search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்துகிறது - ராகுல் குற்றச்சாட்டு
    X

    இந்தியாவில் ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்துகிறது - ராகுல் குற்றச்சாட்டு

    துபாய் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி இந்தியாவில் ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். #Intolerance #angerreign #angerreignIndia #RahulGandhi
    துபாய்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் இரண்டாவது நாளாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    அதில் ஒருகட்டமாக துபாய் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் கூறியதாவது:-

    20-ம் நூற்றாண்டு காலகட்டம் மூளை வறட்சியான நாட்களாக கழிந்தது. ஆனால், 21-ம் நூற்றாண்டில் மக்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கும், தங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களுக்கும் தற்போது செல்கின்றனர். அவர்களுக்கான வாய்ப்புகளை அவர்களின் தாய்நாடு உருவாக்கித்தர வேண்டும்.



    இந்தியா பல சிந்தனைகளை உருவாக்கியுள்ளது. அதேபோல், பல சிந்தனைகள் ஒன்றிணைந்துதான் இந்தியா உருவாகியுள்ளது. மற்றவர்களின் சிந்தனைகளை கேட்பதும் இந்தியாவின் சிந்தனையாக உள்ளது.

    சகிப்புத்தன்மை என்பது நமது கலாசாரத்தோடு ஒன்றர கலந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்தியாவில் சமுதாய பிரிவினையும், அளவுக்கதிகமான ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் தலையெடுத்து வருவதை நாம் பார்க்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்களின் மனப்போக்கில் இருந்துதான் இவை உருவாகின்றன.

    தங்கள் கருத்துகளை தெரிவிப்பவர்கள் கொல்லப்படும் இந்தியாவையும், பத்திரிகையாளர்கள் துப்பாக்கியால் சுடப்படும் இந்தியாவையும் நாங்கள் விரும்பவில்லை. இது மாற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்த சவாலை முன்வைத்துதான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை நாங்கள் சந்திக்கப் போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Intolerance #angerreign #angerreignIndia #RahulGandhi
    Next Story
    ×