலகண்டன், அமெரிக்காவில், திறமைகளை வெளிப்படுத்தும் டி.வி. நிகழ்ச்சியான 'அமெரிக்காஸ் காட் டேலண்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அவர் கிட்டாரில் ராக் இசையமைத்து அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்தினர். அவரது கிட்டார் வாசிப்பு திறமை மற்றும் பாவனைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அவர் பாடும் இசை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு உள்ளனர். இசை பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் அவரை வாழ்த்தி கருத்து பதிவிட்டனர்.
மாயா நீலகண்டன் வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
கடவுளே... மாயா நீலகண்டனுக்கு 10 வயதுதான் ஆகிறது. ஆம். சைமன். அவள் ஒரு தெய்வம் தான். தேவதைகளின் தேசத்திலிருந்து வந்திருக்கிறாள்.. நாங்கள் மாயா நீலகண்டனுக்கு தேவையானதை செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
- ஏவுகணை சோதனை அதிகாலை வேளையில் நடைபெற்றது.
- அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பகிரப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்து இருக்கிறது. இரு நாடுகள் இடையே பதற்ற சூழல் நிலவும் நிலையில், புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
குறுகிய தூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை அதிகாலை வேளையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே மற்றொரு ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் ஏவுகணை சோதனையை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும், வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்த தகவல்களை அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பகிரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
ஏவுகணை சோதனை குறித்து வட கொரியா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. கடந்த வாரம் ஏராளமான ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா தெரிவித்து இருந்தது. இதற்கு பதிலளித்த தென் கொரியா சில ஏவுகணைகள் நடுவானில் வெடித்து சிதறியதாக தெரிவித்தது.
- எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒரே நாளில் 6½ லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது.
- பலரும் பறக்கும் தட்டுகள் பற்றிய கருத்துகளை பதிவிட்டனர்.
கனடாவின் மானிடோபா மாகாணத்தில் கார் பயணம் செய்து கொண்டிருந்த ஜஸ்டின் ஸ்டீவன்சன்(49) அவரது மனைவி டேனியல் (32), வானில் திடீர் வெளிச்சத்தை கண்டு வியப்படைந்தனர். உடனே அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இரட்டை கோளங்களாக அருகருகே நெருப்பு பிழம்பு போல பிரகாசமாக ஒளிர்ந்தது. அவை வின்னிபெக் ஆற்றின் மீது வட்டமிடுவதுபோன்று நகர்ந்தன.
அதை படம் பிடித்துக்கொண்டே பேசிய ஸ்டீவன்சன், "யே..கோவ்... நாங்கள் நிஜமாகவே சில வேற்றுக்கிரக வாசிகளை பார்க்கிறோம் என்று நினைக்கிறேன்" என்று பேசுகிறார். அப்போதே சற்று அருகில் அதேபோன்று மேலும் 2 இரட்டை கோள உருண்டைகள் ஒளிர ஆரம்பித்தன. மொத்தம் 4 சூரியன்கள் ஒளிர்வது போல இந்த காட்சிகள் தெரிந்தன.
எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ ஒரே நாளில் 6½ லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது. பலரும் பறக்கும் தட்டுகள் பற்றிய கருத்துகளை பதிவிட்டனர்.
- இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராக திகழ்ந்து வந்தார்.
- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 91.
வயது மூப்பு காரணமாக இரா.சம்பந்தன் சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதிலும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இரா.சம்பந்தன் இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராக திகழ்ந்து வந்தார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கஜகஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது.
- இதில் சீனா, ரஷியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பீஜிங்:
கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் ஜூலை 3 மற்றும் 4-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார். ஜூலை 2 முதல் 6-ம் தேதி வரை கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானுக்கான அரசுமுறை பயணங்களை மேற்கொள்கிறார் எனவெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அறிவித்தார்.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரான்ஸ் பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் சுற்று இன்று நடைபெறுகிறது.
- அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரான் தனது வாக்கை பதிவு செய்தார்.
பாரீஸ்:
பிரான்சில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடைபெறும் என அதிபர் மேக்ரான் தெரிவித்தார். அதன்படி, பிரான்ஸ் பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் சுற்று இன்று நடைபெறுகிறது.
அங்கு 4.90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தமுள்ள 577 இடங்களுக்கான இந்த தேர்தல் இரு சுற்றுகளாக நடைபெற உள்ளது.
வலதுசாரியான மரைன் லீ பென்னின் தேசிய பேரணி கட்சி இந்த முறை மக்களின் பெரும் ஆதரவுடன் முன்னிலையில் உள்ளது.
