search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானம் விழுந்த பகுதி
    X
    விமானம் விழுந்த பகுதி

    பாகிஸ்தான் -ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் வீரர்கள் உள்பட15 பேர் பலி

    பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் வீரர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி பகுதியில் உள்ள கார்ரிசன் நகரில் ராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளானது.

    விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதில்15 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள் என்று  ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விமானம் விழுந்த இடத்தில் புகை சூழும் காட்சி

    விபத்துக்கான காரணம் குறித்த தகவலை ராணுவம் வெளியிடவில்லை. விமானம் விபத்துக்கு உள்ளான குடியிருப்பு பகுதிகளில் இருந்து கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியானது.
    Next Story
    ×