என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மிட்செல் மார்ஷ், 23 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.
- ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி டிம் ராபின்சன் (106) சதத்தால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் பவர்பிளேயில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ், 23 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.
அடுத்து வந்த ஷாட்ஸ் 29 ரன்னிலும் அலெக்ஸ் ஹேரி 7 ரன்னிலும் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய மார்ஷ் 43 பந்தில் 85 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 3-ந் தேதி நடைபெறும்.
- 2025 ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
- விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர்.
7-வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை ஆகிய 6 மாதங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும்.
மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி, 2025 ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
கடந்த ஜனவரிக்குப் பின் புள்ளியியல் துறை எடுத்த கணக்கீடுப்படி, விலைக்குறியீடானது ஜனவரியில் 56.3 என்று இருந்தது. பிப்ரவரியில் 56.6 என்றும், மார்ச்சில் 57.0 ஆகவும், ஏப்ரலில் 57.6 ஆகவும், மே மாதத்தில் 57.8 ஆகவும் உயர்ந்தது. ஜூனில் இது 58.17 ஆக அதிகரித்து உள்ளது. எனவே இவ்விலைக் குறியீட்டின் அடிப்படையில் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா? என்று செந்தில் பாலாஜி விமர்சித்தார்.
- புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க. ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது. ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதா? 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா? என்று தெரிவித்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் விமர்சனத்திற்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்?. கரூர் துயரம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, EB அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் ஒழுங்கு ADGP ஆகியோர் பிரஸ் மீட் நடத்துகின்றனர், டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார், பொம்மை முதல்வர் வீடியோ வெளியிடுகிறார், வருவாய்ச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர், இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு... இவ்ளோ பதட்டப்பட்டு என்ன சொல்ல வர்றீங்க
மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா?
"அரசியல் செய்யாதீர்" "அரசியல் செய்யாதீர்" என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே?
உங்கள் பதட்டம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்.
அப்புறம், அந்த பத்து ரூபாய்.... இந்தா வர்றோம்...
அஇஅதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எந்த புகார் வந்தாலும் அதற்கு நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்கோ ஒரு இடத்தில் நடந்த, சட்டவிரோத விற்பனை முதல் சந்து விற்பனை வரை அனைத்து புகார்களுக்கும், புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம்.
ஆனால், திமுக ஆட்சியில் நடப்பது என்ன?
Senthil Balaji Model Institutionalised Robbery- நிறுவனமயமாக்கப்பட்டக் கொள்ளை!
தமிழகத்தில் உள்ள எல்லா TASMAC கடைகளிலும், பாட்டிலுக்கு மேல் ரூ.10 முதல் ரூ.40 வரை கணக்கே இல்லாமல் கொள்ளை அடித்து, இப்போது பாட்டில் மேல் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி வசூல் செய்யும் அளவிற்கு பகல் கொள்ளை அடித்துவிட்டு, அதை "Open-ஆகப் பேசுகிறேன்" என்று சொல்லி Justify செய்ய பத்து ரூபாய் பாலாஜிக்கு வெட்கமாக இல்லையா?
இதுவரை 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், "பத்து ரூபாய்" என்று மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் சொன்னாலே, "பாலாஜி" என்று மக்களே சொல்லும் அளவிற்கு, உங்கள் பத்து ரூபாய் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். அப்போது எல்லாம் கள்ள மவுனம் சாதித்த பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியானதும் இதைப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் அரசின் அலட்சியத்தை, Gross Negligence-ஐ மறைக்க முனையும் மடைமாற்ற அரசியல் தானே இது?
ஏற்கனவே "காசு வாங்கினேன்... ஆனா திரும்ப கொடுத்தேன்" ன்னு சொல்லி தான் ED வந்து, உங்களுக்கு நெஞ்சு வலி எல்லாம் வந்து அழுதீங்களே.... இப்போ திரும்ப அதே Tone-ல பேசுறீங்களே... இந்த டைம் CBI வந்தா
செந்தில் பாலாஜி Conditions-ah follow பண்ணுவீங்களா? (உபாயம் அன்பில் மகேஷ்)" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 1,921 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
- திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, NCRB அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும், 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது, நாட்டிலேயே மிக அதிகம். மேலும், வயது முதியவர்களுக்கு எதிராக 2,104 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது.
