என் மலர்
உலகம்
- நேபாள பிரதமராக இருக்கும் புஷ்பா கமல் தாஹல் பிரசந்தாவுக்கு ஒலி ஆதரவு வழங்க மறுப்பு.
- நேபாள காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்பந்தம்.
நேபாள பிரதமராக இருக்கும் புஷ்பா கமல் தாஹல் பிரசந்தாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்- யுஎம்எல் கட்சியும் தற்போது புதிய கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளதுதான் இதற்கு காரணம்.
நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷெர் பகதூர் தெயுபா கம்யூனிஸ்ட் கட்சியான நேபாளம் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) கட்சியுடன் ஒருங்கிணைந்து தேசிய ஒருமித்த அரசாங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதனால் பிரசண்டா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
நேபாள காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் 89 இடங்களும் பெரிய கட்சியாக விளங்குகிறது CPN-UML-க்கு 78 இடங்கள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 138 இடங்கள் தேவை. ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் 167 இடங்கள் உள்ளன.
தெயுமா (78 இடங்கள்), ஒலி (72) ஆகியோர் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வதாக முதலில் தெரிவித்தனர். பிரதமர் பிரசண்டா மற்றும் CPN-UML தலைவர் ஒலிக்கும் இடையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் பிரசண்டாவின் கம்யூனிஸ்ட் கட்சி (Maoist Centre) செயலாளர் கணேஷ் ஷா இதுகுறித்து கூறுகையில் "கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க சதி செய்யப்படுகிறது. அரசு ஊழலுக்கு முடிவு கட்டி, நல்லாட்சியை அறிமுகப்படுத்தியபோது இந்த சதி நடைபெற்றுள்ளது" என்றார்.
பிரசண்டா தனது ஒன்றரை ஆண்டு பதவி காலத்தின்போது பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நேபாளம் பாராளுமன்ற அரசியலமைப்பின்படி, பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர 30 நாட்கள் வரை கேட்க முடியும். இதனால் பிரசண்டாவிற்கு அரசியல் சூழ்சியை மேற்கொள்ள காலஅவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
- டார்பூர் மாகாணம் எல்பேஷர் என்ற இடத்தில் துணை ராணுவ படையினர் வான் வழித்தாக்குதலில் ஈடுபட்டனர்.
- பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் இடையே அதிகார போட்டி காரணமாக உள்நாட்டு போர் மூண்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசி, பட்டினியால் வாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணம் எல்பேஷர் என்ற இடத்தில் துணை ராணுவ படையினர் திடீர் வான் வழித்தாக்குதலில் ஈடுபட்டனர். வான்வழியாக சரமாரியாக குண்டுகளை வீசினார்கள்.
இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- மோசடி செய்ததாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பிராட் பர்டிக்கு 2 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சிகோகோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி ஷா (வயது 38 ), ஷ்ரதா அகர்வால் (38) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பிராட்பர்டி (35) ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து 1 பில்லியன் டாலர் ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,500 கோடி ) மோசடி செய்ததாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ரிஷி ஷாவுக்கு 7 ஆண்டு 6 மாதம் ஜெயில் தண்டனையும், ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பிராட் பர்டிக்கு 2 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
- விமானத்தில் 325 பயணிகள் பயணம் செய்தனர்.
- விமானம் குலுங்கியதில் சில இருக்கைகள் சேதம் அடைந்தது.
மாட்ரிட்:
சமீப காலமாக நடுவானில் விமானம் குலுங்கும் சம்பவங்கள் தொடர்கதை போல நடந்து வருகிறது. தற்போது ஸ்பெயின் நாட்டிலும் இது போன்ற ஒரு விபத்து விமான பயணிகளை அதிர்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் இருந்து உருகுவே தலைநகர் மாண்டி வீடியோவுக்கு ஏர் யுரோபா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 325 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்த போது திடீரென பயங்கரமாக குலுங்கியது. விமானம் அங்கும், இங்கும் ஆடியதால் பயணிகள் அலறினர். சிலர் இருக்கையை கெட்டியாக பிடித்து கொண்டனர். சீட் பெல்ட் அணியாத பயணிகள் இருக்கையில் இருந்து கீழே விழுந்தனர். விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை கதறி அழுதது.
