என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இன்று அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவி வழிபடப்படுகிறார்.
    • அரச மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும்.

    நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. அப்படியான நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவி வழிபடப்படுகிறார்.

    புனித விழாவாக கருதப்படும் நவராத்திரி முழுவதும், மக்கள் ஏதாவது ஒரு பரிகாரத்தை கடைப்பிடிக்கின்றனர். இன்று, வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்க உதவும் ஒரு எளிய பரிகாரத்தைப் பற்றி பார்ப்போம்.

    தேங்காய் பரிகாரத்தின் முக்கிய அம்சங்கள்...

    இந்த எளிய பரிகாரத்தின் நோக்கமும் செயல்முறையும் பின்வருமாறு:

    தேவையான பொருள்: ஒரு முழுமையான தேங்காய்.

    செய்யும் முறை:

    * பூஜை அறையில் அல்லது சுத்தமான இடத்தில் அமர்ந்து தேங்காயை மடியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    * முழுமையான நம்பிக்கையுடன் 'ஓம் தும் துர்காயை நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

    * மந்திரத்துடன் சேர்ந்து, உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் மற்றும் தடைகளை நீக்குமாறு துர்கா தேவியிடம் மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    * பிரார்த்தனை முடிந்ததும், அந்தத் தேங்காயை எடுத்துச் சென்று அருகில் உள்ள அரச மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும்.

    நம்பிக்கை:

    * தேங்காய் அனைத்து எதிர்மறை ஆற்றலையும் (Negative Energy) மற்றும் தடைகளையும் தனக்குள் உறிஞ்சிக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.

    இந்த பரிகாரத்தால் கிடைக்கும் பலன்கள்:

    * இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பின்வரும் பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

    காரியத் தடைகள் நீங்கும்:

    நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செயலிலும் இருக்கும் தடைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.

    கடன் பிரச்சனைகள் தீரும்:

    பணப்புழக்கம் சீராகி, கடன் சுமை குறைய வழிவகுக்கும்.

    உறவுகள் மேம்படும்:

    குடும்ப உறவுகள், நண்பர்கள் மற்றும் பிறருடனான உறவுகளில் இருந்த சிக்கல்கள் நீங்கி, நல்லிணக்கம் உண்டாகும்.

    திருமணத் தடை விலகும்:

    நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தைச் செய்தால், விரைவிலேயே நல்லபடியாகத் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஆறாம் நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    ஆறாம் நாள் போற்றி

    ஓம் பொன்னரசியே போற்றி

    ஓம் நவமணி நாயகியே போற்றி

    ஓம் இன்னமுதாய் இருப்போய் போற்றி

    ஓம் சிங்கார நாயகியே போற்றி

    ஓம் செம்பொன் மேனியளே போற்றி

    ஓம் மங்காத ஒளியவளே போற்றி

    ஓம் சித்திகள் தருவாய் போற்றி

    ஓம் திக்கெட்டும் பரவினோய் போற்றி

    ஓம் சுத்த பரிபூரணியே போற்றி

    ஓம் மகாமந்திர உருவே போற்றி

    ஓம் மாமறையுள் பொருளே போற்றி

    ஓம் ஆநந்த முதலே போற்றி

    ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி

    ஓம் செம்மேனியாய் மிளிர்வாய் போற்றி

    ஓம் மாகேஸ்வரியே போற்றி

    ஓம் மகா சண்டிகையே போற்றி

    • காத்யாயன முனிவர் அம்பாளை நோக்கித் தவம் இருந்து, தேவியை தன் மகளாகப் பெற்றார்.
    • கடுமையான போரில் மகிஷாசுரனை வதம் செய்து, உலகத்தை அசுரரிடமிருந்து காப்பாற்றினார்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் – பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.

    இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

    அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் 6-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'காத்யாயனி தேவி'. காத்யாயனி என்பவள் நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.

    காத்யாயன முனிவர் அம்பாளை நோக்கித் தவம் இருந்து, தேவியை தன் மகளாகப் பெற்றார். காத்யாயனரின் தவப் பலனாக தேவி காத்யாயனியின் வடிவம் பெற்றதால், அவளுக்கு 'காத்யாயனி' என்று அழைக்கப்படுகிறார்.

