என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஆஸ்திரேலியா பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் அமர்ந்தார் தேவா.
- ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.
சிட்னி:
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர்.
தனித்துவ குரல் வளத்தால் கவர்ந்தவருமான இசையமைப்பாளர் தேவாவின் இசை பயணத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் பாராட்டி கவுரவித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது.
இதனால் தேவா நெகிழ்ந்து போனார். இதுதொடர்பாக தேவா கூறியதாவது:
ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை பெருமை அளிக்கிறது.
எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.
இந்தத் தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.
எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் என் பலம்.
இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.
- முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 2-ம் தேதி தொடங்குகிறது.
- ஷமார் ஜோசப் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 2-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷமார் ஜோசப் இதுவரை 11 டெஸ்ட் போட்டியில் விளையாடி 51 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.
ஷமார் ஜோசப் விலகலை எக்ஸ் தளத்தில் அறிவித்து இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அவருக்கு பதிலாக ஜோஹன் லெய்ன் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
அறிமுக வீரராக சேர்க்கப்பட்டு இருக்கும் 22 வயதான வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான ஜோஹன் லெய்ன் 19 முதல் தர போட்டியில் ஆடி 495 ரன்னும், 66 விக்கெட்டும் எடுத்துள்ளார்.
- வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது.
- டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின.
பெர்லின்:
உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று போஸ்.
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.
இதற்கிடையே, உலகளாவிய வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது.
இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின.
இந்நிலையில், போஸ் நிறுவனமும் தற்போது ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
அதன்படி, உலகம் முழுவதிலும் உள்ள அதன் கிளையில் இருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என போஸ் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.
- அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் தொடர்ந்து 3 முறை அரை சதம் அடித்தார்.
- ஆட்டநாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன் விளாசினார்.
அடுத்து ஆடிய இலங்கை அணி பதும் நிசங்கா அதிரடி சதத்தால் 202 ரன்கள் எடுத்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 3 முறை அரைசதம் அடித்த 6வது இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா.
இதற்கு முன்னதாக, விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஹாட்ரிக் அரை சதமடித்து அசத்தி உள்ளனர்.
- சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
- வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.
புதுடெல்லி:
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரம், சட்டபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை அரசு ஊக்குவிக்கிறது.
கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி இருக்கிறது அல்லது திருப்பி அனுப்பி இருக்கிறது.
சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக ஒரு நாடு கூறுமேயானால், நாங்கள் அத்தகைய நபர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கிறோம்.
சட்டபூர்வமற்ற முறையில் இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்கிறோம்.
சட்டவிரோத இடப்பெயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வேலைவாய்ப்புகளில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட விசா முறைகள் குறித்து நாங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்திய மாணவர்களின் விண்ணப்பம் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் கல்வி நிலையங்களில் சேரமுடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
- இதில் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதியில் வெற்றி பெற்றது.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜப்பானின் டகேரு யுசுகே ஜோடி, அர்ஜெண்டினாவின் மேக்சிமோ கோன்சலஸ்-ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி 7-6 (7-5), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 202 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன்னும், திலக் வர்மா 49 ரன்னும், சஞ்சு சாம்சன் 39 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு பதும் நிசங்காவுடன் குசால் பெராரா இணைந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது, குசால் பெராரா அரை சதம் கடந்து 58 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் கடந்து 107 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில், இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
இந்தியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசத்தில் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
- அக்டோபர் 1, 2025 முதல் 6 மாத காலத்திற்கு இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.
புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் அங்கு மத்திய அரசின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டம் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பதற்றம் மிகுந்த பகுதிகளாக அறிவிக்கப்படும் இடங்களில் நீதிமன்றம் அனுமதியின்றி தேடுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரங்கள் இந்த ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நம்சாய் மாவட்டத்தில் உள்ள திராப், சாங்லாங், லாங்டிங் மாவட்டங்கள், நம்சாய் மாவட்டத்தில் நம்சாய், மகாதேவ்பூர், சௌகாம் ஆகிய காவல் நிலையங்களின் அதிகார வரம்புக்குள் வரும் பகுதிகளில் இந்தச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1, 2025 முதல் 6 மாத காலத்திற்கு இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மீண்டும் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு, மார்ச் 31, 2026 வரை அமலில் இருக்கும் என்று கூறி உள்ளது.
- இழிசொல் உரைத்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு கடும் கண்டனம்.
- மறைந்த தலைவர்களின் புகழை இழிவு படுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது அரசியல் நாகரிகமற்ற செயல்.
அண்ணா, எம்ஜிஆரை இழிச்சொல் உரைத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மேடைகளில் சமத்துவம் கண்ட, அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் சமதர்ம திராவிட அரசியலை தமிழ்நாட்டின் நிர்வாக அரசியலாகக் கட்டமைத்த பேரறிஞர் அண்ணா அவர்களையும்,
அண்ணா வழி திராவிடம் எனும் உயரிய நோக்கில் அதிமுக
நிறுவி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பிற்குரிய தலைவராக, மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் தலைவராக விளங்கிய நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும்,
இழிசொல் உரைத்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு கடும் கண்டனம்.
மறைந்த தலைவர்களின் புகழை இழிவு படுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது துளியும் அரசியல் நாகரிகமற்ற செயல்.
தமிழர்களுக்கே உரித்தான அறத்தை சீமான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கொள்கையை, வளர்ச்சியை செதுக்கிய ஒப்பாரும் மிக்காரும் அற்ற நம் தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அபிஷேக் சர்மா 31 பந்தில் 61 ரன்கள் விளாசினார்
- சுப்மன் கில் 4 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டு வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
சுப்மன் கில் 4 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். மறுமுனையில் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 31 பந்தில் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சஞ்சு சாம்சன் 23 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது.
2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் "லீடிங் லைட்" .
சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது.
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது.
அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
- பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
- இப்போட்டியின் போது அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்து களத்தில் இருந்து வெளியேறினார்.
8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இப்போட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்து களத்தில் இருந்து வெளியேறினார். அதேசமயம், அவர் வீல் சேரில் பெவிலியனுக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததன் காரணமாக, நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியானது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு காயம் பெரிய அளவில் இல்லை எனவும் நலமாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக கோப்பை தொடரில் விளையாடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.






