search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி
    X

    ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி

    ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார்.
    செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்:

    பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணமாக ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஜெர்மனி, ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முன்னதாக ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள மான்குலோயா மாளிகையில் ஸ்பெயின் அதிபர் மரியனோ ராஜோயை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இந்திய - ஸ்பெயின் இடையே வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் இரு நாடுகளுக்கிடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இதையடுத்து ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச இருக்கிறார். அவர்களது சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையயோன ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் இரு நாடுகளுக்கிடையேயான ஆண்டு உச்சிமாநாடும் இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, புதின் பங்கேற்க உள்ளனர்.

    இதில் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் மின்நிலையத்தின் 5 மற்றும் 6-வது  கட்டிடத்திற்கான பணிகளை துரிதப்படுத்துவது குறித்த விவாதமும் நடத்தப்பட உள்ளது.

    மேலும் இரு நாடுகளுக்கிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரயில்வே, கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×