என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
    • நம் சொந்தங்களை இழந்த வேதனை, வருத்தத்தில் இருக்கும் இச்சூழலில் நிகழ்ச்சி ஒத்திவைப்பு.

    விஜயின் அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

    மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துளளது.

    அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் பாண்டிச்சேரி, கடலூரில் நடைபெற இருந்த விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    நம் சொந்தங்களை இழந்த வேதனை, வருத்தத்தில் இருக்கும் இச்சூழலில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிப்பு மட்டுமில்லாமல் படம் இயக்குவதிலும் தான் சிறந்தவன் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் தனுஷ்.

    நாயகன் தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்த இட்லி கடை ஊரின் அடையாளமாக இருக்கிறது. ஆனால், தனுஷுக்கு கிராமத்தில் வாழ விருப்பம் இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்கிறார்.

    வெளிநாட்டில் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் சத்யராஜ் மகள் ஷாலினி பாண்டேவுக்கும் தனுஷுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தனுஷின் தந்தை ராஜ்கிரனும் தாய் கீதா கைலாசமும் இறக்கிறார்கள். கிராமத்திற்கு திரும்பி வரும் தனுஷ், வெளிநாட்டிற்கு செல்ல மறுக்கிறார். மேலும் ராஜ்கிரண் நடத்தி வந்த இட்லி கடையை நடத்த முடிவு செய்கிறார்.

    இவரது இந்த முடிவால், தனுஷ், ஷாலினி பாண்டே திருமணம் நின்று விடுகிறது. இதனால் கோபமடையும் ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய், கிராமத்திற்கு வந்து தனுஷுடன் சண்டை போடுகிறார். அதே சமயம் இட்லி கடைக்கு எதிரே பரோட்டா கடை நடத்தி வரும் சமுத்திரக்கனி தொழில் போட்டியால் தனுஷை ஒழிக்க நினைக்கிறார்.

    இறுதியில் தனுஷ் இட்லி கடையை தொடர்ந்து நடத்தினாரா? அருண் விஜய் தனுஷை என்ன செய்தார்? சமுத்திரக்கனியின் திட்டம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பா, அம்மாவை நினைத்து வருந்தும் காட்சியில் கண்கலங்க வைத்து இருக்கிறார். இட்லி கடை எப்படியாவது நடத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், தனுஷுக்கு உறுதுணையாக படம் முழுக்க பயணித்து ஸ்கோர் செய்து இருக்கிறார். இவரது வெகுளித்தனமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அருண் விஜய் மிகவும் கோபக்காரனாகவும், ஈகோ உள்ளவராகவும் கம்பீரத்துடன் நடித்து இருக்கிறார்.

    ராஜ்கிரண், சத்யராஜ், கீதா கைலாசம், இளவரசு ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் பார்த்திபன் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சர்ப்ரைஸ் ஆன நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷாலினி பாண்டே அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

    இயக்கம்

    நடிப்பு மட்டுமில்லாமல் படம் இயக்குவதிலும் தான் சிறந்தவன் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் தனுஷ். உண்மை கதையை கொஞ்சம் சினிமா ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக முதல் பாதியில் அம்மா, அப்பா பற்றி பேசும் காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக அமைந்து இருக்கிறது. வசனங்கள் மற்றும் கன்னுக்குட்டி காட்சிகள் சிறப்பு.

    இசை

    ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்து இருக்கிறது. பின்னணி இசையில் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை மண்மணம் மாறாமல் இருக்கிறது.

    தயாரிப்பு

    ஆகாஷ் பாஸ்கரன், தனுஷ்

    • ஜீவாவின் 45 ஆவது படத்தை 'Falimy' படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ் இயக்குகிறார்.
    • ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார்.

    ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது ப்ளாக் திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.

    இந்நிலையில், ஜீவாவின் 45 ஆவது படத்தை 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்குகிறார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார்.