ஒரு பயணி விமானத்தின் மேற்பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார். இதனால் அவர் மேல் பகுதியை பிடித்து கொண்டு தொங்கினார். அவரை சக பயணிகள் கீழே இழுத்து மீட்டனர். இந்த சம்பவத்தில் 30 பயணிகள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து விமானம் வடகிழக்கு பிரேசிலில் உள்ள நடால் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் குலுங்கியதில் சில இருக்கைகள் சேதம் அடைந்தது. பின்னர் வேறு ஒரு விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஏர் யுரோபா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாகவும், காயம் அடைந்த பயணிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
A Boeing 787 passenger was thrown onto a luggage rack during severe turbulence. About 40 people were also injured
— NEXTA (@nexta_tv) July 2, 2024
The Air Europa flight was en route from Madrid to Montevideo. During the flight, the Dreamliner hit severe turbulence.
The crew decided to make an emergency landing… pic.twitter.com/VifmXYshMs
- 180 அடி நீளமுள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
- உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை கடந்த 60 வருடங்களில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே நீளமான சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். 180 அடி நீளமுள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்னி ரியான் என்பவர் தயாரித்த 155 அடி நீளமுள்ள சைக்கிள் தான் உலகிலேயே நீளமான சைக்கிள் என்ற சாதனையை படைத்திருந்தது.
டச்சு பொறியாளர்கள் குழுவில் இருந்த இவான் ஷால்க் என்ற 39 வயது பொறியாளர் தனது சிறு வயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார். அந்த கனவை இப்போது அவர் நனவாக்கியுள்ளார்.
உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை கடந்த 60 வருடங்களில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. முதல்முதலாக 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 26 அடி நீளத்தில் உலகின் முதல் நீளமான சைக்கிள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- தொலைந்து போன பொம்மையை கண்டுபிடிக்க உதவுமாறு சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்தார்.
- ஒரு துப்புரவுத் தொழிலாளி பொம்மையைக் கண்டுபிடித்து அவரிடம் திருப்பித் தந்தார்.
மிகவும் பிரபலமான நகைச்சுவை தொடரான 'மிஸ்டர் பீன்'-ஐ யாராலும் மறக்க முடியாது. வசனம் மற்றும் கதாபாத்திரங்கள் அதிகளவில் இல்லாவிட்டாலும் அட்கின்சன் என்பவரும் அவருடன் வரும் பொம்மையை மையமாக வைத்தே நகைச்சுவை தொடர் எடுக்கப்பட்டிருக்கும். அதில் அட்கின்சன் எங்கு சென்றாலும் கூடவே பொம்மையை எடுத்து செல்வார். அதனுடன் பேசுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
இப்போது 'மிஸ்டர் பீன்'னை ஒட்டி நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் 9-ந்தேதி ஸ்பெயினில் பார்சிலோனா மெட்ரோவில் பயணித்த சீன நபர் தனது குழந்தை பருவ பொம்மையான "ரொட்டி" காணாமல் போனதை அடுத்து அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து பல இடங்களில் தேடிப்பார்த்தும் அந்த பொம்மை கிடைக்காததால் தொலைந்து போன பொம்மையை கண்டுபிடிக்க உதவுமாறு சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்தார். மேலும் பொம்மை "ரொட்டி"யின் புகைப்படத்துடன் அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 500 யூரோக்கள் ( அதாவது இந்திய மதிப்பில் ரூ.44,637) வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். 'ரொட்டி'யை கண்டுபிடிக்க தனது பணிகளை ரத்து செய்துவிட்டு தேட தொடங்கினார்.
சில நாட்களுக்கு பிறகு, சாக்ரடா ஃபேமிலியா மெட்ரோ நிலையத்தில் ஒரு துப்புரவுத் தொழிலாளி பொம்மையைக் கண்டுபிடித்து அவரிடம் திருப்பித் தந்தார். ரொட்டியுடன் மீண்டும் இணைந்த பிறகு, துப்புரவு பணியாளருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். "பலருக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் எனது வேலை, எனது பட்டம் அல்லது எனது உடைமைகளை விட எனக்கு ரொட்டி முக்கியமானது" என்று சீன நபர் கூறியுள்ளார்.
- நேதன்யாகு போரை சரிவர கையாளவில்லை என்று மக்கள் கொதிப்பில் உள்ளதாக தெரிகிறது.
