என் மலர்
நீங்கள் தேடியது "ICC T20 Rankings"
- ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- ஆசிய தொடரில் 314 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் நாயகனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரரான அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய தொடரில் அபிஷேக் சர்மா 45 சராசரியுடன் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 314 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை அவர் தக்கவைத்து கொண்டார்.
சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிராக 61 ரன்கள் எடுத்த போது அவர் 931 புள்ளிகளை பெற்றார். அதன்பிறகு நடந்த இறுதிப்போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால் அவர் 926 புள்ளிகளை பெற்றார். இருப்பினும் அவர் முதல் இடத்தில்தான் தொடர்கிறார்.
இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிக மதிப்பீடு புள்ளிகளை (931) பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் 919 புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் அபிஷேக் சர்மா அதனை முறியடித்துள்ளார்.
- ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
- ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தானுக்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மறுபுறம், தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நியூசிலாந்தின் ஜேக்கப் டபி டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் 23 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்தார்.
பேட்டர் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் சீபர்ட் 20 இடங்கள் முன்னேறி 13-வது இடத்திற்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் ஆலன் 8 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் பின்தங்கி 8-வது இடத்தில் உள்ளார்.
நமீபியாவின் கெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார். டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2-வது இடத்தில் அபிஷேக் சர்மாவும் 4,5-வது இடங்கள் முறையே திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தொடர்கின்றனர்.
டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் அகேல் ஹோசின் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தியும் 6-வது மற்றும் 9-வது இடங்கள் முறையே ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.
- டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார்.
- இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்களான அக்சர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், தனது சிறந்த தரநிலையான 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.
டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றமின்றி அதே வீரர்களே தொடருகின்றனர். ஆனால் 5-வது இடத்தில் இருந்த இந்திய வீரரான ரவி பிஷ்னோயை பின்னுக்கு தள்ளி சக நாட்டவரான அக்சர் படேல் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், நோர்க்கியா ஆகிய இருவரும் 658 புள்ளிகளுடன் உள்ளனர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 5 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி டி20 போட்டிக்கான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்டிங்கில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்ய குமார் யாதவ் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். அவர் 44 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 5 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

புவனேஸ்வர் குமார்
இதேபோல் பந்து வீச்சில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் டாப் 10-ல் இடம் பிடித்தார். அவர் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் நோர்க்கியாவுடன் 7-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் 658 புள்ளிகளுடன் உள்ளனர்.
இந்நிலையில் இன்று ஐசிசி கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டது. இதில் குல்தீப் யாதவ் முதன்முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை நியூசிலாந்து கைப்பற்ற முக்கிய நபர்களில் ஒருவரான மிட்செல் சான்ட்னெர் நான்கு இடங்கள் ஜம்ப் செய்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
இதனால் இன்று வெளியிடப்பட்ட ஐசிசி-யின் டி20 அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் இரண்டு புள்ளிகள் பெற்று 138 புள்ளிகளுடனும், இந்தியா 3 புள்ளிகள் பெற்று 127 புள்ளிகளுடனும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் இரண்டு போட்டியில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் 14 இடங்கள் முன்னேறி குல்தீப் யாதவ் 23-வது இடத்தை பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் முதல் இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 2-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா 7-வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 12-வது இடத்திலும், தவான் 16-வது இடத்திலும், கேஎல் ராகுல் நான்காவது இடத்திலும் உள்ளனர்.






