என் மலர்
நீங்கள் தேடியது "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு"
- இந்தியா- பாகிஸ்தான் மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அஜர்பைஜான் கருத்து.
- பாகிஸ்தானோடு சகோதரத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என அந்நாட்டு அதிபர் பேசியதாக செய்தி வெளியானது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது அஜர்பைஜான் இந்த அமைப்பின் முழு உறுப்பினராகும் முயற்சியை இந்தியா தடுத்து நிறுத்தியது.
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்தியா பழிவாங்க முயல்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.
மாநாடு நடைபெற்ற இடத்தில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-ஐ சந்தித்தார். அப்போது, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். மேலும், உலகளாவிய மன்றங்களில் இந்தியாவின் நடவடிக்கை இருந்தபோதிலும், அஜர்பைஜான் பாகிஸ்தானோடு சகோதரத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் எனக் கூறியதாக செய்திகள் வெளியானது.
- ஒத்துழைப்பின் பரப்பளவை விரிவுபடுத்தி, ஒவ்வொரு நாட்டின் வளத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
- ஷாங்காய் அமைப்பை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா, அமைப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படும்.
மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், ஆலோசனை, நாகரிகங்களின் பன்முகத் தன்மைக்கு மரியாதை மற்றும் பொதுவான வளர்ச்சியைப் பின் தொடர்தல் போன்றவற்றுக்காக இது தொடங்கப்பட்டது.
நாங்கள் சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை சீராக ஊக்குவித்தோம். வேறுபாடுகளை முறையாக நிர்வகித்து தீர்த்துக் கொண்டோம். வெளிப்புற தலையீட்டை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்த்தோம். நாங்கள் எப்போதும் சர்வதேச நியாயம் மற்றும் நீதியின் பக்கம் நிற்கிறோம்.
மேலாதிக்கத்தையும் அதிகார அரசியலையும் எதிர்க்கிறோம். சவால்கள் மற்றும் மாற்றங்கள் நிறைந்த உலகில் ஷாங்காய் உணர்வை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். நமது அமைப்பின் திறனை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுவான நிலையைத் தேட வேண்டும்.
ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். ஒத்துழைப்பின் பரப்பளவை விரிவுபடுத்தி, ஒவ்வொரு நாட்டின் வளத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்திய பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த அமைப்பை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா, அமைப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படும். ஷாங்காய் அமைப்பை மேலும் வலுப்படுத்துவோம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடனான சீனாவின் ஒட்டுமொத்த வர்த்தகம் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கு, உறுப்பு பொருளாதாரங்கள் ஒருங்கிணைந்த 30 டிரில்லி யன் அமெரிக்க டாலர்களை நெருங்கி வருகிறது. உறுப்பு நாடுகளில் சீனாவின் முதலீடுகள் ஏற்கனவே 84 பில்லியன் அமெரிக்க டா லர்களைத் தாண்டிவிட்டன.
பிராந்திய சவால்களை எதிர்கொள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேம்பாட்டு வங்கி மற்றும் ஒரு புதிய பாதுகாப்பு மையத்தை கூடிய விரைவில் உருவாக்க அழைப்பு விடுக்கிறேன்.
உலக ஒழுங்கில் கொடு மைப்படுத்தும் நடத்தையை நாம் எதிர்க்க வேண்டும். நியாயம் மற்றும் நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும். பனிப்போர் மனநிலை, மோதல் மற்றும் கொடு மைப்படுத்தும் நடத்தையை தலைவர்கள் எதிர்க்க வேண்டும்.
உறுப்பு நாடுகளின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த 100 சிறிய அளவிலான திட்டங்களின் ஒத்துழைப் பில் சீனாவின் பங்களிப்பை உறுதி செய்கிறேன். அனைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களும் நண்பர் கள் மற்றும் கூட்டாளிகள் ஆவார்கள். நமது ஒற்று மையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2017-ல் இந்தியா நிரந்த உறுப்பினர் ஆனது
- இந்திய ஜனாதிபதி தலைமையில் முதல் மாநாடு
இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23-வது உச்சி மாநடாடு ஜூலை 4-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்திய பிரதமர் மோடி அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி காட்சி மூலம் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹியா சுன்யிங் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அதிபர்களால் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநட்டின்போது தொடங்கப்பட்டது. 2017-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாகின.
இந்த அமைப்பு செல்வாக்கு மிக்க பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொகுதி மற்றும் மிகப்பெரிய நாடுகடந்த சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இந்திய ஜனாதிபதி தலைமையின் கீழ் முதல் முறையாக இந்த மாநாடு நடைபெறும் நிலையில், இந்த அமைப்பிற்கான தலைமை செயலகம் பீஜிங்கில் உள்ளது. அங்கு வடிவமைக்கப்பட்டுள்ள நியூ டெல்லி ஹால்-ஐ ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்.
- கஜகஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது.
- இதில் சீனா, ரஷியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பீஜிங்:
கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் ஜூலை 3 மற்றும் 4-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார். ஜூலை 2 முதல் 6-ம் தேதி வரை கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானுக்கான அரசுமுறை பயணங்களை மேற்கொள்கிறார் எனவெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அறிவித்தார்.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்து போராடுவதை முக்கிய நோக்கமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சமீபத்தில் சீனாவில் நடைபெற்றது.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில், இந்த அமைப்பில் உறுபினர்களாக உள்ள நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சி ரஷியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
மூன்று மாதம் நடைபெற உள்ள இந்த மெகா பயங்கரவாத ஒழிப்பு பயிற்சியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ரஷியா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களாக இணைந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பாதுகாப்பு படை வீரர்கள் இந்த பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் போர் பயிற்சியில் இந்திய விமானப்படையை சேர்ந்த சுமார் 200 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த பாதுகாப்புப்படை வீரர்கள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.






