என் மலர்tooltip icon

    உலகம்

    • பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • கைபர் பக்துன்க்வா, பஞ்சாப், சிந்து பகுதிகளில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானில் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தள்ளது. பலுசிஸ்தானில் 4 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு பேரும், பஞ்சாபில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.

    பருவமழைக்கு முந்தைய மழை கடந்த 26ஆம் தேதியில் இருந்து பெய்து வரும் நிலையில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வடமேற்கு மாகாணமாக கைபர் பக்துன்க்வா மிகவும் மோகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபில் 13 பேரும், சிந்துவில் ஏழு பேரும், பலுசிஸ்தான் மாகாணத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    பஞ்சாபில் 39 பேர் காயம் அடைந்தனர். சிந்துவில் 16 பேரும், கைபர் பக்துன்க்வாவில் 11 பேரும், பலுசிஸ்தானில் 2 பேரும் காயம் அடைந்தனர்.

    50 வீடுகளில் முற்றிலும் சேதடைந்துள்ளனர். 39 வீடுகள் லேசான சேதம் அடைந்துள்ளது. 

    • மோதிய வேகத்தில் 2 பஸ்களும் தீப்பிடித்து எரிந்தது.
    • 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    தான்சானியா நாட்டில் கிளிமஞ்சாரோ மோனி டங்கா சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று 2 பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    மோதிய வேகத்தில் 2 பஸ்களும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் வெளியில் வர முடியாமல் உயிர் பயத்தில் அலறினார்கள். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயைஅணைத்தனர். ஆனாலும் 2 பஸ்களில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றவர்கள் பஸ்சின் டயர் பஞ்சரானதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்தது.
    • இந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியாகினர்.

    கெய்ரோ:

    ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.

    அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து சம்பவம் சூடானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிலர் பாதிக்கப்பட்ட பெண்ணை உதவியற்ற நிலையில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
    • பாதிக்கப்பட்ட பெண் தனது மரியாதையைப் பாதுகாக்க வேண்டும் என்று கெஞ்சுவதை வீடியோவில் பதிவானது.

    வங்கதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கோமில்லா மாவட்டத்தில் முராத்நகரில் உள்ள ராமச்சந்திரபூர் பஞ்சகிட்டா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, அதே கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான அலி, பாதிக்கப்பட்ட வீட்டில் தனியாக இருந்தபோது வந்து  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் கிராம மக்கள் அலியை பிடிக்க முயன்றனர். இருப்பினும், அவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். சம்பவத்தின் போது அங்கிருந்தசிலர் பாதிக்கப்பட்ட பெண்ணை உதவியற்ற நிலையில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

    இந்த வீடியோ சில நிமிடங்களில் வைரலானது. பாதிக்கப்பட்ட பெண் தனது மரியாதையைப் பாதுகாக்க வேண்டும் என்று கெஞ்சுவதை வீடியோவில் பதிவானது.

    இந்த சம்பவம் தொடர்பாக முராத்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முக்கிய குற்றவாளியான அலி மற்றும் வீடியோவைப் பதிவு செய்து பரப்பிய நான்கு பேரைக் கைது செய்தனர். குற்றத்தில் ஈடுபட அலி வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்தவர் ஆவார். 

    இந்த சம்பவம் வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.  

    • போர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
    • ஏற்கனவே அமெரிக்காவின் பென்டகன் அமைப்பும் இதை கூறியிருந்தது.

    கடந்த வார இறுதியில் ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் க்ரோஸி கூறியுள்ளார்.

    ஜூன் 13 அன்று, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகக் கூறி, இஸ்ரேல் தெஹ்ரானின் அணு மற்றும் இராணுவ வசதிகளைத் தாக்கியது.

    பின்னர் அமெரிக்காவும் இந்தத் தாக்குதல்களில் இணைந்தது. ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதத்தின் உண்மையான அளவு தெளிவாகத் தெரியவில்லை.

    ஆனால் சிபிஎஸ் நியூஸிடம் பேசிய க்ரோஸி, ஈரான் சில மாதங்களுக்குள் தனது சொந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதற்கான மையவிலக்குகளை உருவாக்க முடியும் என்று கூறினார்.

