என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
டிரம்ப்பின் அடுத்த அதிரடி: பாகிஸ்தானுக்கு தரும் நிதியை நிறுத்தி அமெரிக்காவில் சாலை, பாலங்கள் அமைக்க முடிவு
Byமாலை மலர்6 Jan 2018 6:59 PM IST (Updated: 6 Jan 2018 6:59 PM IST)
தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு தரும் நிதியை நிறுத்தி அந்த தொகையை வைத்து அமெரிக்காவில் சாலை மற்றும் பாலங்களை அமைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் ஹக்கானி தீவிரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா அளிக்கவிருந்த 20 லட்சம் டாலர் நிதியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று உத்தரவிட்டார். அமெரிக்க அரசின் இந்த முடிவால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அரசை கண்டித்து பாகிஸ்தானில் உள்ள இம்ரான் கான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆளும்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ராண்ட் பால் என்பவர், ‘அமெரிக்க நாட்டின் தேசிய கொடியை எரித்தும், அமெரிக்கா ஒழிக என்று கோஷமிட்டும் வரும் நாடுகளுக்கு அமெரிக்கா சல்லிக்காசு கூட கொடுக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நான் விரைவில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கிறேன். பாகிஸ்தானுக்கு அனுப்பும் பணத்தை வைத்து நமது தாய்நாட்டில் சாலைகள்,பாலங்கள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த மசோதா வழிவகுக்கும் என தனது வீடியோ செய்தியில் ராண்ட் பால் குறிப்பிட்டிருந்தார்.
ராண்ட் பால் வெளியிட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ’நல்ல யோசனை ராண்ட்’ என்று அவரை பாராட்டியும் உள்ளார். ராண்ட் பால் கொண்டுவரும் மசோதாவை பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் இதுவரை ஆண்டுதோறும் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதி அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews #trump #USaid #pakistan
Next Story
×