என் மலர்
உலகம்
- பார்சிலோனாவில் வசிக்கும் பால் டாமிங்கஸ் என்ற சிறுவனுக்கு சூரிய ஒளி என்றாலே அலர்ஜி.
- ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் என்ற அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பார்சிலோனா:
மனித உடலின் மேல் சில மணி நேரமாவது சூரிய ஒளி படவேண்டும். அப்பொழுது தான் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும் என கூறுவார்கள்.
ஆனால் ஸ்பெயினின் பார்சிலோனாவில் வசிக்கும் பால் டாமிங்கஸ் என்ற 11 வயது சிறுவனுக்கு சூரிய ஒளி என்றாலே அலர்ஜி. இதனால் அவர் தன் உடலின் மேல் சூரிய ஒளி படாத வகையில் முக கவசம் மற்றும் ஆடைகளை அணிந்தே வெளியில் சென்று வருகிறார்.
மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே வரும் ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் (xeroderma pigmentosum) என்ற அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் தோல் புற்றுநோயால் எளிதில் உருவாகக் கூடும். கடுமையான வெடிப்பு, வறண்ட சருமம் மற்றும் தோல் நிறமியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் நோயின் அறிகுறிகளாகும். மேலும் காது கேளாமை, வலிப்பு மற்றும் கண்புரை ஆகியவற்றிற்கும் இது வழிவகுக்கும்.
இதுதொடர்பாக, பால் டாமிங்கஸ் கூறுகையில், நான் பகலில் வெளியே செல்வேன். அதற்கு பாதுகாப்பு ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். நீண்ட சட்டை, தொப்பிகள், கண் கண்ணாடி மற்றும் முகக் கவசம் ஆகியவற்றை கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
எப்போதும் முக கவசம் உள்பட நீண்ட சட்டை அணிந்து செல்லும் சிறுவனை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
- குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
- டிரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சிக்கான தாக்குதலுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் டொனால்டு டிரம்ப் ஆதரவு கேட்டு பேசி வருகிறார்.
இந்நிலையில், அதிபர் வேட்பாளரான டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வழியே பேசினார்.
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், நானும் தொலைபேசி வழியே பேசிக் கொண்டோம். எங்களுடைய உரையாடல் நன்றாக இருந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக எனக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
என்னை தொடர்பு கொண்டதற்காக அதிபர் ஜெலன்ஸ்கியை பாராட்டுகிறேன். அடுத்த அமெரிக்க அதிபராக உலகத்திற்கு நான் அமைதியை கொண்டு வருவேன்.
பல உயிர்களை பலி வாங்கி, எண்ணற்ற குடும்பத்தினரை துன்பத்தில் ஆழ்த்திய போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என
பதிவிட்டுள்ளார்.
இந்த உரையாடலின்போது டிரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சிக்கான தாக்குதலுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விபத்தில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
- ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
ஷாங்லூ நகரில் உள்ள ஜாஷுய் கவுண்டியில் அமைந்துள்ள பாலம், நேற்று மாலை பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்துள்ளது.
காலை நிலவரப்படி 11 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. பாலம் இடிந்து விழுந்ததில், ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.

இதில், ஆற்றில் விழுந்த ஐந்து வாகனங்களை மீட்புக் குழுவினர் மீட்டதாகவும், மாயமானவர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் தேசிய விரிவான தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு 736 பேர், 76 வாகனங்கள், 18 படகுகள் மற்றும் 32 ஆளில்லா விமானங்களை மீட்புப் பணிகளுக்காக அனுப்பியுள்ளது.
விபத்து குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறுகையில், "மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க, மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை முழுவதுமாக மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
- போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.
- போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.
இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 778 இந்திய மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து மூலம் நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, டாக்கா, சிட்டகாங் விமான நிலையங்கள் வழியாக வழக்கமான விமான சேவைகள் மூலம் சுமார் 200 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
எஞ்சிய சுமார் 4000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.
