search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவை விட இரு மடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி - ஐ.நா. அறிக்கை
    X

    சீனாவை விட இரு மடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி - ஐ.நா. அறிக்கை

    சீனாவை விட இரு மடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி கண்டு வருவதை ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. #UN #IndiaPopulation
    நியூயார்க்:

    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.

    இந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஐ.நா. சபையின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அவை வருமாறு:-

    * 1969-ம் ஆண்டு, இந்தியாவின் மக்கள் தொகை 541.5 மில்லியனாக இருந்தது. 1994-ல் இது, 942.2 மில்லியனாக அதிகரித்தது. தற்போது (2019) இந்திய மக்கள் தொகை 136 கோடி ஆகும்.

    * 2010-2019 ஆண்டுகள் இடையே இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.

    * சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி. 1994-ல் இது 123 கோடியாக இருந்தது. 1969-ல் 803.6 மில்லியனாக இருந்தது.

    2010-2019 ஆண்டுகள் இடையே சீனாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 0.5 சதவீதம் என்ற அளவுக்குத்தான் வளர்ந்து வந்துள்ளது.

    அதே நேரத்தில் இதே காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1.2 சதவீதம். ஆக சீனாவை விட இரு மடங்குக்கும் அதிகமான வேகத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது.



    * இந்தியாவில் 1969-ம் ஆண்டில் ஒரு பெண்ணின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம், 5.6 ஆக இருந்தது.

    மக்கள் தொகை வளர்ச்சி விகிதாச்சாரத்தை அப்போது குறைப்பதற்கு அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது.

    அதன் பயனாக 1994-ல் இந்திய பெண்ணின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம் 3.7 ஆக குறைந்தது.

    தற்போது படித்தவர்கள், வேலை பார்க்கிறவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை என்பதை கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டமாக ஆக்கிவிட்டனர். இதன் காரணமாக தற்போது ஒரு பெண்ணின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம் 2.3 ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் மனிதர்களின் வாழ்நாள் நீடித்துக்கொண்டே வருகிறது.

    1969-ல் வாழ்நாள் என்பது 47 ஆண்டுகளாக இருந்தது. 1994-ல் இது 60 ஆண்டுகள் என்ற அளவில் உயர்ந்தது. தற்போது அது 69 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இது சாதனை அளவாக பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் தற்போது 14 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் ஆகும். 10 முதல் 24 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கையும் 27 சதவீதமாகவே உள்ளது. ஆனால் 15 முதல் 64 வயது வரையிலானவர்களின் எண்ணிக்கை 67 சதவீதமாக உள்ளது.

    65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக உள்ளது.  #UN #IndiaPopulation

    Next Story
    ×