என் மலர்tooltip icon

    உலகம்

    • பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    • இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால் கனடாவுக்கு வாருங்கள்.
    • இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    ஒட்டாவா:

    கனடாவில் சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வீடியோவை அங்குள்ள இந்திய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

    இந்த வீடியோ கனடாவில் வேலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது:

    வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது இப்படி வெறும் நீண்ட வரிசையாகக்கூட இருக்கும்.

    இது சர்வதேச மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது. வெளிநாடுகள் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று இந்தியர் பலர் பொதுவான நினைக்கிறார்கள்.

    இங்குள்ள நிலைமையை பார்த்தால் உங்களுக்கே புரியும், வெளிநாடு சென்றுள்ளவர்கள் வேலைக்கு எப்படி காத்திருக்கிறார்கள் என்று தெரியும்.

    இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள் ,இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என தெரிவித்துள்ளார்.

    கனடாவின் பல நகரங்களிலும் இதே நிலைமை இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


    • பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்துடன் புகுந்து அதனை வெடிக்கச் செய்தான்.

    இதில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 10 ராணுவ வீரர்களும், 10 அப்பாவி மக்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தாக்குதலில் அங்கிருந்த 6 வீடுகள் சேதமடைந்தன. இதில் 6 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

    • இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் சரமாரி தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேல் தலைநகர் நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்தியது.

    ஈரான் அணுஆயுதம் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் ஈரான் மறுத்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த மாதம் மத்தியில் திடீரென இஸ்ரேல் ஈரானின் அணுஆயுத திட்டத்தில் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஈரான் அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் போர் மூண்டது. 12 நாட்களாக நடைபெற்ற போர் பின்னர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD (Terminal High Altitude Area Defense) சிஸ்டம் அல்லது மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை இஸ்ரேலில் குவித்தது.

    ஈரான் ஏவுகணைகளை இந்த THAAD ஏவுகணைகள் இடைமறித்து அளித்தன. ஈரான் காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை 60 முதல் 80 முறை அமெரிக்காவின் THAAD ஏவுகணை சிஸ்டம் இடைமறித்து அளித்ததாக ராணுவ கண்காணிப்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    ஒவ்வொரு முறையும் THAAD சிஸ்டத்தை பயன்படுத்த 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகும். 12 நாட்களாக நடைபெற்ற சண்டையில் அமெரிக்கா ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அளிக்க 810 மில்லியன் முதல் 1.215 பில்லியன் டாலர் வரை செலவு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    அமெரிக்காவிடம் உள்ள மொத்த THAAD-களில் 20 சதவீதம் வரை செலவழித்திருக்கும் எனவும் கூறப்படுகிறது. கடந்த வருடம் THAAD-ஐ இஸ்ரேலில் அமெரிக்கா அமைத்தது.

    அமெரிக்கா வருடத்திற்கு 50 முதல் 60 THAAD-தான் உற்பத்தி செய்கிறது என்பதை குறிப்பிடத்தக்கது. வடகொரிய மற்றும் ஈரானின் கண்டம்விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வகையில் அமெரிக்கா இதனை தயாரித்துள்ளது.

    • ஐ.எஸ். (Islamic State), ரஷியாவுக்கு எதிராக செயல்படும் வரை யாரும் அதன்மீது கவனம் செலுத்தவில்லை.
    • மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    யூரேசியன் பொருளாதார யூனியன் (EAEU) மாநாட்டில் கலந்து கொண்ட ரஷியா அதிபர் புதின், ரஷியாவில் பிரிவினைவாதத்தை மேற்கத்திய நாடுகள் ஊக்கப்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

    இது தொடர்பாக புதின் கூறியதாவது:-

    ஐ.எஸ். (Islamic State), ரஷியாவுக்கு எதிராக செயல்படும் வரை யாரும் அதன்மீது கவனம் செலுத்தவில்லை. மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    யாரும் இதில் கவனம் செலுத்த விரும்புவதில்லை. ரஷியாவிற்கு எதிராக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்று விரும்பினர். நமது நாட்டில் பிரிவினைவாதத்தை கூட்டு மேற்கத்திய நாடுகள் ஊக்குவித்தபோது, பயங்கரவாதம் போன்ற தாக்குதல் நடத்த அது ஒரு கருவியாக இருந்தது.

    இவ்வாறு தெரிவித்தார்.

    பின்னர் ரஷியா தொலைக்காட்சியில் "உக்ரைன் மோதலில் தீர்வு காண்பது மற்றும் நேட்டோ செலவினத்தை விரிவுப்படுத்துதல் தொடர்பான அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு தொடர்ந்து சதி செய்து வருகிறது.

    ரஷியாவின் ஆக்கிரமிப்புத்தன்மையை சுட்டிக்காட்டி, நேட்டோ தற்போது அதன் உறுப்பினர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக பாதுகாப்பு செலவினங்களை உயர்த்தவும், ஐரோப்பாவில் ராணுவக் கட்டமைப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும்போது அந்த அமைப்பின் உறுப்பினர்கள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுகிறார்கள். சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு நாங்கள் எவ்வாறு வந்துள்ளோம் என்பது பற்றி யாரும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை" எனப் பேசியுள்ளார்.