- நேதன்யாகு இல்லத்தின் அருகே திரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டத்தொடங்கினர்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரின் விளைவுகள் விபரீதமானதாக மாறி வருகிறது. இஸ்ரேலிலும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போரை சரிவர கையாளவில்லை என்று மக்கள் கொதிப்பில் உள்ளதாக தெரிகிறது. அவ்வப்போது அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை கட்டுப்படுத்த கடுமையான நடவைடிகைகளை நேதன்யாகு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அல் - குத்ஸில் திரண்ட சுமார் 1,30,000 போராட்டக்காரர்கள் இஸ்ரேலில் புதிதாக தேர்தல் நடத்த வலியுறுத்தியும், காசாவில் பிணைகக் கைதிகளாக மீதமுள்ள 100 இஸ்ரேலியர்களை விரைவில் மீட்க கோரியும் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தை ஒடுக்க இஸ்ரேல் போலீசார் கடுமையான முறைகளை பிரயோகித்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் பாரிஸ் சதுக்கத்தில் உள்ள பிரதமர்நேதன்யாகு இல்லத்தின் அருகே திரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டத்தொடங்கினர்.

அப்போது போலீஸ் ஒருவர் போராட்டக்காரிடம் மிகவும் கீழ்த்தரமான வகையில், ' நான் உன் தாயை பலாத்காரம் செய்வேன்' என்று மிரட்டியுள்ளார். போராட்டக்காரர்கள் சிலரை போலீஸ் கும்பல் ஆக்ரோஷமாக கையாளும் சமபாவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று போராட்டம் நடந்த இடங்களிலெல்லாம் போலீசின் கடுமையான அணுகுமுறையை இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.
- 1996-ம் ஆண்டில் ஜோசப் மற்றும் மரியா மார்டென்ஸ் என்ற டச்சு தம்பதியினரால் அவர் தத்தெடுக்கப்பட்டார்.
- கடந்த ஆண்டு தன்னார்வலர்கள் மார்டென்ஸிடம் அவரது டிஎன்ஏ அவரது பிறந்த தாயான வென்னுடன் பொருந்தியதாகக் கூறினர்.
கவுமிங் மார்டென்ஸ் என்பவரை அவரது 4 வயதில் சீனாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் இருந்து டச்சு தம்பதியர் தத்தெடுத்தனர். மார்டென்ஸ் 12 வருட நீண்ட தேடலுக்கு பிறகு இறுதியாக தனது பெற்றோரை கண்டுபிடித்தார்.
மார்டென்ஸ் 1994-ம் ஆண்டு தனது மூன்று வயதில் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து அவரது தாயின் சொந்த ஊருக்கு பெற்றோருடன் பயணிக்கும்போது தொலைந்து போனதாக தெரிவிக்கப்பட்டது.
கருணை உள்ளம் கொண்டவர்கள் அவரை ஒரு அனாதை இல்லத்திற்கு அனுப்பினர். அங்கு 1996-ம் ஆண்டில் ஜோசப் மற்றும் மரியா மார்டென்ஸ் என்ற டச்சு தம்பதியினரால் அவர் தத்தெடுக்கப்பட்டார்.
மார்டென்ஸ் வளர்ப்பு பெற்றோர்கள் அவரை பெற்றோரைத் தேடுவதை ஆதரித்தனர். மேலும் 2007-ல் இவர்களது குடும்பம் சீனாவுக்கு சென்று விசாரித்தது. ஆனால் அங்கு அனாதை இல்லம் இல்லை. இருந்தாலும் மார்டென்ஸ் தனது தேடலைத் தொடர்ந்தார். ஐந்தாண்டுகள் மாண்டரின் மொழியைக் கற்றுக்கொண்டு, பகுதிநேர வேலை செய்தார்.
2012-ல் அவர் தன்னை Baby Come Home-ல் பதிவு செய்தார். இது மக்கள் தொலைந்து போன குடும்பங்களைக் கண்டறிய உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தன்னார்வ நடவடிக்கையாகும். மேலும் தன்னார்வலர்களின் உதவியுடன் தனது பிறந்த பெற்றோரைத் தேடினார்.
மார்டென்ஸ் நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் பட்டமும், கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இறுதியாக கடந்த ஆண்டு தன்னார்வலர்கள் மார்டென்ஸிடம் அவரது டிஎன்ஏ அவரது பிறந்த தாயான வென்னுடன் பொருந்தியதாகக் கூறினர்.
அவரைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் காவ் யாங் என்ற குழந்தையைத் தேடுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. மார்டென்ஸின் வளர்ப்பு தாய் இந்த செய்தி தெரிவதற்கு முன்பு இறந்துவிட்டார். வளர்ப்புத் தந்தை தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.
மனநலக்கோளாறால் அவதிப்பட்ட அவரது தாய் வென்னை பார்த்தபோது யாங்யாங் என்ற பெயரில் அழைத்தார். இந்த கதை சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது.
