search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச நிதியம்
    X
    சர்வதேச நிதியம்

    கொரோனா நெருக்கடியில் இந்தியா துரிதமாக செயல்பட்டது - ஐஎம்எப் பாராட்டு

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பாண்டில் 9.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 8.5 சதவீதமாகவும் இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
    வாஷிங்டன்:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா துரிதமாக செயல்பட்டது, நல்ல பதிலடி கொடுத்தது என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். பாராட்டி உள்ளது.

    குறிப்பாக நிதி ஆதரவு அளித்தது, பாதிக்கப்படக் கூடிய பிரிவினருக்கு ஆதரவை அதிகரித்தது என தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் சீர்திருத்தங்களையும், தனியார் மயத்தையும் தொடர்கிறது என கூறிய சர்வதேச நிதியம், அதிகாரிகள் தொடர்ந்து கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செய்ததாகவும் பாராட்டியது.

    Next Story
    ×