நேபாளம், பூட்டான் நாடுகளை சேர்ந்த மாணவர்களும் கோரிக்கையின் பேரில் இந்தியாவுக்குள் நுழைவற்கு உதவப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள் உடபட பல்வேறு தொழில்கள் முடங்கின
- பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், வங்கிகள், பங்கு சந்தைகள் உள்பட பல்வேறு முக்கிய அத்தியாவசிய சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்டிரைக்' என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று நடந்த சென்சார் மென்பொருள் அப்டேட்டில் குளறுபடி ஏற்பட்டதால் மைக்ரோசாப்ட் சர்வர்கள் முடங்கின. இந்த சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது.
பாதிப்புகள் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில்பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.மைக்ரோசாப்ட் பங்குகள் 0.74 சதவீதம் சரிந்துள்ள்ள நிலையில் Crowdstrike பங்குகள் 11.10 சதவீதம் வரையில் சரிந்துள்ளன. இந்த பாதிப்புகளால் Crowdstrike நிறுவனம் 9 பில்லியன் டாலர்கள் [சுமார் ரூ.75,350 கோடி] சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.
- அனைத்து பயணிகளுக்கும் போதுமான உணவு, அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.
- 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்களுடன் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது.
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் (ஏ.ஐ.183) திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரஷியாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்கள் இருந்தனர். இதற்கிடையே ரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேறொரு விமானத்தில் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மும்பை விமான நிலையத்தில் மாற்று விமானம் (ஏ.ஐ.1179) ரஷியாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தது. அதில் அனைத்து பயணிகளுக்கும் போதுமான உணவு, அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த விமானம், 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்களுடன் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. இது தொடர்பாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, ஏ.ஐ.183 விமான பயணிகளுடன் ஏர் இந்தியா மீட்பு விமானம் ஏ.ஐ.1179 கிராஸ்நோ யார்ஸ்கில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது. ரஷியாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் கிராஸ்நோயார்ஸ் விமான நிலைய அதிகாரிகள், விமான போக்குவரத்துக்கான ரஷிய கூட்டாட்சி நிறுவனம் பயணிகளுக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.
- பெரு நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புக்காக CrowdStrike மென்பொருளை சார்ந்துள்ளது
- இது சைபர் தாக்குதல் கிடையாது என்றும் CrowdStrike சிஇஓ ஜார்ஜ் குர்டிஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மைக்ரோசாப்ட் வின்டோஸ் கணினி திரைகளில் நேற்று தோன்றிய புளூ ஸ்க்ரீன் ஆப் டெத் Blue Screen of Death (BSOD) குளறுபடி உலகம் முழுவதிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மைகோரசாப்டை ஐ.டி நிறுவனங்கள், விமான நிலையங்கள், வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியது. இதற்கு முக்கிய காரணம் CrowdStrike எனப்படும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் மைக்ரோசாப்டில் செய்ய முயன்ற அப்டேட் ஆகும்.

அமெரிக்கவைத் தலைமையிடமாக கொண்டு 2011 முதல் இயங்கி வரும் CrowdStrike சைபர் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமானது முன்னணி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், வங்கிகள், விமான நிலையங்களின் சைபர் ஸ்பேஸ் பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனம் ஆகும். சுருக்கமாக தனிநபர்கள் காஸ்பர்ஸ்கை, அவாஸ்ட் உள்ளிட்ட ஆட்டிவைரஸ்களை தங்களின் கணினியின் பாதுகாப்புக்காக நிறுவுவது போல், பெரு நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புக்காக CrowdStrike மென்பொருளை சார்ந்துள்ளது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் CrowdStrike மென்பொருளை உபயோகித்து வருகிறது.
CrowdStrike மென்பொருளை கணினியில் இன்ஸ்ட்டால் செய்ததும் அது ஆட்டோமேட்டிக்காக வைரஸ் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளையும், ஆபத்துகளையும் ஸ்கேன் செய்யும். கணினியில் உள்ள மிகவும் நுட்பமான தகவல்களையும் அணுகுவதால், இந்த மென்பொருளில் ஏற்படும் சின்ன பிரச்சனையும் கணினிக்கும் எளிதாக பரவும். சோனி நிறுவனத்தை வட கோரிய ஹேக்கர்கள் ப்ரீச் செய்த விவகாரத்தை ஆராய்ச்சி செய்தது, அமெரிக்க ஜனநாயக கட்சியின் செர்வர்கள் ஹேக் செய்யப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்ட ரஷிய சைபர் நடவடிக்கைகளை ஆராய்ந்தது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களிலும் CrowdStrike பணியாற்றியுள்ளது.