    மகிஷாசுரன் என்ற அசுரன் தேவகோட்டங்கள் அனைத்தையும் துன்புறுத்தியபோது, விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோரின் சக்திகள் இணைந்து உருவானவள் துர்கை. அந்த சக்தியே காத்யாயனி. இவர் கடுமையான போரில் மகிஷாசுரனை வதம் செய்து, உலகத்தை அசுரரிடமிருந்து காப்பாற்றினார். காத்யாயனி தேவி சிங்க வாகனத்தில் அமர்ந்திருப்பார்.

    நவராத்திரி வழிபாடு:

    துர்கா வழிபாட்டில் நவராத்திரியின் ஆறாவது நாளில் காத்யாயனி வழிபாடு செய்யப்படுகிறாள். மகாசுரனை வதம் செய்ய துர்கா தேவி எடுத்த அவதாரங்களில் இதுவும் ஒன்று.

    பாகவத புராணத்தில், யமுனையின் கரையில் கோபிகைகள் 'காத்யாயனி விரதம்' இருந்து, "கிருஷ்ணனை எங்கள் வாழ்க்கைத்துணையாக வேண்டும்" என வேண்டினார்கள். அவர்களின் விருப்பம் நிறைவேறியது. அதனால் இவர் திருமண ஆசீர்வாதம் வழங்குபவள் என்றும் கருதப்படுகிறார்.

    திருமண வரம் அருளும் தேவியாக குன்றத்தூரில் காத்யாயனி அம்மன் கோவில் கொண்டுள்ளாள்.

    மார்கழி மாதத்தில் வடமாநிலங்களில் இளம்பெண்கள் நல்ல வாழ்க்கைத்துணையை வேண்டி "காத்யாயனி விரதம்" அனுசரிக்கின்றனர்.

    காத்யாயனி தேவியை வழிபடுவதால் துணிவு, திருமண சௌபாக்கியம், அசுர சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பக்தர்களை பாபங்களிலிருந்து காப்பாற்றி, சௌபாக்கியமும் துணிவும் அருள்பவர்.

    ஸ்லோகம்:

    'ஓம் தேவி காத்யாயன்யை நமஹ' என்று ஜபிக்க வேண்டும்.

    • ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது.
    • தமிழ்நாடு நீண்ட காலமாக செய்து வருகிறது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தமிழ்நாட்டை போல் தெலுங்கானாவிலும் கல்வி திட்டங்கள் கொண்டு வரப்படும் என ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு நீண்ட காலமாக செய்து வருகிறது. அன்ன கொடி எப்போதோ பறந்தது. மறுபடியும் பறக்க விட்டது எனக்கு பெருமை. அதை மற்றவர்களும் பின்பற்றுவது தமிழ்நாட்டுக்கு பெருமை என்றார்.

    மேலும் நடிகர் ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பது குறித்த கேள்விக்கு, ரஜினியும் நானும் மீண்டும் இணைந்து படம் பண்ணுவோம். ரஜினியும் நானும் கண்டிப்பாக இணைந்து நடிப்போம். ஏற்கனவே இருவரும் சேர்ந்து நடித்திருந்தாலும், மீண்டும் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என கூறினார்.

    • இந்தியாவிடம் முக்கிய பயங்கரவாதிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
    • இருநாட்டு பிரச்சனைகளை இருநாடுகளுமே பேசி தீர்த்து கொள்ளும்.

    ஐ.நா. சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதியான மனிதர் என்று புகழாரம் சூட்டினார். தெற்காசியாவில் அமைதி நிலவ பங்காற்றிய டிரம்ப்க்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென மீண்டும் அவர் வலியுறுத்தினார்.

    மேலும் இந்தியாவுடன் அமைதியை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறி இருந்தார். இதற்கு இந்தியா பதில் அளித்துள்ளது. ஐ.நா. அவையில் இந்திய பிரதிநிதி கூறியதாவது:

    * பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம் அனைத்தையும் அழித்து ஒழிக்க வேண்டும்.

