என் மலர்
உலகம்
- பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகிறது.
- இந்த முறை ஏராளமான தமிழர்கள் களம் காண்கின்றனர்.
பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொர்ந்து கடந்த மே 30 ஆம் தேதி பிரிட்டன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் களம் காண்கின்றனர்.
உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வந்தது.
இந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் போது 15 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
- இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார்.
- இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி நேற்று பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார்.
அப்போது இந்திய கடற்படைக்கும் வங்காளதேச கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சிஎன்எஸ் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரதமரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து உரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு இடையேயான பயிற்சி மற்றும் கூட்டுப் பயிற்சிகளில் கூடுதல் வழிகள் குறித்து விவாதித்தனர்.
During his ongoing visit to Bangladesh, Adm Dinesh K Tripathi, CNS interacted with Gen Waker-Uz-Zaman, Chief of the Army Staff, Bangladesh Army at Bangladesh Army Headquarters, Dhaka. The two Principals discussed longstanding & robust ties b/n the two nations; & initiatives for… pic.twitter.com/DYuwn8lI6M
— ANI (@ANI) July 4, 2024
- சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
- போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் காசா இடையே போர் துவங்கியதில் இருந்து காசாவை சேர்ந்த பத்தில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
பாலஸ்தீன எல்லை பகுதியில் உள்ள ஐநா-வின் OCHA அமைப்பு தலைவர் ஆண்ட்ரியா டி டொமினிகோ காசாவில் சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இதுவரை காசா எல்லையில் ஒவ்வொரு பத்தில் ஒன்பது பேர் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று கணிக்கிறோம். நாங்கள் 1.7 மில்லியன் பேர் இடம்பெயர வாய்ப்புள்ளதாக கணித்திருந்தோம்," என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வடக்கில் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேர் வரை சிக்கிக் கொண்டு தெற்கிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
- கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
- ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் இரங்கல் தெரிவித்தார்.
டோக்கியோ:
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.
ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா அந்நாட்டு வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஹத்ராஸ் சம்பவம் அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- பதவியில் இருந்தபோது வாங்கிய பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக குற்றச்சாட்டு.
- தவறான அறிக்கைகளை அளித்ததாக தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப் பொருட்களை சட்டவிரோதமா விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இம்ரான் கான் இது தொடர்பாக பொய்யான தகவல்களை அளித்ததாக தேர்தல் ஆணையம் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்தது.
மேலும், அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் பாகிஸ்தான் அரசு இம்ரான் கான் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்ததும் அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. இதில் இரண்டு வழக்குகளில் இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் போராட்டம் செய்யப்பட்ட வழக்கில் பெற்ற தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என இம்ரான் கான் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்று கடந்த வாரம் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில் தற்போது இம்ரான் கான் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேபோல் ஷா மெஹ்மூத் குரேசி, ஷேக் ரஷீத், ஆசாத் குயேசர், ஷெர்யார் அப்ரிடி, பைசல் ஜாவித், ராஜா குர்ராம் நவாஸ், அலி நவாஸ் அவான் போன்றோரும் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்லாத்திற்கு எதிராக திருமணம் செய்ததாக இவர் மீது வழக்கு தொடர்ந்து 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டால் இம்ரான் கான் சிறையில் இருந்து வெளியில் வர வாய்ப்புள்ளது.
- ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
- உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.
ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹதராஸ் சம்பவம் தெடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
- மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
- மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், மியான்மர் நாட்டில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடைக்காரரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கடைக்காரரின் 3 செல்போன் கடைகளையும் அந்நாட்டு அரசு மூடியுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக இதேபோல் 10 முதலாளிகளை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பது நல்ல விஷயம் தானே, பின்னர் எதற்காக அவரை கைது செய்துள்ளார்கள் என்று கேள்வி எழுகிறது அல்லவா? அதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்தால் விலைவாசி விண்ணை தொடும். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் இந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதை மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள். இது அரசுக்கு தலைகுனிவாகும். இது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.
மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வுக்கு மத்தியில் வேலையும் இல்லாமல் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- இந்த மாநாடு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருக்கும் நாடுகளின் வலுவான கூட்டமைப்பை கட்டமைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தான் சென்றுள்ளார்.
கஜகஸ்தான் நாட்டின் அஸ்டானா நகரில் வைத்து இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடிப்பெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ரஷிய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் தற்போது கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றடைந்துள்ளனர். இந்த மாநாடு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருக்கும் நாடுகளின் வலுவான கூட்டமைப்பை கட்டமைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடானது கடந்த 2001 ஆம் ஆண்டு ரஷியா மற்றும் சீனாவின் முன்முயற்சியால் மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பைக் குறித்து ஆலோசித்து உறுதிசெய்ய ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். இந்தியா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளது. மேலும் துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளும் இந்த ஷாங்காய் கூட்டமைப்பு ஆலோசனைகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.
இந்த வருட மாநாட்டில் கூட்டமைப்பில் உள்ள மற்றைய நாடுகளின் அதிபர்கள் தலைவர்கள் பங்கேற்கும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தான் சென்றுள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் மேற்குலகத்தால் பெருளாதார தடைகளை எதிர்கொண்ட ரஷியா தனியாக இல்லை என்று அவர்களுக்கு காண்பிக்கும் விதமாக இந்த மாநாட்டை ரஷிய அதிபர் புதின் முன்னெடுத்துச் செல்வார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இந்த மாநாட்டை மத்திய ஆசியாவில் சீனாவை பிரதானப்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வார் என்று தெரிகிறது.

