என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • BC-க்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இரண்டு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
    • ஜனாதிபதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமயிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் BC-க்கு (பிற்படுத்தப்பட்டோர்) 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது.

    இந்த மசோதாக்கல் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.

    பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ரேவந்த் ரெட்டி கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி போராட்டம் நடத்தினா்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு, இது ஓபிசி-க்கு எதிரான மசோதா என குற்றம்சாட்டியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக BC-க்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. முன்னதாக 23 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    • பஹல்காம் குறித்து பேசியதற்காக ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது.
    • அதன்பேரில் சூர்யகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பஹல்காம் குறித்து பேசியதற்காக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஐசிசி அவருக்கு 30% அபராதம் விதித்துள்ளது.

    லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.

    இது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது. அதன்பேரில் சூர்யகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இதன்மூலம் ரிஸ்வான், விராட் கோலி சாதனை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.

    ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். கில் 2-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 22 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.

    இதன்மூலம் ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரிஸ்வான், விராட் கோலியின் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.

    டி20 ஆசிய கோப்பைப் பதிப்பில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:-

    289* - 2025-ல் அபிஷேக் சர்மா (6 இன்னிங்ஸ்)

    281 - 2022-ல் முகமது ரிஸ்வான் (6 இன்னிங்ஸ்)

    276 - 2022-ல் விராட் கோலி (5 இன்னிங்ஸ்)

    196 - 2022-ல் இப்ராஹிம் ஜத்ரான் (5 இன்னிங்ஸ்)

    • பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம்.
    • பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது.

    ஐ.நா. ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்திய நேரப்படி இன்று இரவு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேச அழைக்கப்பட்டார். அப்போது, அரங்கத்தில் இருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறினர். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.

    என்றாலும், நேதன்யாகு வெறிச்சோடிய ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம். பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும். காசாவில் பஞ்சத்திற்கு ஹமாஸ் உணவை திருடுவதே காரணம்.

    உலகின் பெரும்பகுதியினர் அக்டோபர் 7ஆம் தேதியை நினைவு கொள்வதில்லை. ஆனால் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதைவிட, தீமையை ஏற்றுக் கொள்கின்றனர். பொது வெளியில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் பல தலைவர்கள், ரகசியமாக (மூடிய அறைக்குள்) நன்றி தெரிவிக்கின்றனர்.

    பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் சில நாடுகளின் முடிவு, அப்பாவி யூத மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும். எங்களுடைய தொண்டையில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்க அனுமதிக்கமாட்டோம்.

    இவ்வாறு நேதன்யாகு தெரிவித்தார்.

    • மட்டி படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணாவும், ரிதன் கிருஷ்ணாஸ்சும் இந்த படத்திலும் நடிக்கின்றனர்.
    • பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்குகிறது.

    மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான Mud ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக மட்டி என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்தவர் இயக்குனர் டாக்டர் பிரகபல்.

    இவர் அடுத்ததாக, அதைவிட சுவாரஸ்யமான ஒரு கதையாக கிடா சண்டை பந்தையத்தை படமாக உருவாக்கவுள்ளார்.

    இந்த படத்தில், மட்டி படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணாவும், ரிதன் கிருஷ்ணாஸ்சும் இந்த படத்திலும் நடிக்கின்றனர்.

    இந்த படத்தின் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மது சூதன் ராவ் நடித்துள்ளார். மற்றும் சில தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    ஒளிப்பதிவாளர் உதயகுமார், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்குகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
    • இலங்கை வாய்ப்பை இழந்து விட்டது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் 6-வது மற்றும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இலங்கை வாய்ப்பை இழந்து விட்டது. அதனால் இது சம்பிரதாய மோதலாகவே இருக்கும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 22-ல் இந்தியாவும், 9-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. 

    • ரஷியாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வேன்.
    • கடினமான காலகட்டத்தில் நாட்டுடன் இருக்க வேண்டும், நாட்டுக்கு உதவ வேண்டும் என்று மிகவும் விரும்பினேன்.

    உக்ரைன் அதிபராக இருக்கும் ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போர் முடிவுக்கு வந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகுவேன். மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். ரஷிய போர் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழு அளவில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து தற்போது வரை சண்டை நீடித்து வருகிறது. ஜெலன்ஸ்கி கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து அதிபராக இருந்து வருகிறார்.

    "ரஷியாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வேன். ஏனென்றால், தேர்தல் எனது இலக்கு அல்ல. மிகவும் கடினமான காலகட்டத்தில், என் நாட்டுடன் இருக்க வேண்டும், என் நாட்டுக்கு உதவ வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். போர் முடிவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு" என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    • என்னைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது.
    • திமுக கூட்டணி உடையும் என்ற எடப்பாடி பழனிசாமிதான் உடைந்து கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளதே,உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

    அதற்கு செல்வப் பெருந்தகை பதில் அளித்ததாவது:-

    எல்லோருக்கும் எழுத்துரிமை, கருத்துரிமை, பேச்சு உரிமை உள்ளது. அவரவர் கருத்துகனை தெரிவிக்கின்றனர். எந்த கருத்து சொன்னாலும் காங்கிரஸ் மேலிடத்தில் அதை சொல்லி விடுகிறேன். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டும்தான் முடிவு எடுக்கும்.

