என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டு வந்த 4 வயது சீனா சிறுமி
Byமாலை மலர்5 Feb 2020 7:03 AM GMT (Updated: 5 Feb 2020 7:03 AM GMT)
மலேசியாவில், கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி முற்றிலும் குணமடைந்துள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர்:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி அனைவரும் அறிந்ததே. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரஸ் ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, மலேசியா உள்பட 23 நாடுகளுக்கு பரவியது.
கொரோனா பரவுவதை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் சீனர்களுக்கு இ-விசா ஆகியவற்றை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. சீனாவுக்கான விமான சேவையையும் நிறுத்தி வைத்துள்ளன.
சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், வடகொரியா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனோவின் தாக்குதல் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மலேசியா நாட்டில் 10 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மலேசியாவில், கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி முற்றிலும் குணமடைந்துள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
‘சீனாவில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் அவர் லங்காவியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்படிருந்தார். தற்போது சிறுமியின் உடல்நலம் சீராக உள்ளது. பூரண குணமடைந்ததால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்’, என மலேசிய சுகாதாரத்துறை அதிகாரி ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மலேசிய மருத்துவமனை வழங்கிய சுகாதார சான்றிதழுடன் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் சீனாவுக்குத் திரும்புவார்கள் என சீனத் தூதரகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X