இது தவிர, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 1,294. தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 1,921 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இவை அனைத்தும் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை மட்டுமே.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை இத்தனை மோசமாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கவும், திமுக ஆட்சி மீது விமர்சனம் வைப்பவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும் மட்டுமே, காவல்துறையைப் பயன்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை, திமுக நிர்வாகிகள் போலப் பயன்படுத்தி, அரசுத் துறைகள் அனைத்தையுமே செயலிழக்கச் செய்து விட்டார்கள். இதன் விளைவுதான், சீரழிந்து போன சட்டம் ஒழுங்கும், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்களும்.
ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை. ஆடிக் கொள்ளுங்கள் இன்னும் ஆறு மாத காலம். உங்கள் அராஜகத்திற்குத் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டிருக்கும். இருப்பினும் சிப்செட் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- 92 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (FoV) உடன் 50MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விவோ V60e ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ V60e ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய மாடலாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், அதன் சில சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது.
அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பின்புறம் இரட்டை கேமரா சென்சார்களை கொண்டிருக்கும். இதில் 200MP பிரைமரி சென்சார், OIS வழங்கப்பட்டுள்ளது. விவோ வி60இ ஸ்மார்ட்போன், AI ஃபெஸ்டிவல் போர்ட்ரெய்ட் என அழைக்கப்படும் இந்தியாவிற்கான பிரத்யேக புகைப்பட அம்சத்தை அறிமுகப்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
விவோ V60e அம்சங்கள்:
விவோ இந்தியா வலைத்தளத்தில் உள்ள ஒரு மைக்ரோசைட் புதிய, விவோ V60e ஸ்மார்ட்போன்: எலைட் பர்பிள் மற்றும் நோபல் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 + IP69 சான்றுகளுடன் வரும். இந்த ஸ்மார்ட்போனில் குறைந்தபட்ச பெசல்களுடன் கூடிய குவாட் கர்வ்டு டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டிருக்கும். இருப்பினும் சிப்செட் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விவோ V60e ஸ்மார்ட்போனில் மூன்று ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று விவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.
கேமராவை பொறுத்தவரை, விவோ V60e ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 92 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (FoV) உடன் 50MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவோ V60e ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரியுடன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகும்.
- கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது என்று டிரம்ப் தெரிவித்தார்.
- டிரம்பின் இந்த கருத்துக்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என்று டிரம்ப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சமயத்தில் கனடா பிரதமர் பதவி விலகல் டிரம்ப் வெளியிட்ட பதிவில், " கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள்.
கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.
இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரிஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும்" என்று பதிவிட்டார்.
டிரம்பின் இந்த கருத்துக்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், நீங்கள் ஏன் அமெரிக்காவுடன் இணையக்கூடாது என்று கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிரம்ப், "அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், Golden Dome எனும் வான் பாதுகாப்பு திட்டம் கனடாவுக்கு இலவசமாகவே கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
- விஜய் தாமதமாக வருவதனால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை?
- அஜித்குமார் லாக்-அப் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய திமுக அரசு, கரூர் வழக்கை ஒப்படைக்கத் தயங்குவது ஏன்?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த சம்பவத்தை விசாரிக்க எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்று கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து விசாரணை நடத்தி ஆறுதல் கூறினர்.
இந்த நிலையயில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கரூர் துயர சம்பவம் தொடர்பாக முதல்வருக்கு 12 கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நேற்று, நமது @BJP4India-வினால் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவுடன் கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடினோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலும் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க இயலவில்லை. முழுமையாகக் கலந்துரையாடி, இந்தப் பிரச்சனையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பிறகு, மனதில் எழுந்த கேள்விகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முன்வைக்க விரும்புகிறேன்.
1. முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்?
2. விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் சிலர் கூறினர். இவற்றைத் தாண்டி கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என்ன?
3. கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள், வேங்கைவயல் விவகாரம், மெரினா விமான சாகச நிகழ்வில் கூட்ட நெரிசல் மரணங்கள், 25 லாக்-அப் மரணங்கள் போன்றவற்றுக்கு எல்லாம் செல்லாத முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூரில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்துவது ஏன்?
4. திமுகவினரின் உணர்ச்சிப்பூர்வ நாடகத்தால் சந்தேகமடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். கூட்ட நெரிசலுக்குப் பிறகு, உண்மையை மறைக்க திமுக அரசு இவ்வளவு அசாதாரண அவசரத்துடன் செயல்பட்டது ஏன்?
5. 25 பேர் மீது வழக்கு பதிந்து, பத்திரிகையாளர் பெலிக்ஸ் உட்பட நான்கு பேரைக் கைது செய்து, மக்கள் மத்தியில் எழும் அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏன் இவ்வளவு விரைவாகத் திமுக அரசு முடக்குகிறது?
6. 10,000 பேர் தான் கூடுவர் என்று தவறாக கணித்ததாக விஜய் மீது குற்றம் சாட்டும் திமுக அரசின் காவல்துறை, கூட்டத்தைச் சரியாக மதிப்பிடாதது ஏன்?
7. விஜய் தாமதமாக வருவதனால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை?
8. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பது உறுதி. உண்மையிலேயே எத்தனை பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்? பெரும் அரசியல் பேரணி நடக்கும் வேளையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரூரில் இல்லாதது ஏன்?
9. இவ்வளவு குறைபாடுகள் அரசுத் தரப்பில் உள்ளன என்பது நிரூபணமான பின்பும், ஏன் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இதில் ஏதேனும் உண்மைகள் புதைந்திருந்தால் அவை அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சமா?
10. அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே, திமுகவின் சட்டம் ஒழுங்கு தோல்வியை மறைக்கும் விதமான கருத்துகளை விசாரணை ஆணையத் தலைவர் வெளியிடுவது ஏன்?
11. விசாரணை நடைபெறும் நிலையில் அது குறித்து பொது அறிக்கைகளை வெளியிட வருவாய் செயலாளருக்கு அதிகாரம் அளித்தது யார்? இது விசாரணையின் நடுநிலைத்தன்மையை சமரசம் செய்யாதா? திறமைமிக்க அரசு அதிகாரிகளைத் திமுகவின் கைப்பாவைகளைப் போல பயன்படுத்துவது சரியா?
12. அஜித்குமார் லாக்-அப் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய திமுக அரசு, கரூர் வழக்கை ஒப்படைக்கத் தயங்குவது ஏன்?
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்த பேரிடரே இத்துயரம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகத் தெரிகிறது. எனவே தான், ஒரு நபர் ஆணையத்தின் மீது எந்த நம்பிக்கையுமின்றி சிபிஐ விசாரணை வேண்டுமெனக் கோருகிறோம். கோரிக்கையைப் பரீசீலிப்பதோடு, தமிழக மக்கள் சார்பாக நான் முன்வைத்த கேள்விகளுக்கும் நீங்கள் பதில் கூறுவீர்கள் என நம்புகிறேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- ஆசிய தொடரில் 314 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் நாயகனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரரான அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய தொடரில் அபிஷேக் சர்மா 45 சராசரியுடன் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 314 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை அவர் தக்கவைத்து கொண்டார்.
சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிராக 61 ரன்கள் எடுத்த போது அவர் 931 புள்ளிகளை பெற்றார். அதன்பிறகு நடந்த இறுதிப்போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால் அவர் 926 புள்ளிகளை பெற்றார். இருப்பினும் அவர் முதல் இடத்தில்தான் தொடர்கிறார்.
இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிக மதிப்பீடு புள்ளிகளை (931) பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் 919 புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் அபிஷேக் சர்மா அதனை முறியடித்துள்ளார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று மத்திய மேற்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா- வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அக்டோபர் 03-ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும்.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
3-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
4-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 5-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 3-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
- நம் சொந்தங்களை இழந்த வேதனை, வருத்தத்தில் இருக்கும் இச்சூழலில் நிகழ்ச்சி ஒத்திவைப்பு.
விஜயின் அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துளளது.
அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் பாண்டிச்சேரி, கடலூரில் நடைபெற இருந்த விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நம் சொந்தங்களை இழந்த வேதனை, வருத்தத்தில் இருக்கும் இச்சூழலில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாயகன் தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்த இட்லி கடை ஊரின் அடையாளமாக இருக்கிறது. ஆனால், தனுஷுக்கு கிராமத்தில் வாழ விருப்பம் இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்கிறார்.
வெளிநாட்டில் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் சத்யராஜ் மகள் ஷாலினி பாண்டேவுக்கும் தனுஷுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தனுஷின் தந்தை ராஜ்கிரனும் தாய் கீதா கைலாசமும் இறக்கிறார்கள். கிராமத்திற்கு திரும்பி வரும் தனுஷ், வெளிநாட்டிற்கு செல்ல மறுக்கிறார். மேலும் ராஜ்கிரண் நடத்தி வந்த இட்லி கடையை நடத்த முடிவு செய்கிறார்.
இவரது இந்த முடிவால், தனுஷ், ஷாலினி பாண்டே திருமணம் நின்று விடுகிறது. இதனால் கோபமடையும் ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய், கிராமத்திற்கு வந்து தனுஷுடன் சண்டை போடுகிறார். அதே சமயம் இட்லி கடைக்கு எதிரே பரோட்டா கடை நடத்தி வரும் சமுத்திரக்கனி தொழில் போட்டியால் தனுஷை ஒழிக்க நினைக்கிறார்.
இறுதியில் தனுஷ் இட்லி கடையை தொடர்ந்து நடத்தினாரா? அருண் விஜய் தனுஷை என்ன செய்தார்? சமுத்திரக்கனியின் திட்டம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பா, அம்மாவை நினைத்து வருந்தும் காட்சியில் கண்கலங்க வைத்து இருக்கிறார். இட்லி கடை எப்படியாவது நடத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், தனுஷுக்கு உறுதுணையாக படம் முழுக்க பயணித்து ஸ்கோர் செய்து இருக்கிறார். இவரது வெகுளித்தனமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அருண் விஜய் மிகவும் கோபக்காரனாகவும், ஈகோ உள்ளவராகவும் கம்பீரத்துடன் நடித்து இருக்கிறார்.
ராஜ்கிரண், சத்யராஜ், கீதா கைலாசம், இளவரசு ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் பார்த்திபன் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சர்ப்ரைஸ் ஆன நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷாலினி பாண்டே அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
இயக்கம்
நடிப்பு மட்டுமில்லாமல் படம் இயக்குவதிலும் தான் சிறந்தவன் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் தனுஷ். உண்மை கதையை கொஞ்சம் சினிமா ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக முதல் பாதியில் அம்மா, அப்பா பற்றி பேசும் காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக அமைந்து இருக்கிறது. வசனங்கள் மற்றும் கன்னுக்குட்டி காட்சிகள் சிறப்பு.
இசை
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்து இருக்கிறது. பின்னணி இசையில் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை மண்மணம் மாறாமல் இருக்கிறது.
தயாரிப்பு
ஆகாஷ் பாஸ்கரன், தனுஷ்
- ஜீவாவின் 45 ஆவது படத்தை 'Falimy' படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ் இயக்குகிறார்.
- ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார்.
ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது ப்ளாக் திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இந்நிலையில், ஜீவாவின் 45 ஆவது படத்தை 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்குகிறார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு 'தலைவர் தம்பி தலைமையில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.






