என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய மார்ஷ்.. 16 ஓவரிலே இலக்கை எட்டி ஆஸ்திரேலியா வெற்றி
    X

    நியூசிலாந்துக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய மார்ஷ்.. 16 ஓவரிலே இலக்கை எட்டி ஆஸ்திரேலியா வெற்றி

    • மிட்செல் மார்ஷ், 23 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.
    • ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி டிம் ராபின்சன் (106) சதத்தால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் பவர்பிளேயில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ், 23 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.

    அடுத்து வந்த ஷாட்ஸ் 29 ரன்னிலும் அலெக்ஸ் ஹேரி 7 ரன்னிலும் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய மார்ஷ் 43 பந்தில் 85 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 3-ந் தேதி நடைபெறும்.

    Next Story
    ×