என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுக்கு பணம் கொடுக்க மறுத்த மதுப்பிரியர் - போலீஸ் செய்த செயல்
    X

    ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுக்கு பணம் கொடுக்க மறுத்த மதுப்பிரியர் - போலீஸ் செய்த செயல்

    • குடிபோதையில் இருந்த ரிஷி வரமறுத்து அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
    • கேமராவில் பதிவான காட்சியில் உணவு டெலிவரி பார்ட்னரும் உள்ளார்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு அருந்தும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. இதனால் வேலையில்லாமலும், பகுதி நேரமாக பணிபுரிய விரும்பும் பலருக்கு ஆன்லைன் உணவு டெலிவரி வேலை பயனுள்ளதாக உள்ளது.

    இதுவே சில நேரங்களில் உணவு டெலிவரி செய்பவருக்கும், ஆர்டர் செய்பவருக்கும் தொந்தரவாகவே அமைந்துள்ளது. பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் சாலைகளில் வேகமாக செல்லும் போது விபத்துகளிலும் சிக்குகிறார்கள். மேலும் டெலிவரி செய்த உணவுக்கு உரிய பணம் கிடைக்காமலும் ஊழியர்கள் சிரமம் படுகிறார்கள். அதுபோல் ஒரு சம்பவம் ஒன்றுதான் டெல்லியில் நடந்துள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...

    டெல்லியின் நரேலாவில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் ஒருவர் டெலிவரி செய்யப்பட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசியும் உள்ளார். இதனால் செய்வதறியாது இருந்த உணவு டெலிவரி பார்ட்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்தபோது அவர் குடிபோதையில் இருந்ததை தொடர்ந்து அவரை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். ஆனால் குடிபோதையில் இருந்த ரிஷி வரமறுத்து அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

    இதனால் ரிஷியை போலீசார் வலுக்கட்டாயாக வீட்டில் இருந்து அழைத்து செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் கேமராவில் பதிவான காட்சியில் உணவு டெலிவரி பார்ட்னரும் உள்ளார்.

    காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ரிஷி, உணவு டெலிவரி பார்ட்னருக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து அவருக்கு போலீசார் உரிய அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    உணவு டெலிவரி பார்ட்னருக்கு நிறைய ஆர்டர்கள் இருந்ததால் அவர் புகார் அளிக்காததால் ரிஷியை போலீசார் விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×