இந்நிலையில் தற்போது மைகோரஸாப்ட் விண்டோஸில் நடந்துள்ள இந்த சைபர் குளறுபடியாந்து தங்களின் நிறுவனம் மென்பொருளில் புதிதாக அறிமுகப்பபடுத்திய சாப்ட்வேர் அப்டேட் குளறுபடியானதால் ஏற்பட்டது என்று விளக்கம் CrowdStrike நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் manual ஆக மென்பொருளை ரீசெட் செய்து வருகிறோம் என்றும் அந்நிறுவனத்தின் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி பரவலாக கூறப்படுவது போல் இது சைபர் தாக்குதல் கிடையாது என்றும் CrowdStrike சிஇஓ ஜார்ஜ் குர்டிஸ் தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு வின்டோஸ் கணினிகளில் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் Mac, Linux உள்ளிட்டவற்றில் இயங்கும் கணினிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல் (வயது40). இவரது மனைவி லினி ஆபிரகாம் (38). இவர்களது குழந்தைகள் இரின் (14), இசாக் (9). மேத்யூஸ் மற்றும் அவரது மனைவி குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தனர்.
இதனால் மேத்யூஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குவைத் அம்பாசியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மேத்யூஸ் ராய்ட்டர்சில் உள்ள நிறுவனத்திலும், அவரது மனைவி லினி அல் அஹ்மதி கவர்னரேட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றினர்.
அவர்களது குழந்தைகள் குவைத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். விடுமுறை கிடைக்கும் போது கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு மேத்யூஸ் தனது குடும்பத்தினருடன் வந்து செல்வது வழக்கம். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்திருக்கிறார்.
பின்பு விடுமுறை முடிந்ததையடுத்து குவைத்துக்கு திரும்பினர். மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் நேற்று மாலை 4 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தங்களது வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். பின்பு 4 பேரும் வீட்டில் உள்ள படுக்கையறையில் படுத்து தூங்கியிருக்கின்றனர்.
அப்போது இரவில் அவர்களது வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த அவர்கள், அறை முழுவதும் புகைமூட்டமான பிறகே எழுந்துள்ளனர். ஆனால் அறை முழுவதும் புகையாக இருந்ததால் அவர்களால் வெளியே வர முடிய வில்லை.
இதனால் மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த ஊருக்கு வந்திருந்த மேத்யூஸ் மறறும் அவரது குடும்பத்தினர், நேற்று மாலை 4 மணிக்கு தான் குவைத்துக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் இரவு 8 மணிக்கு தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேரும் பலியாகினர்.
சொந்த ஊரிலிருந்து குவைத்துக்கு திரும்பிய 4 மணி நேரத்திலேய அவர்கள் பலியாகி விட்டனர். இது கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது.
- பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது. உலக அளவிலும் சொற்ப தலைவர்களுக்கே இந்த அளவிலான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

பிரதமர் மோடி, கடந்த 2009 ஆம் ஆண்டு எக்ஸ்[ட்விட்டர்] தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் தற்போது 10 கோடி ஃபாலோயர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் உரிமையாளர் எலான் மஸ்க் மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மஸ்க் தனது எக்ஸ் பதிவில், உலகில் அதிகம் பின்தொடரப்படும் தலைவர்களில் ஒருவராக ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மோடியை எக்ஸ் [ட்விட்டர்] தளத்தில் பின்தொடரும் கணக்குகளில் 60 சதவீதம் போலியானவை என்று சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- 81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
- பைடன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.
81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அதற்கு ஏற்றாற்போல் அண்மைக்காலமாக அவருடைய நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலையொட்டி டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.
இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் தேர்தலில் போட்டியிடுவேன் என பைடன் பிடிவாதமாக உள்ளார்.