    * இந்தியாவிடம் முக்கிய பயங்கரவாதிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

    * பயங்கரவாதிகள், பயங்கரவாதத்திற்கு உதவுவோரை விட்டு வைக்கும் எண்ணமில்லை.

    * அமைதியை பாகிஸ்தான் விரும்புகிறது என்றால் பயங்கரவாதத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

    * அணு ஆயுத மிரட்டலுக்கு பணிய மாட்டோம்.

    * அணு ஆயுத மிரட்டலின் பின்னணியில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கிறது.

    * இருநாட்டு பிரச்சனைகளை இருநாடுகளுமே பேசி தீர்த்து கொள்ளும்.

    * இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் நபர் தலையீடுக்கு இடமில்லை என்று இந்திய பிரதிநிதி திட்டவட்டமாக கூறினார்.

    • சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள்.
    • விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும்.

    சென்னை:

    உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி அறிவித்தது.

    இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

    இவர்களுக்கான ஹால்டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1905 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள்.

    விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும். 9 மணிக்கு மேல் வரக்கூடிய தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுதுவார்கள்.

    • 1942-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் `தினத்தந்தி' நாளிதழை தொடங்கி வெளியிட்டார்.
    • சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோருக்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்.

    சென்னை:

    `தமிழர் தந்தை'சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    `தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்கிற கிராமத்தில் 27.9.1905 அன்று பிறந்தார். செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டில் சட்டப்படிப்பு முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கின்ற நாட்களிலேயே சிறு தொழில்கள் செய்து முன்னேறுவது குறித்து பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளார்.

    1942-ம் ஆண்டு முதன்முதலாக `மதுரை முரசு' என்ற வாரம் இருமுறை இதழையும், பின்னர் `தமிழன்' என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும் என்கிற கொள்கைப் பிடிப்பின் காரணமாக, இவரது பத்திரிகையை ஆங்கிலேய அரசு தடை செய்தும்கூட, இவர் தம் கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர்.

    1942-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் `தினத்தந்தி' நாளிதழை தொடங்கி வெளியிட்டார். தொடர்ந்து, `மாலை மலர்' என்ற மாலைப் பத்திரிகையையும் `ராணி' என்ற வார இதழையும் தொடங்கினார். பத்திரிகைகளில் மக்கள் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தமிழ்ச் சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்கள் உள்ளிட்ட யுக்திகளைக் கையாண்டார்.

    நாளிதழில் ஏராளமான படங்களுடன் செய்திகளை வெளியிட்டு தமிழ் இதழியல் துறையில் முத்திரை பதித்தார். 1942-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில் சட்டமன்றப் பேரவைத் தலைவராகப் பணியாற்றினார். அப்போது, சட்டப்பேரவை விதிகள் ஆங்கிலத்தில் இருப்பது பொருத்தமாக இருக்காது என்பதை அறிந்து தமிழில் மொழிபெயர்த்தார். கருணாநிதி முதல்-அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்1969-ல் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றினார். தமிழ் மீதும், தமிழர் மீதும் மாறாப் பற்று கொண்டு தம் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டதனால், அனைவராலும் "தமிழர் தந்தை" என அன்போடு அழைக்கப்படுகிறார்.

    சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோருக்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில், அவரின் பிறந்த நாளான செப்டம்பர் 27-ந் தேதி அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.
    • சக்தி மற்றும் அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவியை மனமுருக வணங்கி ஆசியை பெறுவோமாக!

    அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    நவராத்திரி முதல் மூன்று தினங்கள் துர்க்கைக்கு உரியதாகும். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கு உரியதாகும். இறுதி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கு உரியதாகும்.

    நவராத்திரி ஒன்பது தினங்களிலும் அம்பாள் ஒன்பது வகையான திருக்கோலங்களுடன் ஆராதிக்கப் பெறுகிறாள்.

