search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான சேவை
    X
    விமான சேவை

    இந்தியாவுக்கு செல்வோர் கவனமாக இருங்கள்... குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

    இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய அமெரிக்க குடிமக்கள், பயணத்திற்கு முன்னர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான போக்குவரத்து தடைக்கான சிவப்பு பட்டியலில் இந்தியாவை சேர்த்துள்ளது. 

    இந்நிலையில், அமெரிக்க அரசும் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி), இந்தியாவுக்கான 4ம் நிலை பயண சுகாதார அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரிசோதனை

    இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய அமெரிக்க குடிமக்கள், பயணத்திற்கு முன்னர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளி, சோப்பு அல்லது சானிடைசர் மூலம் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முக கவசங்கள் அணிவது மற்றும் நெரிசலான பகுதிகளைத் தவிர்ப்பது என தனிப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். காற்றோட்ட வசதி இல்லாத மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக முழு தடுப்பூசி போட்ட பயணிகளுக்கான பயண பரிந்துரைகளை சிடிசி வெளியிட்டிருந்தது. அதில், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டால், அமெரிக்காவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. செல்ல வேண்டிய நாடுகள் அறிவுறுத்தினால் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு சுய தனிமைப்படுத்தல் தேவையில்லை, என கூறியிருந்தது.
    Next Story
    ×