search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    சீனாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி - விலங்குகளுக்கு செலுத்தியதில் வெற்றி

    சீனா உருவாக்கியுள்ள ‘ஆர்கோவ்’ தடுப்பூசி எலிகளுக்கும், குரங்குகளுக்கும் செலுத்தி சோதித்து பார்த்ததில் வெற்றி கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
    பீஜிங்:

    கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்கு, அந்த வைரஸ் தொற்று முதன்முதலில் தோன்றிய சீனாவிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘ஆர்கோவ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி சோதித்து வருகிறார்கள். இந்த தடுப்பூசியும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவ்ஷீல்டு’ தடுப்பூசியை போல நோய் எதிர்ப்புசக்தியையும், டி செல்களையும் உற்பத்தி செய்யும் என தெரிய வந்துள்ளது.

    இந்த தடுப்பூசியை எலிகளுக்கும், குரங்குகளுக்கும் செலுத்தி சோதித்து பார்த்ததில் வெற்றி கிடைத்துள்ளது. அவற்றுக்கு நோய் எதிர்ப்புச்சக்தியும், டி செல்களும் உருவாகி இருப்பது அம்பலமாகி உள்ளது.

    தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில், தடுப்பூசி பாதுகாப்பானதா, நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குகிறதா என்பது மதிப்பிடப்படும்.
    Next Story
    ×