    முதல் நாளில் மூன்று வயதுள்ள பாலையாகவும், இரண்டாம் நாளில் ஒன்பது வயதுள்ள குமாரியாகவும்,

    மூன்றாம் நாளில் பதினைந்து வயதுள்ள தருணியாகவும், நான்காம் நாளில் பதினாறு வயதுள்ள சுமங்கலியாகவும்,

    ஐந்தாம் நாளில் ரூபிணியாகவும், ஆறாம் நாளில் ஸ்ரீவித்யா ரூபிணியாகவும், ஏழாம் நாளில் மகா துர்க்கையாகவும்,

    எட்டாம் நாளில் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாளில் சும்பன், நிசும்பனைக் கொன்ற சரஸ்வதி தேவியாகவும்,

    பத்தாம் நாளில் சிவ சக்தி ஐக்கிய ரூபிணியாகவும் வழிபடுதல் வேண்டும்.

    யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்

    தீதுநன்மை எல்லாம் காளி தெய்வ லீலையன்றோ

    பூதம் ஐந்துமானாய் காளி பொறிகள் ஐந்துமானாய்

    துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய்

    -என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முப்பெரும் தேவியர்களும் ஒன்றாகி நாம் ஒவ்வொருவருடைய துன்பங்களையும், தொல்லைகளையும் போக்கி இன்ப வாழ்வு வழங்க நவராத்திரி விழாவையே நாம் கொண்டாடுகிறோம்.

    மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.

    நவராத்திரியின் ஆறாம் நாளில் காத்யாயனி தேவிக்கு விருப்பமான சாம்பல் நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் சமநிலை மற்றும் நிலத்தன்மையை குறிக்கிறது. சக்தி மற்றும் அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவியை மனமுருக வணங்கி ஆசியை பெறுவோமாக!

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அபிஷேகம், அலங்காரம்.
    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-11 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பஞ்சமி காலை 10.17 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : அனுஷம் நள்ளிரவு 12.09 மணி வரை பிறகு கேட்டை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி கோவிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சனம், திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அபிஷேகம், அலங்காரம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மோகினி அலங்காரம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கீர்த்தி

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-தனம்

    கடகம்-லாபம்

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-கடமை

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- உயர்வு

    மகரம்-அமைதி

    கும்பம்-அன்பு

    மீனம்-பயணம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். குடும்பத்தினர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

    ரிஷபம்

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். கவுரவம், உயரும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வங்கி சேமிப்பு உயரும்.

    மிதுனம்

    ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாயப்புகள் வந்து சேரலாம்.

    கடகம்

    வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

    சிம்மம்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார முன்னேற்றம் கருதி புதிய பங்குதாரர்களை தேடிச்செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்ப்பாடுகள் வந்து அகலும்.

    கன்னி

    தொட்டது துலங்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். பொருள் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் கூடும். அரசு வழி அனுகூலம் ஏற்படும்.

    துலாம்

    தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழி சச்சரவு அகலும்.

    விருச்சிகம்

    தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

    தனுசு

    வளர்ச்சி கூடும் நாள். பேசும் நண்பர்களிடம் நாசூக்காகப் பேசுவது நல்லது. வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம்.

    மகரம்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை கூடும். வர வேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

    கும்பம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    மீனம்

    யோகமான நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

    • ஆஸ்திரேலியா பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் அமர்ந்தார் தேவா.
    • ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.

    சிட்னி:

    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர்.

    தனித்துவ குரல் வளத்தால் கவர்ந்தவருமான இசையமைப்பாளர் தேவாவின் இசை பயணத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் பாராட்டி கவுரவித்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது.

    இதனால் தேவா நெகிழ்ந்து போனார். இதுதொடர்பாக தேவா கூறியதாவது:

    ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை பெருமை அளிக்கிறது.

    எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    இந்தத் தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.

    எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் என் பலம்.

    இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

    • முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 2-ம் தேதி தொடங்குகிறது.
    • ஷமார் ஜோசப் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 2-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

    கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷமார் ஜோசப் இதுவரை 11 டெஸ்ட் போட்டியில் விளையாடி 51 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

    ஷமார் ஜோசப் விலகலை எக்ஸ் தளத்தில் அறிவித்து இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அவருக்கு பதிலாக ஜோஹன் லெய்ன் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அறிமுக வீரராக சேர்க்கப்பட்டு இருக்கும் 22 வயதான வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான ஜோஹன் லெய்ன் 19 முதல் தர போட்டியில் ஆடி 495 ரன்னும், 66 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

    ×