என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அருந்ததி ரெட்டி காயம் குறித்து வெளியான அப்டேட்
    X

    அருந்ததி ரெட்டி காயம் குறித்து வெளியான அப்டேட்

    • பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
    • இப்போட்டியின் போது அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்து களத்தில் இருந்து வெளியேறினார்.

    8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

    உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்து களத்தில் இருந்து வெளியேறினார். அதேசமயம், அவர் வீல் சேரில் பெவிலியனுக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததன் காரணமாக, நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியானது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் அவருக்கு காயம் பெரிய அளவில் இல்லை எனவும் நலமாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக கோப்பை தொடரில் விளையாடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×