    என்னைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும். இது குறித்து பேசுவார்கள். இதை பெரிது படுத்த வேண்டாம். திமுக கூட்டணி உடையும் என்ற எடப்பாடி பழனிசாமிதான் உடைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போய்ட்டாங்க. தற்போது செங்கோட்டையன் போய்க்கொண்டிருக்கிறார். அதிமுக மூழ்கும் கப்பல். அதில் ஏற பயந்து கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். இன்னும் யார் யார் போவார்கள் என்று தெரியாது. பயத்தில் அச்சத்தில் அங்கு இருக்கிறார்கள். 5 தேர்தல்களில் தொடர் தோல்வி.. 6-வது தேர்தலில் இன்னும் அதைவிட மோசமான தோல்வியை அதிமுக தழுவப் போறாங்க.

    தமிழகத்தில் காங்கிரஸ் தேய்ந்து கொண்டிருக்கிறது என்று யார் சொன்னது. உங்களுக்கு ஏன் இந்த பேராசை, நப்பாசை. 20 ஆயிரம் கமிட்டிகளை போட்டிருக்கோம். அதற்கான Database (தரவுகள்) மேலிடத்தில் உள்ளது. ஆயிரம் பொறுப்பாளர்களை நியமித்து கமிட்டிகளை போட்டிருக்கோம்.

    வேலூர் மாவட்டத்தில் கிராம கமிட்டி உள்ளது. கூட்டத்தில் கிராம கமிட்டி தலைவர் என ஒருவரை அறிமுகம் செய்துள்ளேன். காங்கிரசை பற்றி குறைத்த மதிப்பிடாதீர்கள். இது யானை மாதிரி. எந்திச்சி நின்னுன்னு வச்சிங்கோங்க, என்ன நடக்கும்..,

    விஜய் பற்றி கேள்வி கேட்காதீர்கள்.

    இவ்வாறு செல்லப்பெருந்தகை பதில் அளித்தார்.

    • செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார்.
    • செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த போராட்டமாக இருந்தாலும் எங்களது ஆட்சியில் அனுமதி கொடுத்தோம். சிவாஜி கணேசனை விட மிகவும் சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி.

    செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.

    தேர்தல் முடியும் வரை தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பார், தேர்தல் முடிந்த பின் எந்த கட்சியில் இருப்பார் என தெரியாது.

    கரூரில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு மணல் திருட்டு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியால் அவரையே காப்பாற்றிக் கொள்ள முடியாது, அவரை நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும்.
    • தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன.

    47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா வைத்துள்ளதாக தென்கொரியா எச்சரித்துள்ளது.

    வட கொரியாவிடம் 47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் (2,000 கிலோகிராம்) அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கலாம் என தென் கொரியா எச்சரித்துள்ளது.

    விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (FAS) உள்ளிட்ட நிபுணர்களின் மதிப்பீடுகளின்படி, வட கொரியா 90% அல்லது அதற்கு மேற்பட்ட சுத்தமான 2,000 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாகக் தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு விவகார (unification) அமைச்சர் சுங் டோங்-யோங் தெரிவித்தார்.

    அணுசக்தி சர்வதேச முகமையின் (IAEA) கூற்றுப்படி, ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும். அந்த வகையில், வட கொரியாவிடம் உள்ள 2,000 கிலோகிராம் யுரேனியம் மூலம் சுமார் 47 அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும்.

    தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன. ஏற்கனவே 50 அணு குண்டுகளை வடகொரியா வைத்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    வட கொரியாவை தடுத்து நிறுத்த பொருளாதாரத் தடைகள் பயனுள்ளதாக இருக்காது என்றும், கொரியா அமெரிக்கா இடையேயான உச்சிமாநாடு மட்டுமே ஒரே தீர்வு என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

    அமெரிக்காவின் மிரட்டலுக்காக அணு ஆயுதத்தை கைவிட முடியாது என்றும் தங்கள் இருப்பை நிலைநாட்ட அது மிகவும் முக்கியம் என்றும் வட கொரியா அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கிறார்.
    • இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    நடிகர் சிலம்பரசன், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் தனது 49-வது படத்தில் நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    இந்நிலையில் இந்த படம் குறித்த ப்ரோமோவை அக்டோபர் 4-ந் தேதி வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். முதல் முறையாக சிம்பு- வெற்றிமாறன் இணைவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

    இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என வெற்றி மாறன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.
    • அரசு அரசாணை வெளியிட்டது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உதரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீர் நிலைகள், வனப் பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் மரங்களை சர்வே எடுக்க வேண்டியுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்க இருப்பதால் மரங்களை கணக்கெடுப்பதற்கும், அவற்றை நீக்குவதற்கும் மேலும் 3 கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. அரசு அரசாணை வெளியிட்டது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    ஒவ்வொரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

    தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் அகற்றவில்லை என்றால், அதற்கான செலவினங்களை நில உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கலாம். அவர்கள் அனுமிக்காவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அத்துடன், வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதை தள்ளி வைக்க முடியாது. மரங்களை அகற்றுவது தொடர்பாக திட்டங்களை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அன்று உரிய பதிலை அளிக்காவிடில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனத் தெரிவித்தனர்.

    ×