search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவேக்சின் தடுப்பூசி
    X
    கோவேக்சின் தடுப்பூசி

    கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்?

    கோவேக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
    நியூயார்க்:

    பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம் பெறவில்லை.
     
    கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
     
    இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பாக  உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு அக்டோபர் 26-ம் தேதி கூடுகிறது.

    இதுதொடர்பாக அந்த அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு கோவேக்சின் தடுப்பூசியுடன் மிக நெருக்கமாக பயணித்து வருகிறது. எங்கள் நோக்கம் அதிகமான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது. அதன்மூலம் அதிக மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×