    ஈரான் இன்னும் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப திறன்களைக் கொண்டுள்ளது, எனவே அவர்கள் விரும்பினால், அதை மீண்டும் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ஈரானின் அணுசக்தித் திறன்கள் இன்னும் சாத்தியமானதாக இருக்க முடியும் என்று பரிந்துரைத்த முதல் நிறுவனம் IAEA அல்ல. ஏற்கனவே அமெரிக்காவின் பென்டகன் அமைப்பும் இதை கூறியிருந்தது. ஆனால் இதை நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்,ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். 

    • ஆங்கிலம் பேசத் தெரியாத சிம்ரனுக்கு அமெரிக்காவில் உறவினர்கள் யாரும் இல்லை.
    • குடும்பத்தினரை இந்தியாவில் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்காக ஜூன் 20 அன்று இந்தியாவிலிருந்து சென்ற சிம்ரன் (24) என்ற இந்தியப் பெண் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

    புதன்கிழமை கண்காணிப்பு கேமராவில் கடைசியாகக் காணப்பட்ட சிம்ரன், அப்போது எந்த விதமான மன உளைச்சலிலும் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர் உண்மையிலேயே திருமணத்திற்காக வந்தாரா அல்லது இலவசப் பயணத்திற்காக இந்த அவ்வாறு பொய் சொன்னாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    ஆங்கிலம் பேசத் தெரியாத சிம்ரனுக்கு அமெரிக்காவில் உறவினர்கள் யாரும் இல்லை. வைஃபை மூலம் மட்டுமே இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தும் சிம்ரனின் குடும்பத்தினரை இந்தியாவில் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

    இந்த சம்பவம் முன்னதாக டொமினிகன் குடியரசில் காணாமல் போன இந்திய மாணவி சுதீக்ஷா கொனாங்கியின் சம்பவத்தை ஒத்ததாக அமைந்துள்ளது.

    • 12 நாள் மோதலுக்குப் பிறகு, இரு தரப்பிற்கும் இடையே செவ்வாய்க்கிழமை போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
    • பாதுகாப்பு மதிப்பீடுகள் முடிந்ததைத் தொடர்ந்து வான்வெளியை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரான் தனது மத்திய மற்றும் மேற்குப் வான்வெளியை சர்வதேச விமானங்களுக்காக மீண்டும் திறந்துள்ளதாக அதன் சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    ஈரானின் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜூன் 13 அன்று ஈரான் தனது வான்வெளியை மூடியது. 12 நாள் மோதலுக்குப் பிறகு, இரு தரப்பிற்கும் இடையே செவ்வாய்க்கிழமை போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

    இந்நிலையில் ஈரானிய சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (CAO) ஒப்புதல் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் பாதுகாப்பு மதிப்பீடுகள் முடிந்ததைத் தொடர்ந்து வான்வெளியை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, நாட்டின் கிழக்குப் பகுதி வான்வெளியை உள்நாட்டு, சர்வதேச மற்றும் கடந்து செல்லும் விமானங்களுக்காக ஈரான் திறந்துவிட்டது.

    இருப்பினும், வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள ஈரானிய விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் தரையிறங்கவோ அல்லது புறப்படவோ அனுமதிக்கப்படவில்லை. இந்த பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரம் 2:00 வரை மூடப்பட்டிருக்கும் CAO தெரிவித்துள்ளது. 

    • இதன்மூலம் ஒரு பெரிய வெற்றியைக் கண்டோம் என்று டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்தார்.
    • இந்த மசோதாவை எதிர்த்தே டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து எலான் மஸ்க் பதவி விலகினார்.

    அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த 'பிக் பியூட்டிபுல்' வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன்மூலம் ஒரு பெரிய வெற்றியைக் கண்டோம் என்று டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இந்த வெற்றிக்குப் பின்னால் பல குடியரசுக் கட்சி செனட்டர்களின் பணி இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

    குறிப்பாக செனட்டர்கள் ரிக் ஸ்காட், மைக் லீ, ரான் ஜான்சன் மற்றும் சின்தியா லுமிஸ் ஆகியோரின் பணியை அவர் பாராட்டினார்.

    அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மசோதா செனட்டில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்தார். இந்த மசோதா ஒப்புதல் வெற்றி டிரம்பிற்கு அதிக அரசியல் பலத்தை அளித்துள்ளது.