இந்த நிலையில் ஜோ பைடன் தனது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அவரது மனநலம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பைடன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் அந்த பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுக்க செல்கிறார். அப்போது பைடனின் மனைவி பதற்றத்துடன் ஓடி வந்து பைடனை தடுத்து அவருக்கு புரிய வைக்கிறார். அதன் பின்னர் பைடன் அதிர்ச்சியுடன் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.
இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் விவாதங்களை உண்டாக்கி உள்ளது. பலரும் பைடனின் இந்த செயலை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
- 2 வாலிபர்கள் மட்டும் துணிச்சலாக ஒரு ஏணியுடன் வெள்ளத்தில் நடந்து வருகிறார்கள்.
- நாயை துணிச்சலாக வெள்ளத்தில் இருந்து மீட்ட வாலிபர்களை நிஜ ஹீரோக்கள் என வலைத்தளவாசிகள் பாராட்டினார்கள்.
வெள்ளத்தில் தவிக்கும் நாயை, 2 வாலிபர்கள் ஏணி உதவியுடன் மீட்கும் வீடியோ காட்சி இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வைரலானது.
ஒரு பெரிய தடுப்பணையின் மதகை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் நடுவே உள்ள தீவுபோன்ற பாறையில் நாய் ஒன்று, வெள்ளத்தை கடந்து வர முடியாமல் பரிதவித்தபடி நிற்கிறது. தடுப்பணையின் கரையில் ஏராளமானவர்கள் கூடிநின்று அதை வேடிக்கை பார்க்கிறார்கள்.
அப்போது 2 வாலிபர்கள் மட்டும் துணிச்சலாக ஒரு ஏணியுடன் வெள்ளத்தில் நடந்து வருகிறார்கள். அவர்கள் தடுப்பணையின் மேடான பகுதியில் இருந்து நாய் நிற்கும் தாழ்வான பாறை பகுதிக்கு ஏணியை பாலம்போல வைக்கிறார்கள். ஒருவர் ஏணியை பிடித்துக் கொள்ள மற்றொருவர் ஏணி வழியாக நாய் நிற்கும் பாறைக்கு சென்று நாயைப் பிடித்துக் கொண்டு ஏணியில் ஏறி வெள்ளத்தை கடக்கிறார்.
இந்த வீடியோவை சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டனர். சுமார் 15 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். நாயை துணிச்சலாக வெள்ளத்தில் இருந்து மீட்ட வாலிபர்களை நிஜ ஹீரோக்கள் என வலைத்தளவாசிகள் பாராட்டினார்கள்.
- குடியரசு கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
- துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக டிரம்ப் தனது வலது காதில் ‘பேண்டேஜ்’ போட்டிருந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடந்த 13-ந்தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தாமஸ் மேத்யூ என்ற இளைஞர் டிரம்பை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு தோட்டா டிரம்பின் வலது காதை உரசி சென்றது. இதில் அவரது காதின் மேல் பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. துப்பாக்கிச்சூட்டில் நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப், பாதுகாப்பு படையினரால் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே குடியரசு கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக வலது காதில் 'பேண்டேஜ்' போடப்பட்டிருந்தார். 'பேண்டேஜ்' உடன் அவர் மாநாட்டில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.
இந்த நிலையில் மாநாட்டின் நிறைவையொட்டி நேற்று முன்தினம் டிரம்ப் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையை கேட்பதற்காக அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். அவர்களில் பலர் வினோதமான முறையில் டிரம்புக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக டிரம்ப் தனது வலது காதில் 'பேண்டேஜ்' போட்டிருந்த நிலையில், அவரின் ஆதரவாளர்கள் பலரும் தங்களின் வலது காதில் 'பேண்டேஜ்' போட்டுக் கொண்டு மாநாட்டில் பங்கேற்றனர்.
படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய டிரம்ப் உடனான ஒற்றுமையின் அடையாளமாகவும், நாங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை அவருக்கு தெரியப்படுத்துவதற்காகவும் காதில் 'பேண்டேஜ்' அணிந்துள்ளதாக டிரம்பின் ஆதரவாளர்கள் கூறினர்.






