என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group-2A"

    • சார்பதிவாளர் உள்ளிட்டபல்வேறு காலி இடங்களை நிரப்ப குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
    • பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

    சென்னை:

    மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள சார்பதிவாளர், இளநிலை உதவியாளர், வனவர் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்களை நிரப்ப, குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான (குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ) அறிவிக்கை கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

    இந்நிலையில், குரூப் 2, 2ஏ பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் மேலும் 625 அதிகரிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

    2025-26ம் ஆண்டில் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான 1,270 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அரசுத்துறை/நிறுவனங்களிடம் இருந்து காலிப்பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் மேலும் உயர்த்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

    • சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள்.
    • விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும்.

    சென்னை:

    உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி அறிவித்தது.

    இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

    இவர்களுக்கான ஹால்டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1905 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள்.

    விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும். 9 மணிக்கு மேல் வரக்கூடிய தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுதுவார்கள்.

    • தேர்வர்கள் இன்று முதல் (15-ந்தேதி) அடுத்த மாதம் 13-ந்தேதி வரை தேர்வாணைய இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி அன்று நடைபெறும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபாலசுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025-ம் ஆண்டிற்கான ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டவாறு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வர்கள் இன்று முதல் (15-ந்தேதி) அடுத்த மாதம் 13-ந்தேதி வரை தேர்வாணைய இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி அன்று நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யு.பி.ஐ. மூலமாகவும் செலுத்தலாம்.

    தொடர்ச்சியாக 13-வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர் விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு தொகுதி IIA பணிகளின் தேர்வுத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    2018 முதல் 2025 வரை உள்ள 8 ஆண்டுகளில் முதன் முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி II மற்றும் IIA பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு உள்ளது.

    2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். மேலும் அரசுத்துறை, நிறுவனங்களிடம் இருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது.
    • தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

    அந்த வகையில், 2024ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    தொழில்நுட்பக் காரணங்களால் இணையவழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியாததால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    • உதவியாளா்கள் உள்பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்ளன.
    • ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஆய்வு அலுவலா் ஒருவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-2 தேர்வு தொடங்கியது.

    துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 2 பிரிவில் வருகின்றன.

    இதேபோன்று, உதவியாளா்கள் உள்பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்ளன. 2 பிரிவுகளிலும் சோ்த்து மொத்தமாக 2,327 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது.

    இந்த பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதுகின்றனர்.

    ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஆய்வு அலுவலா் ஒருவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 2,763 தோ்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    ×