மார்டென்ஸ் கதை துரதிர்ஷ்டவசமாக ஆரம்பித்த போதிலும், அவரது பிறந்த குடும்பம் மற்றும் வளர்ப்பு குடும்பம் இரண்டும் அன்பால் நிறைந்ததால் இறுதியில் அவர் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்துள்ளனர்.
- டாம் வாலண்டினோ என்ற பயனர் பதிவிட்ட வீடியோ 18 விநாடிகளே ஓடுகிறது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதள புகழுக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் விமர்சனங்களை சந்திக்கும். பல வீடியோக்கள் வைரலாகும்.
அந்த வகையில் தென் அமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பம் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்காக இறுதி சடங்கை நிறுத்தி வைத்த சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
டாம் வாலண்டினோ என்ற பயனர் பதிவிட்ட இந்த வீடியோ 18 விநாடிகளே ஓடுகிறது. வீடியோவில், இறந்த உறவினரின் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து ப்ரொஜெக்டர் வைத்து பெரிய திரையில் சிலி மற்றும் பெரு அணிகள் இடையே நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து விளையாட்டு போட்டியை குடும்பத்தினர் பார்ப்பதை காணமுடிகிறது.
இதனிடையே சவப்பெட்டி பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், சவப்பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பேனரில், "ஃபெனா மாமா, நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றி. உங்களையும் உங்கள் காண்டோரியன் குடும்பத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்" என அச்சிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.
கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் வெடித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக 27 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கென்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரி உயர்வு மசோதா திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார்.

இந்த நிலையில், அரசுக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மனித உரிமைகள் ஆணையம் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கென்யாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட இருந்த புதிய வரி உயர்வு தொடர்பான சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை வெளியிட்டது. அதில் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் உயிரிழந்ததாகவும் 361 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜூன் 18 ஆம் தேதி துவங்கி ஜூலை 1 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதே காலக்கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 32 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் 627 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
- உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது.
ரஷியா உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும் நிலையில் இந்த போரில் ஏராளமான உயிரிழப்புகளும் உக்ரைன் பகுதிகளில் பலத்த சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகளின் உதவியுடன் இந்த போரில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது. ரஷியாவுக்கு வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

உக்ரைனை கைப்பற்றுவது தங்களின் நோக்கம் இல்லை என்று கூறும் புதின் மேற்கு நாடுகளால் உக்ரைன் வழியாக தங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள ஸ்டெபோவா நோவோசெலிவ்கா [Stepova Novoselivka] iமற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நோவோபோக்ரோவ்ஸ்கே [Novopokrovske] ஆகிய இரண்டு கிராமங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால் உக்ரைன் ராணுவம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேற்கூறப்பட்ட பகுதிகளில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அடுத்த நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துமனைக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
- இந்த நோயினால் ஹெப்பாடிட்டிஸ், கல்லீரல் செயலிழல்ப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்
வாயோடு வாயாக எச்சில் மூலம் பரவி உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் முத்த நோய் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த நெவி மெக்ரெவி என்ற 22 வயது பெண் ஒருவர் பட்டப்படிப்பை முடித்து டிகிரி வாங்கியதைக் கொண்டாட தனது தோழிகளுடன் பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தற்செயலாக சந்தித்த வேற்று நபருக்கு நெவி வாயோடு வாய் முத்தம் கொடுத்துள்ளார்.

அடுத்த நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துமனைக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது GLANDULAR FEVER எனப்படும் சுரப்பிக் காய்ச்சல் அவரைத் தாக்கியுள்ளது. உடலின் சுரப்பிகள் வீங்கி அதீத வேர்வை ஏற்பட்டு தொடர்சியாக வாந்தி எடுத்து தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் நெவி மருத்வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சுரப்பி நோயானது எப்ஸ்டைன் பார் [Epstein barr virus -EPV] என்ற வைரசால் ஏற்படுவது ஆகும். இந்த வைரஸ் எச்சில் மூலம் பரவக்கூடிய தன்மை உடையது. முக்கியமாக ஒருவரது எச்சில் மற்றவருக்கு மிகவும் தொடர்புபடும் முத்தத்தால் இந்த நோய் அதிகமாக பரவுவதால் இதை முத்தக் காய்ச்சல் [Kissing fever] என்று அழைக்கின்றனர். இது இளம் வயதினரிடமே அதிகமாக பரவி வருகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இல்லாத போது இந்த நோய் ஏற்படுகிறது . இந்த நோயினால் ஹெப்பாடிட்டிஸ், கல்லீரல் செயலிழல்ப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் உயிர்கொல்லியாகவும் மாறக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.