இந்தத் தேர்தலில் தேசிய பேரணி கட்சி ஆதிக்கம் செலுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. தேசிய பேரணி கட்சி முன்வைத்த வாக்குறுதிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் தனது வாக்கை இன்று பதிவு செய்தார்.
ஞாயிறன்று மாலை முதல் சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. அதன்பின்னரே, தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
தங்கள் கட்சி 289 இடங்கள் என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றால் மட்டுமே பிரதமர் பொறுப்பை ஏற்க இருப்பதாக தேசிய பேரணி கட்சி தெரிவித்துள்ளது.
- லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் பிரதமர் ரிஷிக் சுனக் சாமி தரிசனம் செய்தார்.
- இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைக்கிறது என்றார்.
லண்டன்:
இங்கிலாந்து பாராளுமன்றத்தின் மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கு ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் ஆட்சியை தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் பிரதமர் ரிஷிக் சுனக் சாமி தரிசனம் செய்தார். அதன்பின், நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:
பகவத் கீதையை வைத்து பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதில் நான் பெருமை அடைகிறேன்.
நமது கடமையை உண்மையாகச் செய்யவேண்டும். இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைக்கிறது.
இதை என் அன்பான பெற்றோர் எனக்கு கற்றுக்கொடுத்து வளர்த்தனர். தற்போது நான் என் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறேன்.
பொது சேவை செய்ய தர்மம் தான் எனக்கு வழிகாட்டுகிறது என தெரிவித்தார்.
- இஸ்ரேல் லெபனானுக்கு ராணுவத்தை அனுப்பும் பட்சத்தில் இஸ்ரேல் மீது தீவைரமான போரை முன்னெடுப்போம் என்று நேற்று நடந்த ஐ.நா கவுன்சில் கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது.
- ஹிஸ்புல்லா பிரச்னையை தீர்க்க வழி தேடி வருவதாகவும் அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர்
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இஸ்ரேல் நடத்திய டதாக்குதலில் காசாவில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் - ஹிபுல்லா - இஸ்ரேல் விவகாரம்
பலஸ்தீனத்துக்கு ஆதரவாக உலக நாடுகள் பல குரல் கொடுத்து வருகிறது. குறிப்பாக ஈரான் இந்த விவகாரதத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. ஈரானில் பிரதானமாக இயங்கி வரும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. பாலஸ்தீன் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி நடத்தி வருகிறது.
ஈரான் எச்சரிக்கை
இதனால் ஹிஸ்புல்லா எல்லையை விட்டு நீங்க வில்லையென்றால் லெபனானில் ராணுவ நடவைடிகைகளை மேற்கொண்டு ஹெஸ்புல்லாவை துடைதெரிய இஸ்ரேல் நேரம் பார்த்து காத்திருக்கிறது. இந்த நிலையில்தான் இஸ்ரேல் லெபனானுக்கு ராணுவத்தை அனுப்பும் பட்சத்தில் இஸ்ரேல் மீது தீவைரமான போரை முன்னெடுப்போம் என்று நேற்று நடந்த ஐ.நா கவுன்சில் கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து
இதற்கு பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், இந்த ஒரு கருத்தே ஈரான் அரசை முழுவதுமாக அழித்தொழிக்க போதுமான காரணம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோகாவ் காலண்ட் சுமூகமான முறையில் ஈரான் - ஹிஸ்புல்லா பிரச்னையை தீர்க்க வழி தேடி வருவதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அதிபர் தேர்தல்
இதற்கிடையில் முன்னாள் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஷி (Ebrahim Raisi) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தநிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்த நிலையில் ஈரான் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகக் குறைவாக 39.93 சதவீத வாக்குகளே பதிவாகின.

மேலும் நேற்று வெளியான இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால் வரும் ஜூலை 5 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக மீண்டும தேர்தல் நடத்தப்படும் என்று அறிகிக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு நீதித் துறை தலைவர் இப்ராஹிம் ரய்லி உட்பட அந்நாட்டின் அணுசக்தி துறையின் முன்னாள் ஆலோசகர் சயீத் ஜலீல், முன்னாள் தளபதி மோசின் ரேசாய், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ரசா ஜகானி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹுசைன் காஜிஸ்தி, அந்நாட்டு மத்திய வங்கியின் தலைவர் அப்துல் நசீர் ஹிம்மதி, மிதவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியனி ஆகியோர் போட்டியிட்டனர்.