- மீன்பிடி படகு மற்றும் பணியாளர்களை விடுவிக்க தைவான் கடலோர காவல்படை சீனாவிடம் கேட்டு கொண்டது.
- விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தைவானின் கடலோரக் காவல்படையிடம் சீனா தெரிவித்து உள்ளது.
சீனாவின் தென் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவுதான் தைவான். தனக்கு சொந்தமான மாகாணமாகவே தைவானை சீனா கருதுகிறது. அதனாலே தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா துடிக்கிறது.
தெற்கு சீனாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மக்களே தைவானின் ஆதி குடிமக்கள் என்பதாலும், சீனாவின் சிங் வம்சம் ஆண்ட பகுதியே தைவான் என்பதாலும், தைவான் தங்களுக்கு தான் சொந்தம் என்று நீண்ட காலமாகவே சீனா உரிமைக் கொண்டாடி வருகிறது.
இதனால் இரு நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சீனக் கடற்கரையில் தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென் தீவின் கடற்பரப்பில் இருந்து தைவானை சேர்ந்த மீன்பிடிப்படகு மற்றும் அதில் இருந்தவர்களை சீனா சிறைபிடித்துள்ளது.
இதையடுத்து மீன்பிடி படகு மற்றும் பணியாளர்களை விடுவிக்க தைவான் கடலோர காவல்படை சீனாவிடம் கேட்டு கொண்டது. ஆனால் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தைவானின் கடலோரக் காவல்படையிடம் சீனா தெரிவித்து உள்ளது.
- வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எந்திரத்தில் அவரது கை சிக்கி துண்டிக்கப்பட்டது.
- சத்னம் சிங் இறந்த விவகாரத்தில் பண்ணை உரிமையாளர் அன்டோனெல்லோ லோவாடோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த சத்னம் சிங் (31) இத்தாலியில் கூலித் தொழில் செய்து வந்தார். ரோம் நகருக்கு அருகிலுள்ள லாசியோவில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்தார். அவர் வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எந்திரத்தில் அவரது கை சிக்கி துண்டிக்கப்பட்டது.
அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அவரது முதலாளி குப்பை கொட்டும் இடத்துக்கு அருகில் விட்டு சென்றுவிட்டார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சத்னம் சிங் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாராளுமன்றத்தில் பேசும்போது, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சத்னம் சிங் இறந்த விவகாரத்தில் பண்ணை உரிமையாளர் அன்டோனெல்லோ லோவாடோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
- புதிதாக தொடங்க இருக்கும் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 ஆகும்.
- வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசுத்துறையினருக்கு வழக்கமான வார விடுமுறை தினமாகும்.
மஸ்கட்:
இஸ்லாமியநாட்காட்டியின் முதல் மாதம் 'முகரம்' மாதமாகும். நபித்தோழர் உமர் (ரழி), தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் இஸ்லாமியர் முதல் மாதமாக முகரம் மாதத்தை ஆரம்பிப்பது என்று முடிவெடுத்தார்கள்.
'ஹிஜ்ரி' ஆண்டு என்பது நபிகள் நாயகம் மெக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டதை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும். இஸ்லாமிய வருடப் பிறப்பு வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. புதிதாக தொடங்க இருக்கும் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 ஆகும்.
இதையொட்டி அமீரக மனிதவளம் மற்றும் அமீரகமயமாக்கல் துறை வெளியிட்ட அறிவிப்பில், "அமீரகத்தில் இஸ்லாமிய வருடப் பிறப்பை முன்னிட்டு வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறையாக இருக்கும்" என கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை தினம் ஆகும். இதனால் இந்த விடுமுறை காரணமாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பயன் இல்லை.
ஓமன் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஓமன் நாட்டில் இஸ்லாமிய வருடப் பிறப்பு வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. புதிதாக தொடங்க இருக்கும் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 ஆகும். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசுத்துறையினருக்கு வழக்கமான வார விடுமுறை தினமாகும்.
இஸ்லாமிய வருடப்பிறப்பையொட்டி 7-ந்தேதி பொது விடுமுறை விடப்படுவதால் அரசுத்துறையினருக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அன்றைய தினம் ஒரு சில ஊழியர்களின் பணி மிகவும் அத்தியாவசியமாக கருதி அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டால், அதற்கேற்ப அவர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது அதனை ஈடு செய்யும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசு முறை பயணமாக கடந்த ஜூன் 21-ந்தேதி இந்தியா வந்திருந்தார்.
- கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசு முறை பயணமாக கடந்த ஜூன் 21-ந்தேதி இந்தியா வந்திருந்தார். அப்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், நீர்வளம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி இருதரப்பு பாதுகாப்பு ஈடுபாட்டை ஒருங்கிணைத்து, கடல்சார் துறையில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராயும் நோக்கத்துடன் ஜூன் 30-ந்தேதி வங்காளதேசத்திற்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். கலந்துரையாடலின்போது, வங்காளதேச பிரதமர் 1971-ல் வங்காளதேசத்தின் விடுதலைப்போரில் இந்தியாவின் பங்களிப்பை நினைவுகூர்ந்து பாராட்டினார்.
இந்திய கடற்படைக்கும் வங்காளதேச கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சிஎன்எஸ் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரதமரிடம் விளக்கினார்.






