search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வாண வேடிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
    X
    வாண வேடிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

    2022ம் ஆண்டு பிறந்தது- ஆங்கில புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்து

    ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்ததுடன், சமூக வலைத்தளங்கள் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
    ஆக்லாந்து:

    பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, மறுமுனையில் இரவாக இருக்கும். அவ்வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது. இதன் அடிப்படையில் ஆங்கில புத்தாண்டு பிறப்பும் அமைகிறது. 

    இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், நியூசிலாந்தில் இந்திய நேரப்படி இன்று மாலையிலேயே புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது. நகரமே வண்ணமயமாக காட்சியளிக்கிறது. 

    வண்ண விளக்குகளால் ஒளிரும் ஆக்லாந்து நகர கட்டிடங்கள்

    2022-ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். 

    இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாடப்படும். ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்காவில் புத்தாண்டு பிறக்கும். நாளை மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக பேக்கர் தீவு மற்றும் ஹாவ்லாந்து தீவு இருக்கும். 

    Next Story
    ×