என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 பேட்டர் தரவரிசை: உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா
- ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- ஆசிய தொடரில் 314 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் நாயகனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரரான அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய தொடரில் அபிஷேக் சர்மா 45 சராசரியுடன் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 314 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை அவர் தக்கவைத்து கொண்டார்.
சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிராக 61 ரன்கள் எடுத்த போது அவர் 931 புள்ளிகளை பெற்றார். அதன்பிறகு நடந்த இறுதிப்போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால் அவர் 926 புள்ளிகளை பெற்றார். இருப்பினும் அவர் முதல் இடத்தில்தான் தொடர்கிறார்.
இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிக மதிப்பீடு புள்ளிகளை (931) பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் 919 புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் அபிஷேக் சர்மா அதனை முறியடித்துள்ளார்.






