என் மலர்
உலகம்

ஷாங்காய் அமைப்பை மேலும் வலுப்படுத்துவோம்- சீனா அதிபர்
- ஒத்துழைப்பின் பரப்பளவை விரிவுபடுத்தி, ஒவ்வொரு நாட்டின் வளத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
- ஷாங்காய் அமைப்பை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா, அமைப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படும்.
மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், ஆலோசனை, நாகரிகங்களின் பன்முகத் தன்மைக்கு மரியாதை மற்றும் பொதுவான வளர்ச்சியைப் பின் தொடர்தல் போன்றவற்றுக்காக இது தொடங்கப்பட்டது.
நாங்கள் சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை சீராக ஊக்குவித்தோம். வேறுபாடுகளை முறையாக நிர்வகித்து தீர்த்துக் கொண்டோம். வெளிப்புற தலையீட்டை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்த்தோம். நாங்கள் எப்போதும் சர்வதேச நியாயம் மற்றும் நீதியின் பக்கம் நிற்கிறோம்.
மேலாதிக்கத்தையும் அதிகார அரசியலையும் எதிர்க்கிறோம். சவால்கள் மற்றும் மாற்றங்கள் நிறைந்த உலகில் ஷாங்காய் உணர்வை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். நமது அமைப்பின் திறனை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுவான நிலையைத் தேட வேண்டும்.
ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். ஒத்துழைப்பின் பரப்பளவை விரிவுபடுத்தி, ஒவ்வொரு நாட்டின் வளத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்திய பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த அமைப்பை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா, அமைப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படும். ஷாங்காய் அமைப்பை மேலும் வலுப்படுத்துவோம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடனான சீனாவின் ஒட்டுமொத்த வர்த்தகம் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கு, உறுப்பு பொருளாதாரங்கள் ஒருங்கிணைந்த 30 டிரில்லி யன் அமெரிக்க டாலர்களை நெருங்கி வருகிறது. உறுப்பு நாடுகளில் சீனாவின் முதலீடுகள் ஏற்கனவே 84 பில்லியன் அமெரிக்க டா லர்களைத் தாண்டிவிட்டன.
பிராந்திய சவால்களை எதிர்கொள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேம்பாட்டு வங்கி மற்றும் ஒரு புதிய பாதுகாப்பு மையத்தை கூடிய விரைவில் உருவாக்க அழைப்பு விடுக்கிறேன்.
உலக ஒழுங்கில் கொடு மைப்படுத்தும் நடத்தையை நாம் எதிர்க்க வேண்டும். நியாயம் மற்றும் நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும். பனிப்போர் மனநிலை, மோதல் மற்றும் கொடு மைப்படுத்தும் நடத்தையை தலைவர்கள் எதிர்க்க வேண்டும்.
உறுப்பு நாடுகளின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த 100 சிறிய அளவிலான திட்டங்களின் ஒத்துழைப் பில் சீனாவின் பங்களிப்பை உறுதி செய்கிறேன். அனைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களும் நண்பர் கள் மற்றும் கூட்டாளிகள் ஆவார்கள். நமது ஒற்று மையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