    • ஒபாமாவை மிச்செல் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவின.
    • டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை

    முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.

    முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை. மேலும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நடக்கும் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது.

    இதன் விளைவாகவே விவாகரத்து வதந்திகள் வலுப்பெற்றன. இதனையடுத்து விவாகரத்து குறித்த வதந்திகளை மிச்செல் ஒபாமா மறுத்தார். ஆனாலும் விவாகரத்து வதந்திகள் தற்போது வரை குறைந்தபாடில்லை.

    இந்நிலையில், விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு மீண்டும் ஒருமுறை மிச்செல் ஒபாமா மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய மிச்செல் ஒபாமா, "எங்களுக்கு 60 வயது ஆகிறது. என் கணவருடன் நான் வெளியில் செல்வதை மக்கள் பார்க்காததால், எங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக வதந்திகள் பரவுகின்றன. எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், நாங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதில்லை.

    இறுதிச் சடங்குகள், பதவியேற்பு விழாககாலில் நான் கலந்து கொள்ள கூடாது என்று நான் முடிவெடுத்தேன். இந்த விஷயங்களில் இருந்து நான் விலகி இருக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தது தான் வதந்திகளுக்கு காரணமாகியுள்ளது" என்று தெரிவித்தார்.

    • காசாவில் உள்ள மனிதாபிமான அறக்கட்டளைக்கு 30 மில்லியன் டாலர் உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.
    • ரான் டெர்மர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நம்பிக்கைக்குரியவர் ஆவார்.

    காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார். மேலும், "காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால்தான் அங்கு நிறைய பணம் வழங்கப்படுகிறது. காசாவில் உள்ள மக்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்" என்று கூறிய டிரம்ப், காசாவில் உணவைத் திருடியவர்கள் மோசமானவர்கள் என்றும், அங்கு உணவு விநியோகம் திறமையாக செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

    முன்னதாக காசாவில் உள்ள மனிதாபிமான அறக்கட்டளைக்கு 30 மில்லியன் டாலர் உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.

    இதற்கிடையே இஸ்ரேலிய அமைச்சர் ரான் டெர்மர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு  பயணம் செய்கிறார். இந்த சந்திப்பின்போது போது காசாவில் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரான் டெர்மர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நம்பிக்கைக்குரியவர் ஆவார்.

    நேற்று காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.
    • டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

    அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அவர்களின் கிரீன் கார்டு மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்ந்தோர் சேவைகள் அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில், "பயங்கரவாதத்தை ஆதரிப்பது உள்ளிட்ட தீவிரமான குற்றங்களில் ஈடுபபவர்களின் கிரீன் கார்டு மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும். அமெரிக்காவில் குடியிருப்பது என்பது நிபந்தனை உடனான சலுகையே தவிர உத்தரவாதமுள்ள உரிமை இல்லை" என்று பதிவிட்டுள்ளது. 

    • பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • இந்த வாரத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    பிலிப்பைன்சின் தெற்கு கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் டாவோ ஆக்சிடென்டல் மாகாணத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவானது. 101 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வாரத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன்- ரஷியா அதிகாரிகள் இடையே துருக்கியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் மிகப்பெரிய அளவில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

    உக்ரைன்- ரஷியா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இதில் இருநாட்டு அதிகாரிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் குறைவாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இருநாடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை பரிமாற்றிக்கொள்ள ஏற்றுக்கொண்டன. இதனைத் தொடர்ந்து கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

    பேச்சுவார்த்தைக்கு இடையிலும் உக்ரைன் - ரஷியா மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 3 ஆண்டுகளை கடந்து போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனுடன் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    போரில் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் அதிகமான உக்ரைன் ராணுவ வீரர்களின் உடல்களை ஒப்படைக்கவும் தயார் என்று புதின் தெரிவித்துள்ளார். 

    • தீ விபத்தில் 22 பயணிகள் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • இந்த தீ விபத்தில் 330 மில்லியன் வோன் சொத்து சேதம் ஏற்பட்டது.

    தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்டட்டார்.

    கடந்த மே 31 அன்று ஹான் நதிக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ரெயிலுக்கு தீ வைக்கப்பட்டது. ரெயில் உள்ளே பெட்ரோல் ஊற்றி, தீ வைத்தார்.

    தீ விபத்தில் 22 பயணிகள் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வோன்-உம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த தீ விபத்தில் 330 மில்லியன் வோன் சொத்து சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    மனைவியுடன் விவாகரத்து வழக்கின் முடிவில் ஏற்பட்ட விரக்தியால் வோன் இந்த செயலைச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
    • ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

    அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் வரிசையில் இருப்பவர். இந்நிலையில் 61 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்தை வெற்றி கரமாக முடித்துள்ளார்.

    தனது நீண்ட நாள் காதலியான 55 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று நடந்தது.

    கடந்த 3 நாட்களாகவே அவர்களின் திருமண கொண்டாட்டங்களில் சூப்பர் ரிச்சாக 200 விருந்தினர்கள் சூழ நடைபெற்றது. திருமண செலவு  ரூ.430 கோடி என்று கூறப்படுகிறது.

    The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.

    ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×