    இப்படத்திற்கு 'தலைவர் தம்பி தலைமையில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கார்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த தகவலை உறுதி செய்து கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கார்கே இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நிலையாகவும் நலமுடனும் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

    • இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • திருமணம் தொடர்பான திட்டங்கள் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

    ஹாலிவுட் சினிமாவில் டாம் குரூஸ், நடிகை அனா டி அர்மாஸுடன் காதல் என சில நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக இருவரும் எதுவும் கூறாத நிலையில், இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த ஜோடி இன்னும் திருமண நிச்சயதார்த்தம் செய்யவில்லை. இருப்பினும் திருமணம் தொடர்பான திட்டங்கள் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில், டாம்- அனா டி அர்மாஸ் திருமணம் விண்வெளியில் நடைபெற உள்ளது. இதனால் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் முதல் ஜோடி இவர்கள் தான் என்கின்றனர்.

    63 வயதான டாம் குரூஸ் ஏற்கனவே மூன்று திருமணங்களை செய்து உள்ள நிலையில், தற்போது 37 வயதான அனா டி அர்மாஸை நான்காவதாக திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன.
    • 40 சுங்கச்சாவடிகளில் கடந்த மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது.

    சுங்கச்சாவடி கட்டணம் என்பது, நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் ஆகும். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிர்ணயிக்கும் இந்த கட்டணங்கள், ஆண்டுதோறும் வாகனங்களின் வகையைப் பொறுத்து உயர்த்தப்படுகின்றன.

    தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.

    சென்னையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் கடந்த மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே சூரப்பட்டில் இன்று முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

    * கார், வேன், ஜீப்பிற்கு மாற்றமின்றி ரூ.75 ஆக தொடரும்.

    * கார், வேன், ஜீப்பிற்கு ரிட்டர்ன் கட்டணம் ரூ.115-லிருந்து ரூ. 110 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    * பேருந்து, லாரிகளுக்கான கட்டணம் ரூ.255-லிருந்து ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    • குடிபோதையில் இருந்த ரிஷி வரமறுத்து அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
    • கேமராவில் பதிவான காட்சியில் உணவு டெலிவரி பார்ட்னரும் உள்ளார்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு அருந்தும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. இதனால் வேலையில்லாமலும், பகுதி நேரமாக பணிபுரிய விரும்பும் பலருக்கு ஆன்லைன் உணவு டெலிவரி வேலை பயனுள்ளதாக உள்ளது.

    இதுவே சில நேரங்களில் உணவு டெலிவரி செய்பவருக்கும், ஆர்டர் செய்பவருக்கும் தொந்தரவாகவே அமைந்துள்ளது. பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் சாலைகளில் வேகமாக செல்லும் போது விபத்துகளிலும் சிக்குகிறார்கள். மேலும் டெலிவரி செய்த உணவுக்கு உரிய பணம் கிடைக்காமலும் ஊழியர்கள் சிரமம் படுகிறார்கள். அதுபோல் ஒரு சம்பவம் ஒன்றுதான் டெல்லியில் நடந்துள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...

    டெல்லியின் நரேலாவில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் ஒருவர் டெலிவரி செய்யப்பட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசியும் உள்ளார். இதனால் செய்வதறியாது இருந்த உணவு டெலிவரி பார்ட்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்தபோது அவர் குடிபோதையில் இருந்ததை தொடர்ந்து அவரை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். ஆனால் குடிபோதையில் இருந்த ரிஷி வரமறுத்து அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

    இதனால் ரிஷியை போலீசார் வலுக்கட்டாயாக வீட்டில் இருந்து அழைத்து செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் கேமராவில் பதிவான காட்சியில் உணவு டெலிவரி பார்ட்னரும் உள்ளார்.

    காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ரிஷி, உணவு டெலிவரி பார்ட்னருக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து அவருக்கு போலீசார் உரிய அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    உணவு டெலிவரி பார்ட்னருக்கு நிறைய ஆர்டர்கள் இருந்ததால் அவர் புகார் அளிக்காததால் ரிஷியை போலீசார் விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அ.தி.மு.க. ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதா?

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

    * ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதா?

    * 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா? என்று அவர் விமர்சனம் செய்தார்.

    • தவறு நடந்தால் எந்த இயக்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
    • விஜய் நடத்திய எல்லா கூட்டங்களிலும் தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * த.வெ.க. தலைவர் விஜயுடன் வந்தவர்களும் கூட்டத்திற்குள் வந்ததே நெரிசலுக்கு காரணம்.

