search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனை செல்லும் முன் பேசிய டிரம்ப்
    X
    மருத்துவமனை செல்லும் முன் பேசிய டிரம்ப்

    ’நான் நலமுடன் தான் இருக்கிறேன்’ - மருத்துவமனை செல்லும் முன் பேசிய வீடியோவை வெளியிட்டார் டிரம்ப்

    மருத்துவமனை செல்லும் முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். 

    அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா என இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களேதனிமைப்படுத்திக்கொண்டனர். வெள்ளைமாளிகையில் இருந்த டொனால்டு டிரம்பிற்கு நேற்று முதல் தொடர்ந்து லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

    காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக அதிபர் டிரம்ப் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் தற்போது (அக்டோபர் 3) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அதிபர் டிரம் மருத்துவனையில் அனுமதிக்கப்படுள்ளார் எனவும், சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் வெள்ளைமாளிகையில் வைத்து அதிபர் டிரம்ப் தனது உடல்நிலை தொடர்பான தகவல்களை வீடியோவாக எடுத்துள்ளார். உடல்நிலை தொடர்பாக அதிபர் டிரம்ப் எடுத்த வீடியோ அவரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் வெளியிடப்பட்டுள்ளது.



    தனது உடல்நிலை தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், ‘எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனைக்கு
    செல்ல உள்ளேன். நான் நலமுடன் தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனாலும், அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்யவே மருத்துவமனை செல்கிறேன். 

    மெலினியாவும்  சிறப்பாகவே உள்ளார். உங்கள் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் இதை மறக்கமாட்டேன்... நன்றி’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×