    மசோதாவின் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்த்தே டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து எலான் மஸ்க் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

    • இந்தத் தாக்குதலில் ஒரு உக்ரைனிய F-16 போர் விமானி உயிரிழந்தார்.
    • உக்ரேனிய படைகள் 211 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தன.

    உக்ரைன் மீது 477 டிரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளைக் கொண்டு ரஷியா இன்று மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    இந்தத் தாக்குதல்கள் குறைந்தது ஆறு மாகாணங்களில் பதிவாகியுள்ளன. உள்கட்டமைப்புகள் மற்றும் தொழில்துறை தளங்கள் சேதமடைந்துள்ளன.

    லிவிவ், பொல்டாவா, மைக்கோலாய்வ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்காசி மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் ஆகிய நகரங்களில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

    வீடுகள், செர்காசியில், பல மாடி கட்டிடங்கள் மற்றும் ஒரு கல்லூரி சேதமடைந்ததில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். இவானோ-ஃபிராங்கிவ்ஸ்கில் ஒரு பெண் காயமடைந்தார்.

    இந்தத் தாக்குதலில் ஒரு உக்ரைனிய F-16 போர் விமானி உயிரிழந்தார். தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், ஏழு வான் இலக்குகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும், கடைசி இலக்கைச் சுடும் போது அவரது விமானம் சேதமடைந்து விழுந்து நொறுங்கியதாகவும் உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

    உக்ரேனிய படைகள் 211 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தன.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உக்ரைனின் வான் பாதுகாப்பை பலப்படுத்த மேற்குலக நாடுகளின் கூடுதல் ஆதரவுக்கு அழைப்பு விடுத்தார். 

    • ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை.
    • மேற்பரப்பை அடைவதற்கு முன்பு அவற்றின் தீவிரத்தை இழக்கின்றன.

    நேபாளத்தில் இன்று (ஜூன் 29) 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் மதியம் 2.19 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.  இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

    நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை.

    ஏனெனில், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பூமிக்கு மிக அருகில் உணரப்படுவதால், உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு பரவலான சேதம் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது.

    இதற்கு மாறாக, ஆழமான நிலநடுக்கங்களில் இருந்து வரும் அதிர்வுகள் மேற்பரப்பை அடைவதற்கு முன்பு அவற்றின் தீவிரத்தை இழக்கின்றன.

    • பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு அவமதிப்பிற்குரியது என்று கூறி நிராகரித்தார்.
    • ஆயுதக் குழுக்களால் சுமார் 290 பேர், பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வட வசிரிஸ்தான் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தது.

    வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனம் ராணுவ கான்வாய் மீது மோதியதில் 16 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இரண்டு வீடுகளின் கூரைகளும் இடிந்து விழுந்ததில் ஆறு குழந்தைகள் காயமடைந்தனர்.

    இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபானின் ஒரு பிரிவான ஹபீஸ் குல் பகதூர் ஆயுதக் குழுவின் தற்கொலைப்படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலுக்கு இந்தியா ஆதரவளித்த பயங்கரவாதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் ராணுவம் குற்றஞ்சாட்டியது.

    ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு அவமதிப்பிற்குரியது என்று கூறி நிராகரித்தார்.

    2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் வன்முறை அதிகரித்துள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய இரு மாகாணங்களிலும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்களால் சுமார் 290 பேர், பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

    • வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • அவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

    இஸ்ரேலால் அக்கிரமிக்கப்ட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் வசிக்கும் இஸ்ரேலிய பொதுமக்கள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களைத் தாக்கியுள்ளனர்.

    பாலஸ்தீன கிராமமான காஃப்ர் மாலிக்கிற்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்க முயன்றபோது இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவ வாகனங்களுக்கும் தீ வைத்து அழித்தனர்.

    அவர்கள் கூட்டத்தை நெருங்கியபோது, அவர்கள் படையினரைத் தாக்கி பாதுகாப்பு வாகனங்களை அழித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய இராணுவத்தின் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறினார்.

    இந்த மக்கள் ஒரு சிறிய சிறுபான்மையினர் என்றும், அவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் நேதன்யாகு மேலும் கூறினார்.

    ×