    * சம்பவம் நடந்தபோது நான் கட்சி அலுவலகத்தில் தான் இருந்தேன்.

    * நடந்த துயரத்திற்கு பொறுப்பேற்காமல் அரசு மீது மடைமாற்றி விடுகின்றனர்.

    * தவறு நடந்தால் எந்த இயக்கமும் பொறுப்பேற்க வேண்டும்.

    * உண்மை கண்டறியும் குழு மணிப்பூர் சென்றிருந்தால் ஏற்புடையதாக இருக்கும்.

    * கட்சி அலுவலகத்தில் இருந்து அமராவதி மருத்துவமனை அருகில் தான் உள்ளது.

    * விஜய் நடத்திய எல்லா கூட்டங்களிலும் தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.

    * விஜய் பேச ஆரம்பித்தன 6-வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டுள்ளது.

    * கூட்டத்திற்கு 3 மணிக்கு அனுமதி பெற்று விட்டு 12 மணிக்கு உரையாற்றுவதாக அறிவித்தது ஏன்?

    * த.வெ.க. தலைவர் விஜய் கட்டுக்கடங்காத கூட்டத்திற்குள் பேருந்தில் சென்றது ஏன்?

    * கூட்டத்திற்கு வரும்போது திடீரென த.வெ.க. தலைவர் பேருந்துக்குள் சென்றது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது.
    • இந்த படத்தை மணி ரத்னம் இயக்கி உள்ளார்.

    கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை மணி ரத்னம் இயக்கினார். படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

    இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா அறிமுகமானார். மேலும் ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ்நாட்டில் 214 நாட்கள் ஓடியது.

    இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'நாயகன்' திரைப்படத்தை வரும் நவம்பர் 6-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    • நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.
    • பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார். நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.

    இதனை தொடர்ந்து நடிகர் மம்மூட்டி தனது ஃபேஸ்புக் பதிவில், "சிறிய இடைவெளிக்குப் பிறகு, நான் என் வாழ்க்கையில் மிகவும் விரும்பியதைச் செய்யத் திரும்பியுள்ளேன். கேமரா அழைக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு MMMN என்று தெரிவித்துள்ள படக்குழு டீசர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, மகேஷ் நாராயணன் ஆகியோரின் பெயரின் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தைக் கொண்டு படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மம்மூட்டி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 



    • ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.
    • நாமக்கல்லில் இருந்து விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்ட நெரிசல் காரணமாக த.வெ.க. தொண்டர்கள் ஜெனரேட்டர் அறைக்கு சென்றனர்.

    * தொண்டர்கள் சென்ற காரணத்தால் ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது.

    * ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.

    * கூட்டம் நடக்கும் 500மீ முன்னர் விஜய் பேருந்தின் உள்ளே சென்றது ஏன்?

    * விஜயின் கவனத்தை ஈர்க்க அந்த கட்சி தொண்டர்களே செருப்பை எறிந்திருக்கலாம்.

    * அரசியல் தலைவர்கள் முன்சீட்டில் அமர்ந்து கை காட்டுவது வழக்கம்.

    * விஜய் பிரசார பகுதிக்கு வந்ததும் வாகனத்தின் முன்பகுதி லைட் அணைக்கப்பட்டது.

    * எல்லா நாளும் வாகனம் ஓட்டும் எனக்கு இன்று மட்டும் விபத்து ஏன் ஏற்பட்டது என்பது போல் உள்ளது.

    * தண்ணீர் கேட்டபோது கடைகள் பூட்டியிருந்ததால் தி.மு.க.வினர் கைவசம் இருந்த பாட்டில்களை கொடுத்தோம்.

    * காவல்துறையினர் அறிவுரையை த.வெ.க.வினர் கேட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.

    * நாமக்கல்லில் இருந்து விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.

    * த.வெ.க. கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த எந்த ஆம்புலன்ஸ்களும் செல்லவில்லை.

    * கூட்டநெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு த.வெ.க.வினர் உதவ முன்வரவில்லை.

    * த.வெ.க. கூட்டத்திற்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டமல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×